html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: April 2006

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, April 30, 2006

 

பெண்ணாசை பொல்லாதது : பாகம் 2

போன தடவை நான் ஆப்பிள் வித்த கதையை சொல்லி இருந்தேன். படிக்காதவங்க இந்த சுட்டிய பாருங்க...
இந்த தடவை அவசரப்பட்டு நாங்க மாட்டிகிட்ட கதை சொல்ல போறேன்.
எங்களுக்கு லட்சுமணானு ஒரு ஃப்ரெண்ட் உண்டு. அவரோட அக்காவுக்கு கல்யாணம்னு நாங்க நண்பர்கள் எல்லாரும் கிளம்பி சங்கரன்கோவில் போனோம். எங்க செட்ல குமார்னு ஒரு பையன் உண்டு. நல்ல உயரம், கலர்னு அவந்தான் எங்க செட்ல ஹீரோ. ஆனா அவன் டேஸ்ட் சரி கிடையாது. அப்போ நாங்க ஊர்ல மெஸ் வெச்சிருந்தோம். அதனால எங்க அண்ணன தவிர நான், பாலா, ஐயப்பா, குமார் எல்லாரும் கிளம்பி போனோம். கல்யாணம் நல்லபடியா நடந்தது..
அங்க தான் ரேவதினு ஒரு பொண்ண பார்த்து பேசி இருக்கான். அவன் எப்பவுமே அப்படித்தான். எந்த பொண்ணயும் விட மாட்டான். அதனால பரவாயில்லனு நான் சும்ம இருந்திட்டேன். ஆனா மத்த நண்பர்கள் அப்படி விடல. இந்த குமார் பய என்ன பண்ணியிருக்கான், அவன் நம்பர மட்டும் குடுத்துட்டு வந்திருக்கான். நம்ம பசங்க சும்ம இருப்பாங்களா??? ஒரு ஞாயித்துகிழமை எங்க மெஸ்க்கு வந்து அங்க இருந்த் அந்த பொண்ணுக்கு கால் பண்ணி
"ஹலோ! யாரு ரேவதியா?? என்னம்மா இப்படி பண்ணிட்ட? நீ பாட்டுக்கு குமாருக்கு ஃபோன் பண்ணிட்ட. அதனால அவனுக்கு ரொம்ப ப்ராப்ளம். ஸோ நீ என்ன பண்ணு இனிமே இந்த நம்பருக்கு கால் பண்ணு. பிரசன்னானு ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட மெட்டர சொன்னா அவன் குமார் கிட்ட சொல்லிடுவான்" அப்படின்னு சொல்லிட்டாங்க
இதுல என்ன மேட்டர்னா, இப்பொ குமார்க்கு கால் போகாது. அப்படி அவன்கிட்ட இந்த பொண்ணு என்ன சொன்னாலும் அது எங்க மூலமாதான் அவனுக்கு போகணும். இதனால எங்களுக்கு தெரியாம அவன் எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி நல்ல எண்ணம் படைத்த நண்பர்கள் யாருக்காவது கிடைப்பாங்களா???
நான் இத பெருசா கண்டுக்கல, ஏன்னா அந்த பொண்ணு அவ்வளவு விசேஷமா இருக்க மாட்டா. அடுத்த நாள் நான் காலேஜ் லீவ் போட வேண்டிய சூழ் நிலை. மத்தியானம் ஒரு 3 மணி இருக்கும். சாப்பாடு எல்லாம் முடிஞ்ச பிறகு, ரொம்ப அசதியா இருக்குன்னு நான் கொஞ்சம் படுத்துகிட்டேன். அப்போ சரியா வந்தது ஒரு கால். பேசினது ஒரு பொண்ணு; அய்யோ அய்யோ குரல்னா அதுதான் குரல். சும்மா சுஜாதா, ஜானகி எல்லாம் பிச்சை வாங்கணும். அப்படி ஒரு அருமையான குரல்.
"ஹலோ பிரசன்னாவா?? என் பேரு ஹெல்மினா. நான் ரேவதியோட ஃபிரண்ட். கொஞ்ச நேரம் உங்க கூட பேச முடியுமா??"
என்னால சத்தியமா நம்ப முடியல. நாமளா போய் பேசினா கூட ஒரு பொண்ணும் நம்ம கிட்ட பேசினதில்லை.இப்போ இப்படி ஒரு குரல் உள்ள பொண்ணா?? நம்ம கிட்ட பேசுதா??
"பேசலாமே!!" இது நான்.
அந்த கொஞ்ச நேரம் சாயந்திரம் 5.30 வரைக்கும் போச்சு. அப்பவே எங்க அப்பா ஒரு மாதிரி பார்த்தார். அவள பத்தி எல்லாம் சொல்லிட்டா. திருப்பி ராத்திரி ஏழு மணிக்கு திரும்ப கால் பண்ணி என்ன மறந்துட்டீங்களானு கேக்குறா. இப்படி ஒரு மாதிரி போச்சு அந்த பழக்கம்.
இந்த மேட்ட்ர் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சு போச்சு. எல்லாம் பயங்கர ரவுசு. "ஏண்டா, குமார் பிரச்சினை பண்றான்னு உன் நம்பர் குடுத்தா, நீ பிக் அப் பண்றியா??"னு. சரி எதுக்கு ஃபோன்லயே பேசிகிட்டுனு நான் நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டேன்.அவளும் சரி அப்படின்னு சொல்லி " நான் பச்ச கலர் சுடி போட்டு, அரசன் ஐஸ்க்ரீம் பார்லர் பக்கத்துல நிப்பேன். நான் கைல வெச்சிருக்குற பைல "5"னு எழுதி இருக்கும்னு சொன்னா.
நானும் அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி 150 ரூவா வாங்கிகிட்டு, மறு நாள் அங்க போனா, அங்க நின்னா பாருங்க அந்த பீப்பா... வாழ்கையே வெறுத்துடுச்சுங்க. அவ அப்படியே சத்தியராஜ் மாதிரி கை எல்லாம் ஒரே முடி. எப்படி பக்கத்துல உக்காந்து பேச முடியும். எனக்கே இவ்வளவு ஷாக்னா அவள பத்தி கேக்கவே தேவை இல்ல.சுத்தமா அப்செட்.சரி வானு அவள கூப்டு போய் ஒரு கரும்புச்சாறு வாங்கி குடுத்து அனுப்பிட்டேன்.
கிளம்பும்போது " நாளைக்கு காலைல 9.30 மணிக்கு எங்க வீட்டுக்கு வரீங்களா??" அப்டின்னு கேட்டா.
"முடிஞ்சா பார்க்கலாம்"னு சொல்லிட்டேன்.
பசங்ககிட்ட இந்த மேட்டர் பத்தி பேசி ஒரு மணி நேரம் அழுதேன். பாலா எந்திரிச்சான், " நீ சொல்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது. நீ மட்டும் என்சாய் பண்ணலாம்னு நினைக்குற! நாளைக்கு காலைல நம்ம போறோம்!"
அப்படின்னு சொல்லிட்டான். நான் தான் விடாக்கண்டனுக்கு கொடாகண்டன் ஆச்சே. அடுத்த நாள் காலைல நான் கிளம்பி எங்க சித்தி வீட்டுக்கு போய்ட்டேன். பசங்க கிளம்பி நேரா எங்க சித்தி வீட்டுக்கே வந்துட்டாங்க. அப்போ மணி பத்து. குருப்ல ஒருத்தம் புதுசா இருந்தான்.
"சார் யாரு?? பார்த்ததே இல்ல, உன் கூட்டாளியா?"
"இவன் பேர் பெருமாள். ஊரு மூளிகுளம், கொத்து வேலைக்கு போறாப்ல.புள்ளய பார்க்க போறோம்னு கூப்டு வந்தேன்."
அடப்பாவி!! சரி போகலாம். அவங்க ஏரியாக்கு போகும்போது மணி சரியா பதினொண்ணு. அங்க ஒரு பூத்ல இருந்து கால் பண்ணி நாங்க வந்தத சொன்னோம். நான் வந்து கூப்டு போறேன்னு சொல்லி வெச்சிட்டா. பாலா ஸ்டைலா ஒரு மரத்துலா சாய்ஞ்சுகிட்டு வெயிட்டிங். அந்த பொண்ணு தூரத்துல வந்த போதே நான் பார்த்துட்டேன்.
"வாடா! போகலாம்"
"இரு! ஹெல்மினா வரட்டும்"
"இவதாண்டா ஹெல்மினா!"
"என்னது??"
"இதுக்குதான் நான் நேத்திக்கே தல தலயா அடிச்சுகிட்டேன். நீதான் கேக்கல."
"மன்னிச்சிடுடா"
அதுக்குள்ள அந்த போண்ணு, "உங்களுக்காக எவ்ளொ நேரம் காத்துகிட்டு இருக்கிறது, வாங்க என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் உங்கள பார்க்க வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க"
இவதான் இப்படின்னு பார்த்தா, அவ ஃப்ரண்ட்ஸ், அப்பப்பா, என்ன அழகு! காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் சொல்லுவார்ல 'ஒரு கண்ணுள்ள பொண்ணு' அத நான் அன்னைக்கு தான் பார்த்தேன். ஒண்ற கண்ணெல்லாம் கிடையாது. இந்த பக்கம் அரை, அந்த பக்கம் அரை. மொத்தம் ஒரு கண்ணு.
அவ என்ன பார்த்துக்கிட்டே பாலா கிட்ட பேசுறா செம டாலண்ட்.
மெயின் மேட்டரே இப்பொ தான் ஆரம்பிக்குது.
அவங்க அப்பா சர்ச்க்கு போற நேரமா எங்கள வர சொல்லி இருக்கா. நாங்க வழக்கம் போல ரெண்டு மணி நேரம் லேட். அதுல அவங்க டாடி வந்த உடனே, இரக்கமே இல்லாம "உங்கள பார்க்கத்தான் வந்திருகாங்க டாடி" அப்படின்னு சொல்லிட்டா.
அப்புறம் என்ன எம்.எல்.எம். அப்படி இப்படினு சொல்லி தப்பிச்சு வர்றதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
அதனால தான் சொல்றேன். பெண்ணாசை பொல்லாதது.

