இப்பொ உங்களுக்கு அதிகமான சொத்து இருக்குங்க!!! சம்பாதிக்கணும்னு அவசியமே இல்ல அப்படின்னா நீங்க என்ன செய்வீங்க அப்படின்னு நிலானு ஒருத்தங்க பதிவு பொட்ருந்தாங்க. இந்தா இருக்கு
சுட்டி.நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?? ஒரு நல்ல கம்பேனி கம்ப்யூட்டர் வாங்கி எங்க ஊர் பக்கத்தில உள்ள கிராமதுகெல்லாம், போய் கிளாஸ் எடுப்பேன். நமக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு சொல்லி குடுக்குற மாதிரி சுகம் வேற கிடையாது.
வேற நல்ல நல்ல புத்தகமா வாங்கி போட்றது, 10த் படிக்குற பசங்ககிட்டயே உயர்கல்விக்கான சாய்ஸ் பத்தி சொல்றது. குரூப் டிஸ்கஷனுக்கு 12த் பசங்கள தயார் பண்றதுன்னு.
இன்னொரு முக்கியமான விஷயம், நான் கையில காசு இல்லாதப்போ தான் இப்படி எல்லாம் பேசுவேன். கைல காசு வந்துட்டா அவ்ளொதான். நம்ம ரேஞ்சே வேற.
நான் பிரவுசிங் சென்டர்ல வேல பார்க்கும் போது ஒரு பய வருவான். நடமாடும் நகைக்கடை. ஒரு பையன் அவ்ளொ நகை போட்டு நான் அவனத்தான் பார்த்திருக்கென்.
அவன்கிட்ட நான் போ
ன தடவை அட்ச்சய திருதியயை வந்தப்போ நான் கேட்டேன், "என்ன மாப்பு, இந்த தடவை நகை வாங்கி எங்க போட்டுக்க போற??"
"ஏன் தலைவா! இன்னைக்கு என்ன??"
"இன்னைக்கு தான்மா, அட்ச்சய திருதியயை என்ன வாங்குரியோ அது பெருகுமாமே, இன்னைக்கு எது செஞ்சாலும் வாழ்க்கை முழுக்க பண்ணுவ" அப்டின்னேன்.
"அப்படின்னா, ஒரு பிச்சைகாரன பார்த்து ஒரு பத்து ரூவா குடுக்க போறேன். என்ன செய்ய சொல்றீங்க தலைவா! நமக்கு இந்த குடுக்குற எண்ணம் வரவே மாட்டேங்குது." அப்படின்னான்.
அது மாதிரி தான் எல்லாருக்கும். ஏழையா இருக்கும் போது தான் மனிதாபிமானம், எல்லாம் இருக்கும். கொஞ்சம் காசு வந்தாலும் நம்ம மைண்ட் செட் மாறும்.
இந்த அட்ச்சய திருதியயைக்கு நம்ம ஆளுக்கு ஒரு சுடிதார் மெட்டீரியல் அப்புறம் ஒரு தங்க காசு வாங்கலாம்னு இருக்கேன். இன்ஷா அல்லாஹ்!!
இந்த வியாபாரிகள எவ்வளவு பாரட்டினாலும் தகும்ணே! தங்க விலை ஏரும் போதெல்லாம் அட்ச்சய திருதியயை வருது. பாவம் புருஷன் மார்கள்.
அப்பால வாரேன்.
ஏப்ரல் 30 அட்ச்சய திருதியயை.