Saturday, April 29, 2006

 

காதல் - பாகம் 2.

அந்த ரங்கசாமிய நான் அடுத்த நாள் அதாவது நேத்திக்கு கூழ் கடைல வெச்சு பார்தேன். பய யான செவப்பு. சரி பய என்னதான் சொல்றான் பார்போமேன்னு கூழ் கடைல கம்னு நின்னுகிட்ருந்தேன்.
கூழ் கடைல வந்து ரொம்ப பவ்யமா விசாரிச்சு, பைய வாங்கிட்டு கிளம்பினான். செமயா பச்ச கலர்ல கருப்பு டிசைன் போட்ட சட்ட, மோசமான நிலமைல ஒரு ஜீன், பயபுள்ள தலய வேற கலர் அடிச்சு விட்ருந்தான். நான் எதிர்பார்த்ததுக்கு கொஞ்சம் கூட மாறுபாடில்லை.
கூட சரியா இவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். பெருசா ஒரு வித்தியாசமும் இல்லை. அவன் பச்ச சட்ட, இவன் மஞ்சள் அவ்ளோதான். முதல்ல ஞாபகமா அந்த லெட்டர் இருக்கான்னு பார்த்தான். அப்புறம் அந்த லெட்டர எடுத்து அவன் நண்பன் கிட்ட குடுத்து படிக்க சொன்னான். அப்போவே அவன ரெண்டு எளக்கு விடணும்னு தோணிச்சு, ஆனா கிராமத்து பையன் இல்லயா, கை எல்லாம் நல்ல கிண்ணுனு இருந்தது. அதனால வன்முறை எண்ணத்த கை விட்டேன்.
சரி எங்கதான் போறாங்கன்னு பார்க்கலாம்னு நாங்க சைக்கிள் ஸ்டார்ட் பண்ணோம். (கூட்டாளிகளோட தான் போனேன்). அவன் நேரா ஒரு பி.சி.ஓகு போனான். அங்கதான் அந்த போண்ணு வேலை பார்க்குது போல இருக்கு. இவன பார்த்ததும் வெளில வந்தது, வாயில பெரிய ரணம் மாதிரி இருந்தது. டாக்டர் கிட்ட போகல போல இருக்கு. அப்பவும் அந்த பையன் அதப் பத்தி ஒரு வார்த்தை கூடக் கேக்கல, அவன் பாட்டுக்கு தன் கூட வந்த நண்பன காட்டி எதோ சொல்லிகிட்ருந்தான்.
கொஞ்சம் கிட்டப் போய், "இங்க செல்வி யாருங்க??"னு கேட்டேன். அந்த பையன் அவ்ளொதான் அந்த பொண்ண பார்வைலயே எரிச்சுட்டான். அந்த பொண்ணு பயந்து போய்
" நான் தான் அண்ணா! ஆனா நீங்க யாருன்னு தெரியலியே"
" இவந்தான் ரங்கசாமியா??"
பய உள்ள எண்ட்ரி
" ஹலோ! கொஞ்சம் மரியாதையா பேசுங்க"
" சரிங்க மரியாதைக்குரிய நண்பா! நீயெல்லாம் ஆம்பிளயாடா, பொண்ணுகிட்ட காசு வாங்கிட்டு டூர் போயிருக்க??"
" அதெப்படி உனக்கு தெரியும்?? அப்படினாலும் அது என் விஷயம்! அதப்பத்தி உனக்கென்ன?
" சரிடா, இந்த பொண்ணு பல் ஏன் உடைஞ்சிருக்கு??"
"இந்த மூதேவிக்கு என்ன ஆனாலும் நான் தான் பொறுப்பா?"
"ஆமாடா! அப்படி சொல்லிதான லவ் பண்ண?"
இப்படி பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த பொண்ணு, "எதுக்கு இப்படி தேவை இல்லாம வம்பு பண்றீங்க, போங்க தூர" அப்படினு கத்த ஆரம்பிச்சிடுச்சு.
அதுக்கு அந்த பையன் "ஏண்டி!! ஆளையும் வெச்சு பேசிட்டு, இப்பொ என்ன நல்லவ மாதிரி பேசுற?? இனி நீயும் வேணாம் உன் சங்காப்த்தமும் வேணாம். நீ நல்லாயிரு(!)" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டான்.
அவ்ளோதான், அந்த பொண்ணு 'ஓ'னு அழ ஆரம்பிச்சிடுச்சு, "என்ன பிரச்சினைனாலும் நான் பேசி இருப்பேன்ல, உங்கள யாரு மூக்க நுழைக்க சொன்னா?? இப்பொ பாருங்க என்ன ஆச்சின்னு. அவரு என்கிட்ட திரும்பி வரமாட்டார்!"
" இல்லம்மா! இன்னைக்கு அவன் நீ குடுத்த 5000 க்கு என்ன பதில் சொல்லனு வந்து நின்னி அதுக்காக சண்டை போட்டு போறான்.காசு தேவைப்படும் போது கண்டிப்பா வருவான். அப்போவாவது நீ அவன பத்தியும், என்ன பத்தியும் புரிஞ்சுக்கோ"
"அதெல்லாம் எனக்கு தெரியும், நீங்க போகலாம்!"
திரும்பி பார்க்க கூட முடியாம வந்துட்டோம். அந்த பையன் தன்ன எப்படி பயன்படுதிக்கிறான்னு தெரிஞ்சும், எமோஷனல் பிளாக்மெயில் பண்றான்னு தெரிஞ்சும் இந்த பொண்ணு இப்படி ஏமாறுதே!!
என்க்கு ஏற்பட்ட தோல்வி தான் இந்த பதிவை இன்னைக்கு சொல்ல சொன்னது. அந்த பையன் குடுத்து வெச்சவன். இந்த பொண்ணு பாவம் பண்ணவ..
புரிஞ்சுகிட்டு திருந்தினா பரவாயில்ல. விவேக் ஒரு படத்துல சொல்லுவார் "இந்த பொண்ணுங்களே இப்படித்தான். ஊர்ல யார் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, இவங்களயா பாத்து லவ் பண்ணுவ்வளுக! நம்மள த்ராட்ல விட்றுவாளுக"னு. எவ்வளவு நிஜம். இப்படி இத பத்தி யோசிக்கும் போது தான் பிரேமலதா அவங்க ஒரு மேட்டர் குடுத்திருந்தாங்க!! இதோ சுட்டி.
என்ன ஒரு கோ இன்ஸிடென்ஸ்.அடுத்ததும் பாகம் 2 தான். ஆனா வேற பதிவு. பெண்ணாசை பொல்லாதது.

Thursday, April 27, 2006

 

காதல்!!!!

விஜய் நடிச்ச ஷாஜஹான் படம் பாத்திருகீங்களா? அதுல ஒரு காரெக்டர் "காதல், ஹும் காதல்" அப்படின்னு தலைல அடிச்சிட்டு போவார். அதே மாதிரி ஒரு மேட்டர் இன்னைக்கு எனக்கு நடந்தது.
பாம்பே தியேட்டர்ல திருட்டு பயலே படம் பார்த்திட்டு திரும்பி வந்துகிட்டு இருந்தோம். எனக்கும் சரி என் நண்பர்களுக்கும் சரி கூழ் குடிக்க ரொம்ப பிடிக்கும். அப்பொ எங்களுக்கு முன்னடி கூழ் குடிச்சிட்டு போன பய அவன் பைய வெச்சிட்டு போய்ட்டான்.
கூழ் கடைல உள்ள பையன், "அண்ணே! செவப்பு சட்ட போட்டு போறாரு. சைக்கிள்ல போகும் போது குடுத்திருங்க! இன்னும் ரோடு முக்குக்கு கூட போயிருக்க மாட்டார்"ன்னான். பாலா கூட சொன்னான் நமக்கு ஏண்டா வம்புன்னு நான் கொழுப்பெடுத்து போய் வாங்கினேன்.
துரத்தி போய் பிடிச்சிடலாம்னு நினைக்கும் போது, வந்த ஒரு பஸ்ஸ கை காமிச்சு நிப்பாட்டி ஏறி போய்ட்டார் நம்ம பார்ட்டி. சரி திரும்ப வெயில்ல கொண்டு போய் திரும்ப கடைல குடுக்க சோம்பேறித்தனமா இருந்தது. வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன். சரி பைய நோண்டுனா எதாவது மேட்டர் கிடைக்குமான்னு பார்த்தேன்.
ரெண்டு நோட் புக், ஒரு நாத்தம் பிடிச்ச டிபன் பாக்ஸ், இத தவிர வேற ஒண்ணும் இல்ல. பையன் பேரு ரங்கசாமி, ஊர் தருவை இது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. காலேஜ் மேல என்ன கோவமோ? காலேஜ் பேரும் இல்ல. சரி விடுடா நாளைக்கு கடைல குடுக்கலாம்னு நினைச்சப்போ தான், அந்த லெட்டர பார்த்தேன்.
அந்த லெட்டர நான் இப்பொ உங்கள படிக்க சொல்றேன், படிச்சு பாருங்க.
"அன்பு கணவரே!!
நீங்கள் இப்போதெல்லாம் என்னிடம் பேச மறுப்பது எனக்கு புதிதாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது. நான் உங்கள் மனம் பாதிக்கும் வண்ணம் நடந்திருந்தால் என்னை மன்னிக்கவும். நான் உங்களை போல் படிக்கவில்லயே!
நான் எப்படி இருப்பேன் என்று உங்களுக்கு முன்னமே தெரியும். அப்படி இருக்கும் போது, என்னிடம் நீங்கள் முதலில் லெட்டர் குடுத்த போது நான் மறுத்தேன். அப்பொழுதும் தற்கொலை செய்வதாக சொல்லி என்னை மிரட்டினீர்கள். பின் உங்கள் குடும்பம் முதலியவற்றை என்னிடம் சொல்லி என் மொத்த அனுதாபத்தையும் பெற்றீர்கள். நான் உங்களிடம் நன்றாகத் தானே நடந்து கொண்டிருக்கிறேன்."
இப்பொ லெட்டர் லோக்கல் தமிழுக்கு மாறுது.
" நேத்திக்கு தியேட்ட்ர்ல நடந்தது எனக்கும் வருத்தம் தான். கரண்ட் கட்டான நேரத்துல நீங்க என்ன உதட்டுல கிஸ் பண்ண்வீங்கன்னு நான் நினைக்கல. என் பல் வெளில துருத்திகிட்டு இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அதுக்கு நீங்க எப்படி எல்லம் பேசினீங்க? அதுவும் நான் வேலை பார்க்குற எடத்துல வெச்சு. எல்லார மாதிரி தான நானும். எனக்கும் நீங்க என்ன அதிகமா லவ் பண்ணனும்னு ஆசை இருக்காதா??? இதே மூஞ்சி, நீங்க டூர் போறதுக்கு 5000 ரூவா குடுத்தப்போ பிடிச்சிருந்தது???
நேத்திக்கு தான் நான் ரொம்ப அழுத நாள். ஏன் தெரியுமா??? உங்கள காயப்படுத்தின என் முன் பல் ரெண்டையும் சுத்தியால அடிச்சுகிட்டேன். பல் உடைஞ்சிருச்சு. அதான் நான் இன்னைக்கு நேர்ல வராம, டயானா கிட்ட குடுத்து விட்ருக்கேன். என்ன கை விட்றாதீங்க, ப்ளீஸ்.
அப்புறம் நான் உங்களுக்கு ரூவா குடுக்குறதுக்காக என் செயின அடகு வெச்சேன். அது வீட்ல கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சி. கொஞ்சம் காசு அரேஞ் பண்ண முடியுமா??
இப்படிக்கு
உங்கள் மனைவி,
செல்வி"
என்னத்த சொல்ல, அப்பா அம்மா அண்ணன் தங்கை இவங்க பொழியுற பாசத்த விடவா எவனோ ஒருத்தன் தர்ற அன்பு பெருசா இருக்கு?? இந்த போண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியல. நான் பார்த்த வரைக்கும் வேலைக்கு போற பொண்ணுங்க தான் இப்படி அதிகமா பாதிக்க படுறாங்க. நம்ம உழைப்ப நம்ம வீட்ல உரிஞ்சுறாங்க அப்படிங்குற நினைப்பு தான் அவங்கள இந்த மாதிரி பசங்க கிட்ட மாட்டி விடுது.
நாளைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. கூழ் கடைல காலைல இருந்து உக்காந்து பைய தேடி யார் வர்றாங்கன்னு பார்க்கணும். அந்த அஜித் குமார் எப்படி இருப்பார்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

Wednesday, April 26, 2006

 

இது ஒண்ணும் புதுசு இல்ல!!

என் நண்பன் பாலாவுக்கும் அவன் தங்கச்சிக்கும் ஆகவே ஆகாது. சண்டைனா அப்படி பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சுக்குவாங்க. அன்னைக்கு அவங்க வீட்ல உக்காந்து டி.வி. பார்த்துகிட்ருந்தேன். அப்பொ சர்ஃப் எக்ஸ்ல் விளம்பரம் போட்டான். அந்த பொண்ணு சகதில விழுந்தவுடன் அண்ணனுக்கு வரும் பாருங்க கோபம்.
பார்த்துக்கிட்டு இருக்கும்போதெ பாலா கிட்ட கேட்டேன்.

"டேய்! இத மாதிரி சாரி கேளுனு சகதிய அடிப்பியா??"

" என் தங்கச்சிய வெணும்னா அடிப்பேன்"

இந்த மாதிரி தங்கச்சி இருக்குற பசங்க எல்லாமே இப்படித்தான் இருக்குறாங்க. சில விஷயங்கள்ல நான் ரொம்ப லக்கி. அன்பான அப்பா அம்மா அண்ணன் இருந்தாலும், அக்காவோ தங்கச்சியோ இல்லயேன்னு ஒரே வருத்தம் தான்.
எங்க அப்பாவுக்கு 3 அக்காமார். இப்பவும் அவங்க தம்பிய தாங்குற தாங்கு இருக்கே! அத பார்த்து தான் எனக்கு பொறாமையா இருக்கும். எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி வரைதான். இப்பொ அந்த குறையும் எனக்கு இல்ல.

சிந்துஜா!! இப்பொ நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன். என் தங்கை . எல்லாருக்கும் இணையம் நண்பர்களை குடுக்கும்; எனக்கு தங்கைய குடுத்திருக்கு. அருமையான பொண்ணு என் மேல ரொம்ப பாசம் வெச்சிருக்குற பொண்ணு. ஒரு தங்கச்சி இருந்து என்னல்லாம் செய்யணும்னு நினைச்சேனோ அத எல்லாம் நான் கேக்காமலே எனக்கு செஞ்சவங்க. தினமும் எனக்கு கால் வரும், கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம். அன்னிக்கு எங்க அப்பாகிட்ட இத பத்தி பேசிக்கிட்டு இருந்தப்போ அவர் சொன்னது தான் நான் இப்போ சொல்லப் போறேன்.
" பிரசன்னா, உனக்கு இப்பொ இன்டர்னெட் அது இதுன்னு நீ பேசுற ஆனா இதெல்லம் இல்லாத காலத்திலயே எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சா. என் நண்பன் ஒருத்தனுக்கு கல்யாணம், நான் போன போது அவங்க அம்மா மாடில இருந்து விழுந்துட்டாங்கன்னு ஒரே பரபரப்பு. எல்லாரும் அந்த பொண்ணு காதுபடவே அவ ராசி இல்லாதவன்னு பேசுறாங்க, எனக்கு கஷ்டமா போச்சு,
நான் உடனே நல்ல வேளை போண்ணு வந்த வேள தலைக்கு வந்தது தலப்பாகயோட போச்சு அப்டின்னு பேச்ச மாத்திட்டேன். அதுல இருந்து அந்த போண்ணு என் மேல ரொம்ப பாசமா இருப்பா!!! என் கல்யாணத்துக்கு கூட அவதான் பொண்ணு அலங்காரம் எல்லாம் பண்ணி குடுத்தா. இப்பொ எப்டி இருக்காங்கன்னு தெரியல! நீயாவது கடைசி வரைக்கும் டச்ல இரு"ன்னு சொன்னாங்க.

சே நமக்குதான் முதல்ல இது நடந்திருக்குனு சொல்லப் போனா, அவருக்கு நம்மள விட ஒரு கதை இருக்கானு நினைச்சேன். ஆனா அந்த அம்மா எங்க போனாங்கனு ஒரு விபரமும் எங்ககிட்ட இல்ல. அப்படி ஒரு நிலைமை, எனக்கும் சிந்துஜாவுக்கும் வரவேண்டாம்.
நாங்க நல்ல அண்ணன் தங்கையா இருந்திட்டு போறோம்.

Monday, April 24, 2006

 

Akshaya thiruthiyay

இப்பொ உங்களுக்கு அதிகமான சொத்து இருக்குங்க!!! சம்பாதிக்கணும்னு அவசியமே இல்ல அப்படின்னா நீங்க என்ன செய்வீங்க அப்படின்னு நிலானு ஒருத்தங்க பதிவு பொட்ருந்தாங்க. இந்தா இருக்கு சுட்டி.
நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?? ஒரு நல்ல கம்பேனி கம்ப்யூட்டர் வாங்கி எங்க ஊர் பக்கத்தில உள்ள கிராமதுகெல்லாம், போய் கிளாஸ் எடுப்பேன். நமக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு சொல்லி குடுக்குற மாதிரி சுகம் வேற கிடையாது.
வேற நல்ல நல்ல புத்தகமா வாங்கி போட்றது, 10த் படிக்குற பசங்ககிட்டயே உயர்கல்விக்கான சாய்ஸ் பத்தி சொல்றது. குரூப் டிஸ்கஷனுக்கு 12த் பசங்கள தயார் பண்றதுன்னு.

இன்னொரு முக்கியமான விஷயம், நான் கையில காசு இல்லாதப்போ தான் இப்படி எல்லாம் பேசுவேன். கைல காசு வந்துட்டா அவ்ளொதான். நம்ம ரேஞ்சே வேற.
நான் பிரவுசிங் சென்டர்ல வேல பார்க்கும் போது ஒரு பய வருவான். நடமாடும் நகைக்கடை. ஒரு பையன் அவ்ளொ நகை போட்டு நான் அவனத்தான் பார்த்திருக்கென்.
அவன்கிட்ட நான் போ
ன தடவை அட்ச்சய திருதியயை வந்தப்போ நான் கேட்டேன், "என்ன மாப்பு, இந்த தடவை நகை வாங்கி எங்க போட்டுக்க போற??"
"ஏன் தலைவா! இன்னைக்கு என்ன??"
"இன்னைக்கு தான்மா, அட்ச்சய திருதியயை என்ன வாங்குரியோ அது பெருகுமாமே, இன்னைக்கு எது செஞ்சாலும் வாழ்க்கை முழுக்க பண்ணுவ" அப்டின்னேன்.
"அப்படின்னா, ஒரு பிச்சைகாரன பார்த்து ஒரு பத்து ரூவா குடுக்க போறேன். என்ன செய்ய சொல்றீங்க தலைவா! நமக்கு இந்த குடுக்குற எண்ணம் வரவே மாட்டேங்குது." அப்படின்னான்.

அது மாதிரி தான் எல்லாருக்கும். ஏழையா இருக்கும் போது தான் மனிதாபிமானம், எல்லாம் இருக்கும். கொஞ்சம் காசு வந்தாலும் நம்ம மைண்ட் செட் மாறும்.

இந்த அட்ச்சய திருதியயைக்கு நம்ம ஆளுக்கு ஒரு சுடிதார் மெட்டீரியல் அப்புறம் ஒரு தங்க காசு வாங்கலாம்னு இருக்கேன். இன்ஷா அல்லாஹ்!!

இந்த வியாபாரிகள எவ்வளவு பாரட்டினாலும் தகும்ணே! தங்க விலை ஏரும் போதெல்லாம் அட்ச்சய திருதியயை வருது. பாவம் புருஷன் மார்கள்.
அப்பால வாரேன்.
ஏப்ரல் 30 அட்ச்சய திருதியயை.

Thursday, April 20, 2006

 

கொஞ்சம் சோகமான நாள்

என் வாழ்க்கைல மறக்க முடியாத சில நாட்கள் நான் ஹை ச்கூல் படிச்சது தான். பெண் நண்பர்கள் பல பேர் எனக்கு அப்போ இருந்தாங்க. அதுல பாதி கூட இப்பொ தொடர்பு இல்லாம போச்சு. சரி இதெல்லாம் இப்படித்தான்னு நினைக்கும்போது தான் நான் நேதிக்கு ஆனந்திய பார்த்தேன். நல்ல போண்ணு தான் ஆனா சரியான வாயாடி. அவகிட்ட பேசி மீள முடியதுனு நான் பேச்சு குடுக்கவே மாட்டேன். ஆனா அவ இருக்கா பாருங்க தன்னால வந்து பேசி வம்புக்கு இழுப்பா.

சரி ஸ்கூல்ல படிக்கும்போதெ இப்படி, காலேஜ் ல சேர்ந்ததுக்கப்புறம் கேக்கணுமா? அவள நேத்திக்கு பஸ்ல பார்க்கும் போது அப்படி நினைச்சு தான் பேசாம நின்னுகிட்ருந்தேன். அவளா பார்து வந்து பேசினா. எனக்கு பெரிய ஆச்சரியம். ரொம்ப மெச்சூர் ஆனா மாதிரி பேசினா (கவனிக்கவும் "மாதிரி").

பிரஸ் மேட்டர் தெரியுமாடா? சங்கரி அப்பா இறந்துட்டார்! உன்ன பார்கணும்னு சொல்லிகிட்டே இருந்தார்டா! உன் கான்டாக்ட் இல்லாம போச்சு.

அய்யோனு இருந்தது. ஆனா இப்போ என்ன செய்ய முடியும். நல்ல மனுஷன். எனக்கு பல விஷயங்கள சொல்லி குடுத்தவர். என்னோட மாறுபட்ட சிந்தனைகள பல பேர் பாராட்டும்போது நான் நன்றி சொல்லும் ஒரு நபர்.
சங்கரி!! என் தோழி. யாராவது நட்புனா என்னனு அவகிட்ட கேட்டா, என் பக்கத்துல வந்து உக்காந்து என் கழுத்த சுத்தி கை போட்டு இதுதான் அப்படின்னு சொல்லக் கூடிய தேவதை.

நாங்க எங்க ஸ்கூல் கேம்பஸ்ல ரொம்ப பிரபலம். சேர்ந்தெ சுத்துறது அப்படி இப்படின்னு. அப்போ தான் அவ ஒரு நாள் என்ன வீட்டுக்கு கூப்டா. சரினு நானும் சும்மாதான் போனேன். அப்போ தான் அவங்க அப்பாவ பார்த்தேன். செம ஜாலி டைப். அதே சமயம் பயங்கர புத்திசாலி. எனக்கு என்ன பத்தி அதுவரைக்கும் தெரியாத பல விஷயங்கள அவர் சொல்லி குடுத்தார்.

அப்போ தான் ஒரு பிரச்சினை வந்தது. ஸ்குல்ல எங்க நட்பை சந்தேகபட்டு டீச்சர் கூப்டு விசாரிச்சாங்க. நான் சும்மா போட்டு தாக்கிட்டேன். "பழக கூடாதுன்னா ஏன் கோ எஜுகேஷன் வெச்சீங்கன்"னு கிழிச்சி தள்ளிட்டேன். சரி சங்கரி அப்பாகிட்ட சொல்லலாம்னு போனா அவர் என்ன பார்த்து
"பிரஸன்ன உனக்கும் சங்கரிக்கும் எதாவது???" அப்படின்னு கேட்டார். எனக்கு என்ன சொல்ல அப்படின்னே தெரியல.

ஒண்ணும் சொல்லாம வெளில வந்துட்டேன். அப்புறம் நான் சங்கரிகிட்டயும் சரி அவங்க அப்பா கிட்டயும் பேசவெ இல்ல. அவங்க ஏன் அப்படி நினைச்சாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா அந்த மனுஷன் என்ன பார்கணும்னு சொல்லி இருக்கார். எதுக்குனு தெரியல. அவரோட கருத்துகள பகிர்ந்துகிரதுக்கா இல்ல மன்னிப்பு கேக்குறதுக்கா? தெரியல. நிவர்தி பண்ண முடியாத ஒரு தப்ப நான் செய்திட்டேனொனு எனக்கி ரொம்ப கவலையா இருக்கு.

Wednesday, April 12, 2006

 

எனக்கு பிறந்த நாள்.

எல்லாருக்கும் வணக்கம். நான் பிரஸன்னா. எனக்கு தமிழ் புத்தாண்டு அன்னைக்கு பிறந்த நாள். நான் இப்பொலெருந்தெ பரிசுகள் வாங்க ஆரம்பிச்சுட்டேன். ஓரு ஸ்பெஷல் டீ ஷர்ட், ஒரு அருமையான புத்தகம்னு என் வேட்டை ச்டர்ட் ஆயாச்சு. சோ உங்கள் வாழ்துக்கள், பரிசுகள், (பணமா கூட இருக்கலாம் பாஸ், தப்பே இல்லை) ஆகியவ்ற்றை எனக்கு அனுப்பலாம். என் முகவரி, என்னத்த சொல்ல பிரஸன்னா, பாளயம்கோட்டைனு போட்டு அனுப்புங்க. எனக்கு வந்திடும்.

Saturday, April 08, 2006

 

இட ஒதுக்கீடு.

ஹ்ம்ம்ம்!! சில விஷயங்களுக்கு முடிவே கிடயாதுமா!! ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஆகிய கல்வி நிருவனங்களில் சேர்ந்து படிக்க மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோற்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர தீர்மானித்திருக்கிரார்கள். இதுல 97 சதவிகித மக்கள் இத ஏத்துகிறாங்கன்னு கருத்து கணிப்பு வேற. சார், திறமை இருந்தா யார் வேணும்னாலும் எங்க வேணும்னாலும் போய் படிக்கலாம். ஏன் அம்பேத்கார் படிக்கலியா??
ஒரு குறிப்பிட்ட சாதியை தொடர்ந்து குத்துவதன் மூலம் திராவிட கட்சிகளுக்கு உள்ள நன்மைகள் எனக்கு புரியவில்லை. இப்பொழுது மத்திய அரசும் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. இப்பொ ஒரு தலைமுறை என்பது 33 வருஷம். அப்படி பார்தா அம்பெத்கர் அரசியல் அமைப்பு சட்டதுல சொன்னதவிட 1/2 தலைமுறைக்கு வாய்ப்பு அதிகம குடுத்தாச்சு.
அப்புறம், இந்த இட ஒதுக்கீடு எதுக்காக? ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி போன்ற இடங்களிலிருந்து பல வெளி நாட்டினர் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை இந்த இன்ஸ்டிடூஷன் மூலம் தேர்ந்து எடுக்கின்றன. இதில் இட ஒதுக்கீடு என்றால், 1000 சீட்டுக்கு 270 சீட் குடுக்க வேண்டும். அப்படியானால் 199.9 மார்க் எடுத்த மாணவனும் 110.0 மார்க் எடுத்த மாணவனும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டும்.
நல்லா படிச்சீங்கன்னா நீங்க மெரிட்ல உள்ள போகலாமே. எதுக்காக இட ஒதுக்கீடு?? இங்க நல்லா படிச்சு மார்க் வாங்க முடியாத உங்களால எப்படி இந்த பெரிய கல்லூரியில படிச்சு மார்க் வாங்க முடியும்? வெளினாட்டு கம்பெனி கிட்டயும் போய் இட ஒதுக்கீடு கேப்பிங்களா??
இப்பொவெ தனியார் நிறுவனங்கள்ல இட ஒதுக்கீடுக்கு அடி போட்ருக்கீங்க. இது எங்க போய் முடியும் தெரியுமா?? இந்திய இளைங்கர்கள் வேலை தெரியாதவர்கள் என்கிற நிலமைக்கு கொண்டு விடும்.

 

பெண்ணாசை பொல்லாதது

சமீபத்துல எங்க அண்ணனோட பதிவுல இந்த மேட்டர் போடபட்டிருந்து. அதாவது சட்டுனு எங்க ஊர்ல பெரிய மனுஷன் ஆரவங்கள பத்தி. அவர் சொன்னது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற் கணக்கு தான். சொல்ல போனா நிறய சிரிக்க வைப்பானுங்க இந்த குரூப்ஸ்.
"முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே; காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே" அப்படின்னு ஒரு பாட்டு உண்டு. அதெ மாதிரி தான். இந்த தடவை எங்க தொகுதியில நிக்க போற ஒருத்தன எனக்கு பத்து பதினஞ்சு வருஷதுக்கு முன்னால இருந்து தெரியும். பக்கா ரவுடி. அவனுக்கு ரேஷன் அரிசி எவ்ளோ ரூபாய்க்கு விக்குதுன்னு கூட தெரியாது. அவ்ளோ பணக்காரன். இப்பொ ஒரு கல்யாண மன்டபத்த வாங்கி பினாமி பேர்ல நடத்திகிட்டு இருக்கான்.
இவன் ஜெயிச்சு நல்லது பண்றதெல்லாம் நடக்காத காரியம். இதுல வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா. இந்த மாதிரி ரவுடி பசங்களொட பொண்ணோ இல்ல அவங்க சொந்தக்கார போண்ணோ ரொம்ப அழகா இருப்பளுக. பார்த்தா நல்லா கம்பெனி குடுப்பாளுக. ஆனா பின்னாடி போனோம் அவ்ளோதான். ஒரு பெரிய குரூப்பே அடி பின்னி எடுக்கும்.
என் அருமை நண்பர் ஐயப்பன் இந்தா மாதிரியான பாரம்பரியத்துல வந்த ஒரு பொண்ண சைட் அடிச்சாரு. அந்த பொண்ணு திரும்பி கூட பார்கல அது வேற விஷயம். அப்போ அவர் சொல்லுவார்.
"பிரசன்னா! உன் சைக்கிள் முன்னாடி ரன் அப்படின்னு எழுது! அப்பொ தான் (குரல் மெதுவாகிறது) நான் சுந்தரபான்டியன் பொண்ண இழுத்துகிட்டு ஓட முடியும்"
"ஏண்ணே அவன் பேர சொல்லவே இப்படி பயப்படுரீங்களே, இதெல்லாம் நமக்கு தேவையா?அவன் ஆயிரம் டாடா சுமோல துரத்துவான் அப்புறம்." இது நான்
"துரத்தினா துரத்தட்டும்! நான் கில்லிடா"
"ஆமா அவன் தாண்டு, சும்மா சுத்தல்ல விட்டு அடிப்பான் தெரியும்ல?"
" நீ சொல்றதும் சரிதான், அடுத்த ஜென்மத்திலாவது அவன விட பெரிய ரவுடியாகி அவன் பொண்ண தூக்குவேன்"
இது போல நாங்க ஆரம்பத்திலயே எல்லா சாதக பாதகங்களயும் அலசிடுவோம்.
ஆனா எங்கள் பெண்ணாசை என்ன பாடெல்லம் படுத்திச்சி தெரியுமா?
திருனெல்வேலி மாதிரி ஒரு ஊர்ல வாழ குடுத்து வெசிருக்கணும். ஆனா பொண்ணுங்க மேல ஆசை படாம இருக்க கத்துக்கனும். ஒரு நாள் நானும் இந்த ஐயப்பா அண்ணனும் செருப்பு வாங போனோம். அங்க ரென்டு முஸ்லிம் பொண்ணுங்க நின்னு செருப்பு பார்த்துகிட்ருந்தது. எதுக்குட வம்புனு நான் திரும்புரதுகுள்ள நம்ம அண்ணன் சிக்னல் குடுத்துட்டார். அந்த பொண்ணும் ம்ம்ம்...
அப்புறம் என்ன அந்த பொண்ணு பின்னாடியெ போய் வீட்ட பார்தாச்சு. அடுத்த நாள் சாயங்காலம் நல்ல டீக்கா டிரஸ் பண்ணிகிட்டு அண்ணன் நம்ம வீட்டு வாசல்ல நிக்குறாப்புல.
"பிரஸ்! வா போவோம்"
"எங்க??"
"உங்க அண்ணிய பார்க்க" இத சொல்லும்போது நீங எங்க அண்ணன் முகத்த பார்கணுமே. கோடி சூரிய பிரகாசம் தெரின்சது
சரின்னு சொல்லி கிளம்பி போனா. அந்த பொண்ணு முந்தின நாள் குடுத்ததுக்கு முற்றிலும் ஆப்போசிட் ரியாக்ஷன் குடுதுட்டா. அந்த தெருவுல வர்ற வழிய ஆட்டோ காரங்க அடைசிட்டாங்க. இன்னொரு வாசல் தான் இருக்கு. யாரும் என்னை பார்கல, கைலி தான் கட்டி இருந்தேன். கத முடிஞ்சதுனு நினைக்கும்போது தான் எனக்கு பக்கத்துல தெய்வத்தின் குரல் கேட்டது.
"ஆப்பிள் கிலோ பத்து ரூவா" ஆப்பிள் காரன் வண்டிய தள்ளிகிட்டு வந்தான். தப்பிக்க ஒரே வழி அதுதான். நானும் கூட சேர்ந்து "ஆப்பிள் கிலோ பத்து ரூவா" "ஆப்பிள் கிலோ பத்து ரூவா"னு கூவிகினே தெருவ தாண்டிட்டேன்.
ஓ! நீங்க என்ன கேக்குரீஙன்னு புரியுது. ஐயப்பா அண்ணன் தான. அவர பத்தி எனக்கு என்ன கவலை!! உயிர் பெருசா? நட்பு பெருசா? என்ற அப்போதய கேள்விக்கு நான் உயிரத் தான் சூஸ் பண்ணேன்


Friday, April 07, 2006

 

சோக்கு

ஒரு கம்பெனி முதலாளி அவரோட ஃபாக்டரிய சுத்தி பர்க்க வந்தாராம். அப்பொ அங்க ஒரு பையன் வேலை எதுவும் பார்காம சும்மா நின்னுகிட்ருந்தான். அவர் அவன் கிட்ட போய் நின்னு
"உனக்கு இங்க எவ்ளோபா சம்பளம்"னு கேட்டார்.
அவன் குழப்பமா "2000 ரூபாய்"ன்னான்.
உடனே அவர் பர்ஸ திறந்து கொஞ்ச ரூபா எடுத்து "இதுல 6000 இருக்கு. இனிமே இந்த பக்கமே வராத"னுட்டார்.
அவனும் உடனே வாங்கிட்டு போய்ட்டான்.
அப்புறம் அவர் தன்னோட மானேஜர் கிட்ட "இப்பொ நான் துரத்தினேனே அந்த பய இங்க என்ன வேலை பார்த்தான்??" அப்படின்னு கேட்டார்.
அதுக்கு மானேஜர் "சார்! அவன் கூரியர் பையன் அப்படின்னு சொன்னாராம்

 

மிக முக்கியமான விஷயம்.

சென்ற பதிவு தேசிகன் என்பவரது வலைப்பூவிலிருந்து எடுத்தது. எனக்கு லிங்க் குடுக்க தெரியாத காரணத்தால் அப்படி செய்ய நேர்ந்தது. அன்னார் என்னை மன்னிப்பார் என நம்புகிறேன்.

Thursday, April 06, 2006

 

அட நாம இப்படித்தான்

இந்தியர்கள் என்று நம்மை அடையாளம் காட்டுவது எது ? நம்முடைய பாரம்பரியமா ? சமயமா ? என்றால் கிடையாது. நம்முடைய தினப்படி நடவடிக்ககைகள் தான் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. சிலவற்றை பார்க்கலாம்.

நம்முடைய பல நடவடிக்கைகள் conserve and recycle முறையினாலானது. சிக்கனமாக இருப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய உபதேசங்கள், பாடல்கள் பலவற்றில் நம்முடைய ஆசைகளை விட்டுவிட உபதேசிக்கின்றன(உத: பஜகோவிந்தம்-2 பாடல்). நாம் மகிழ்ச்சியையும் செலவையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம்.

இதற்கு பல உதாரணங்கள் கூறலாம். பழைய துணி, பாத்திரங்களை விற்று புது பாத்திரங்களை வாங்குகிறோம். காலி டப்பாகளில் ரோஜா வளர்க்கிறோம். எப்பாவாது உபயோகப்படும் என்று பரணில் குப்பைகளை அடைத்து வைக்கிறோம். பெப்ஸி குடித்துவிட்டு அந்த பாட்டிலை வாட்டர் பாட்டிலாக உபயோகிக்கிறோம். செல் போன் மீட்டர் ஏறாமல் இருக்க உங்கள் நண்பருக்கு "மிஸ்ட் கால்" குடுக்கிறீர்கள்.

புதிய பூப்போட்ட டிசைன் சோஃபா செட்டை வாங்கியவுடன், அழுக்காகாமல் இருக்க ஒரு துணியை போட்டு முடி விடுகிறோம். அது அழுக்காமல் இருக்க அதன் மேல் உட்காராமல் பாயில் உட்காருகிறோம்.

படிப்பு நமக்கு ரொம்ப முக்கியம். அது நமக்கு ஒரு பாஸ்போர்ட் போல். நம்முடைய பெயர் பலகையில் பெயருக்கு பின்னால் நாம் என்ன படித்தோம் என்பதை போட்டுக்கொள்வோம். டிப்ளமோ, பக்கத்து தெரு இன்ஸ்டிட்யுடில் கொடுத்த டிகிரி என்று எதையும் விட்டுவைப்பதில்லை. தற்போது எந்த படிப்பு மார்க்கெட்டில் முதலாவது இருக்கிறதோ அதற்கு மதிப்பு கொடுக்கிறோம். பெண்ணுக்கு US மாப்பிள்ளையை பார்க்கிறோம். USக்கு போனவுடன் அதை பல பேரிடம் சொல்லி மகிழ்கிறோம்.

நம்முடைய பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம். அமெரிக்கா போனவுடன் தான் தமிழ் பற்று வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளைகளை டான்ஸ் கிளாசில் சேர்த்திருக்கார் என்று நாமும் சேர்க்கிறோம். குழந்தைகளின் ஆசையை நாம் கேட்பதே கிடையாது.

அழகாக இருக்கும் குழந்தைக்கு திருஷ்டி பொட்டு வைக்கிறோம். காருக்கு முன்னாடி எலுமிச்சம் பழத்தை தொங்கவிடுகிறோம். நல்ல செய்தியை கண்பட்டுவிட போகிறது என்று மறைக்கிறோம்.

பணம் செலவு செய்யாமல் அந்தராக்ஷரி விளையாடுகிறோம். பஜனை/ஐய்யப்பா பாடல்களை "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா" டியுனில் கேட்கிறோம். யாராவது தெருவில் சண்டை போட்டால் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்கிறோம். செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கும் போது ரசித்து சிரிக்கிறோம்.

எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முயற்சி செய்கிறோம். எல்லா வகை உணவையும் ஒரே பிளேட்டில் தாலி என்று சாப்பிடுகிறோம். ஆக்ஷன், காமெடி, பாட்டு என்று எல்லாவற்றையும் ஒரே படத்தில் பார்த்துக் ரசிக்கிறோம்.

எங்கு சென்றாலும் நாம் நமது அடையாளங்களை விட்டுவிட்டு செல்கிறோம். லிப்ட், பொது கழிப்பிடங்கள் என்று. நம் அடையாளங்கள் இரண்டு - ஒன்று துப்புவது, மற்றொன்று கிறுக்குவது. காந்தியடிகள் ஒரு முறை - நாம் எல்லோரும் சேர்ந்து துப்பினால் இங்லாந்து முழ்கிவிடும் என்றார். ஆனால் இன்றோ எல்லோரும் துப்பினால் பல கண்டங்கள் மூழ்கிவிடும். Dr. பி.ஸ் விவேக் துப்புவதில் ஒரு சின்ன ஒரு ஆராய்ச்சியோ செய்துள்ளார் - மும்பையில் உள்ள 10% மக்கள் துப்பினால் அது வருடத்திற்கு ஐந்து லட்சம் லிட்டர் எச்சில் ஆகிறது. இதை கொண்டு மும்பையை 58 முறை முழ்கடிக்கலாம். சீ.சீ தூ.

பொது இடங்கள், பஸ் சீட்டுக்கு முன், கழிப்பிடங்கள் எல்லாவற்றிலும் "I Love ...." அல்லது, ஆண்-பெண் அசிங்கமான படம், அல்லது அட்லீஸ்டு ஒரு கெட்டவார்த்தை என்று கிறுக்கப்பட்டிருக்கும். காலி இடம் நம் கண்ணை உருத்தும்.

காம்பெவுண்ட் சுவற்றில் பிள்ளையார், காளி, ஏசுநாதர், ஒரு மசூதி என்று வரைந்து வைத்திருப்பார்கள். பக்தியினால் கிடையாது

வீட்டுக்கு வரும் விருந்தாளி நீங்கள் செய்த ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுகிறார். அவர் வீட்டுக்கு கொஞ்சம் பார்சல் வேண்டும் என்கிறார். நீங்கள் அவருக்கு உங்கள் வீட்டுல் உள்ள விலையுயந்த டப்பர்வேரில் கொடுக்காமல் ஒரு சாதாரன பிளாஸ்டிக் டப்பாவை தேர்ந்தெடுத்து அதில் தான் கொடுப்பீர்கள். நிறைய செய்திருந்தாலும் வீட்டில் வேலை செய்பவருக்கு அடுத்த நாள் அது கெட்டுபோக இருபது செகண்ட் இருக்கும் போது தான் கொடுக்க மனசு வரும்.

சூப்பர் மார்கெட் சென்றால் எக்ஸ்டரா கேரிபேக் எடுத்து வந்து குப்பை தொட்டிக்கு உபயோகிப்பீர்கள். கிப்ட் வந்தால் ஜிகினா பேப்பரை கிழிக்காமல் எடுத்து வைத்துக்கொள்வீர்கள். பக்கத்து வீட்டு மாமி தீபாவளிக்கு கொடுத்த பளவுஸ் பிட்டை எதிர்த்த வீட்டு மாமிக்கு கார்த்திகைக்கு கொடுப்பீர்கள். ஏரோப்பிளேனில் கொடுக்கும் பொருட்களை தவறாமல் வீட்டுக்கு எடுத்து வருவீர்கள். (கொடுத்த காசுக்கு இது கூட எடுக்கவில்லை என்றால் எப்படி என்று சமாதனம் சொல்லிக்கொள்வீர்கள்)

பிளாஸ்டிக் என்றால் நமக்கு தனி மோகம். கார் வாங்கினால் அதன் சீட்டின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை பிரிக்கமாட்டோம். மற்றவர்களுக்கு அது புதிய கார் என்று எப்படி நம்பவைப்பது. ஃபிரிட்ஜ் பாக்கிங் காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்தி அதில் வடாம் காய உபயோகிப்போம். வெளிநாட்டு பொருட்களில் வரும் பிளாஸ்டிக் காகிதத்தை பத்திரபடுத்திவைப்போம். நம் செல் போன்களுக்கு பிளாஸ்டிக் சட்டை போடுவோம்.

என்ன நடிக்கிறார்கள் ? என்ன கதை ? என்ன லாஜிக் ? என்று சினிமாவை குறை கூறிக்கொண்டே பிளாக்கில் டிக்கேட் வாங்கி படம் பார்போம், அல்லது திருட்டு விசிடிக்கு அலைவோம். சீரியல்களை குறைக்கூறிக்கொண்டு, ஆபிஸிலிருந்து லேட்டாக வந்து மனைவி/அம்மாவிடம் சாப்பிடும் போது 'இன்று என்ன நடந்தது" என்று கேட்டு தெரிந்துக்கொள்வோம். வெள்ளிக்கிழமை மனைவி கோவிலுக்கு அழைக்கும் போது தலைவலி என்று சாக்கு சொல்லி, F டிவி பார்ப்போம். டிவியில் வரும் ஆணுரை விளம்பரத்தை பார்த்து முகம் சுளிப்போம். ஆனால் ஷக்கிலாவையும், மும்தாஜையும் நடு இரவில் நினைபோம்.

ஒரு இந்தியன் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சொல்கிறான். இந்த ஆங்கில வார்த்தை தற்போது எல்லா இந்திய மொழிகளிலும் சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. "சொல்ப அட்ஜஸ்ட் மாடி", "தோடா அட்ஜஸ்ட் கரோ", "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கோ" போன்ற வார்த்தை நாம் தினமும் கேட்பது. அட்ஜட் என்ற வார்த்தையே நம் எல்லா அகராதியிலும் அட்ஜஸ்ட் செய்து இடம் பெற்றிறுக்கிறது.

பஸ்சில் ஒருவர் காலை மிதித்தால், ஃபுட்போர்டில் தொங்கி பஸ்சிற்குள் செல்லும் போது, தூங்கி பக்கத்து சீட்டில் இருப்பவர் மேல் சாயும் போது, டிரேயினில் உட்கார இடம் கேட்கும் போது, ரசத்தில் உப்பு அதிகமாக இருக்கும் போது, ஹோட்டலில் சாம்பார் இல்லாத போது, பார்கிங்கில் இடம் கிடைக்காமல் பக்கத்தில் இருக்கும் காரின் கண்ணாடியை மடக்கிவிட சொல்லும் போது,
மாமியாரால் சித்திரவதை பட்டு பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு அம்மா கூறும் அறிவுரை "நீ தான் கொஞ்சம் அவர்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்'. சினிமா வில்லன் "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே உன்னை ராணி போல் வைத்துக்கொள்வேன் இல்லை... " என்று சகட்டுமெனிக்கு நாம் தினமும் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஜஸ்டிஸ் M.C.ஜெயின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாகி "I think I am adjusting too much" என்றார். டைம்ஸ் (செப் 27 பதிப்பில்) இந்திய அதிகாரி ஒருவர் "India would offer to "adjust" the Line of Control by a matter of miles" என்று சொன்னதாக குறிப்பிடபட்டுள்ளது.

குப்பை போடுவதில் நாம் வல்லவர்கள். அதில் பலவிதம். அபார்ட்மெண்டில் வாழ்பவர்கள், குப்பையை விட்டிலிருந்து பால்கனிக்கு எடுத்து செல்வார்கள் பிறகு நியூட்டனின் புவியிற்ப்பு சக்தி மற்றவற்றை பார்த்துக்கொள்ளும். பால்கனியில் தலை வாரும் பெண்கள், சீப்போடு வரும் தலைமயிரை சுருட்டி கீழே போடுவார்கள். அது அடுத்த பால்கனியில் விழும். இது வருடத்தின் 365 நாட்களும் நடக்கும் (இதில் லீப் இயரும் அடங்கும்). காரில் போகும் போது, பிரிட்ஜ் அல்லது மேம்பாலம் வந்தால் சிப்ஸ் பாக்கேட், சாக்கிலேட் பேப்பர் போன்றவற்றை தூக்கி போட நாம் குழந்தைகளை பழக்குகிறோம்.

பப்பு, டிங்கு, குக்கூ, டோலி, டிட்டு, குட்டு, ஜில்லு, கிச்சு, சேச்சு என்ற வார்த்தைகள் அகராதியில் இல்லை ஆனால் அவற்றை தினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள். குழந்தைகளை கூப்பிடும் பெயர்கள். இது எப்படி ஒரு குழந்தைக்கு வைக்கபடுகிறது என்று யாராவது ஆராயலாம். கிருஷ்ணா - கிச்சாவகவும், சேஷாத்திரி 'சேச்சு'வாதும் எழுதப்படாத விதி.

என்னுடைய பழைய கம்பெனியின் CEOவுடன் ஒரு முறை தாஜ் ஹோட்டலுக்கு லஞ்சுக்கு சென்றிருந்தோம். அப்போது எங்கள் CEOவின் நெருங்கிய நண்பர் அவரை "ஏய் டிங்கு இங்க எப்படி" என்று அவரை அழைத்தார். எங்கள் CEO முகத்தில் ஒரு வேதனை கலந்த புன்னகையை பார்க்க முடிந்தது.

பேரம் பேசுதல் என்பது நம் பிறவி குணம். பெண்கள் இதில் வல்லவர்கள். பூக்காரி, கீரைக்காரி, துணிக்கடை என்று எதையும் விட்டுவைக்கமாட்டார்கள். சில கடைகளில் "Fixed Price" என்று போட்டப்பட்டிருந்தாலும் நாம் பேரம் பேசுவோம். சரவண பவனில் 60 ரூபாய்க்கு ஃபிரைட்ரைஸ் சாப்பிடுவோம், ஆனால் வேளியே பார்க்கிங்கில் இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுவோம். ஒரு முறை என் நண்பனும் நானும் அமெரிக்காவில் ஒரு கடைக்கு சென்றிருந்தோம். என் நண்பன் ஒரு பொருளை எடுத்து இதை $2 க்கு கொடுக்க முடியுமா என்றான். கடைக்காரர் அந்த பொருளை அவனுக்கு இலவசமாக கொடுத்தார். அது தான் அவன் கடைசியாக பேரம் பேசியது.

நாம் Letter Head வைத்துக் கொள்வதே ரெகமண்டேஷன் எழுதுவதற்குத் தான். பாஸ்போர்ட், ரெயில்வே டிக்கெட், காலேஜில்/ஸ்கூல் சீட், போலிஸ் கேஸ், வேலைக்கு, சாக்கடை அடைப்புக்கு, வண்டி லைசன்ஸ் என்று எல்லாவற்றிருக்கும் இதை உபயோகிக்கிறோம். இந்திய கிரிக்கெட், அரசியல், சினிமா சென்சார் என்று இதில் எதையும் வீட்டுவைக்கவில்லை. ஏன் நம் குழந்தைகளே எதாவது வேண்டுமானல் அம்மவிடம் ரெகமெண்டேஷனுக்கு செல்கிறார்கள்.

டிராபிக் சிக்கினலில் மஞ்சள் கலர் மாறியவுடன், உடனே ஹார்ன் அடித்து முன்னால் இருப்பவருக்கு BPயை ஏற்றுவோம், அவர் திரும்பி பார்த்தால் நாம் வேறு எங்காவது திரும்பிக்கொள்வோம் அல்லது மேலே பறக்கும் காக்காயை ரசிப்போம்.

லேட்டாக வருவது என்பது நமக்கு ஒரு ஃபேஷன். அரசியல் விழாக்களில் தலைவர் லேட்டாகத்தான் வருவார். "இதோ வருகிறார், இதோ வருகிறார்" என்று ஸ்பீக்கரில் அலரிக்கொண்டேயிருக்கும். கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கார்கள் லேட்டாகதான் வரவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை. கவர்மெண்ட் ஆபிஸில் காலை ஒன்பது மணிக்கு போய் எப்ப சார் ஆபிஸரை பார்க்கலாம் என்றால் பியூன் நம்மை ஒரு மாதிரி பார்பார். ஏன் சினிமாவில் கூட போலிஸ் லேட்டாகத்தான் வரும்.

எதையும் போட்டு குழப்பிக்கொள்வோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமா, குடியரசு தினமா?. ஜார்கண்டில் சிபுசோரனா ? சிம்ரனா ?
சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவையும் போட்டு குழப்பிக்கொள்வோம்.

ஜாதி இருக்க கூடாது என்று சொல்லிக்கொள்வோம். ஆனால் மேட்ரிமோனியலில் ஜாதியின் பெயரை ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லாமல் கொடுப்போம். யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ஜாதியின் பெயரை உபயோகிப்போம்.

வெளி வேஷத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்போம். நாம் கருப்பாக இருந்தாலும் நமக்கு அமையும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். நன்றாக டிரஸ் செய்து கொள்வோம் ஆனால் உள்ளே கிழிந்த பனியன் போட்டுக்கொள்வோம். வரவேற்பறையில் சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி புத்தகங்கள், டாய்லட்டில் குமுதம் நடுப்பக்கம்.

சமயத்துக்கு தகுந்தார் போல் rulesயை மாற்றிக்கொள்வோம். காலில் போப்பரை மிதித்தால் சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்வோம், அமெரிக்கா சென்றவுடன் டாய்லட் போனவுடன் டிஸ்யூ பேப்பரால் துடைத்து போடுவோம். ராத்திரி பத்து மணிக்கு மேல் ஒன்வேயில் போவோம். க்யூக்களை மீறுவோம். ஆர்.டி.ஓ, கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணம் கொடுத்து சலுகைகள் வாங்குவோம்.

லஞ்சம் என்பது கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறது. பரிட்சையில் பாஸ் செய்தால் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய். கொஞ்சம் கடினமான காரியம் என்றால் திருப்பதி வேங்கடாசலபதிக்கு உங்கள் சம்பளத்தில் ஒரு பங்கு கமிஷன் என்று லஞ்சத்தை கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறோம். இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் இது எல்லாம் நாம் கலாச்சார வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பிரச்சனைகளை தவிர்ப்பதை விட அதனோடு வாழ்ப் பழகிக் கொள்வது நமக்கு சிக்கலற்றதாகிறது. இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ புரட்சி வந்திருக்கும். விட்டுக் கொடுத்தலும் சமாதான சக வாழ்வும் இந்தியர்களின் தன்மையாகிறது. நாம் ஒவ்வொருவரிடமும் பல நல்ல மற்றும் சில கொல்ல வேண்டிய குணங்கள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.



Tuesday, April 04, 2006

 
ஒரு சின்ன சிந்தனை. உங்களுக்கு ஒரு விபத்தில் கையோ காலோ பொயிருச்சுன்னு வைங்க, ஒரு பேச்சுக்கு தாங்க, உங்க மனைவி உங்களை விட்டு போனா நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
இந்த தடவை "அவள் விகடன்" படிக்கும் பொழுது ஒரு படத்தோட விமர்சனம் படிச்சேன். படிக்கும் போதே ரொம்ப பாதிப்பு குடுத்த ஒரு கதை. அது ஒரு நெதர்லாந்து நாட்டு படம். படதோட பெயர் ஹெத் ஜுயிதே. வாசிக்க கஷ்டமாதான் இருக்கு ஆனா நல்ல ஒரு மேட்டர்.
கதைப்படி மார்ஜே அப்படிங்குற பொண்ணு நல்ல உழைப்பாளி. ஆனா அவகிட்டயும் சில குறைகள். ஆவங்களோடது லாண்ட்ரி ஷாப். அங்க புதுசா ஒரு பையன் வேலைக்கு வர்றான். அவன் இந்த மார்ஜே அப்படிங்குர பொண்ண அப்படி இப்படி பண்ணி கரெக்ட் பண்றான். ஒரு நாள் விஷயம் கை மீறிய நேரம் அவங்க ரெண்டு பேரும் தனி ரூமுக்கு போறாங்க.
அப்போ தான் அந்த பொண்ணு அவன்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர போட்டு உடைக்குறா. அதாவது அந்த போண்ணுக்கு மார்பக புற்று நோய். அதனால ரெண்டு மார்பகங்களயும் ஆபரேட் பண்ணி எடுத்துட்டாங்க. இந்த மேட்டர் தெரிஞ்சதுமே அந்த பய "ஐ யம் சாரி" அப்படினு சொல்லி எஸ்கேப். ஆனா அந்த பொண்ணுக்கு ஏமாற்றம் தாங்கல. அவன் பின்னடியே அழுதுகிட்டு ஓடுறா. பார்குறவங்க அந்த பையன் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான்னு நினைச்சு, அந்த பையன லாண்ட்ரில இருக்குற பாய்லர் ரூம்ல போட்டு அடைசிடுறாங்க
ஏற்கனவே பல நிராகரிக்கபட்டதால டிப்ரஷன்ல இருந்த அந்த பொண்ணு இப்பொ மன நோயாளியாவே ஆகிடிச்சு. அந்த பையன அந்த பாய்லர் ரூம்லயெ அடைச்சு வெச்சு கொன்னுடுது.
இதுல அந்த மார்ஜேவா நடிச்சிருக்குற மோனிக் ஹெண்டர்ஸ் ரொம்ப அருமையா நடிச்சிருகாங்க.
அதாவது ஆம்பளைக்கு எவ்வளவு குறை இருந்தாலும் பொண்ணுங்க பொறுதுக்கணும், ஆனா பொண்ணு உடம்புல ஒரு தேமல் இருந்தா கூடஅத ஆம்பளையால ஒத்துக்க முடியல. ஏன் இவ்வளவு வேற்றுமை. உலகத்துல இது போல எத்தனையோ பொண்ணுங்கள ஆம்பளைங்க மன நோயாளி ஆக்கி இருக்காங்க.
அதுவும் போக எப்பொ தான் தமிழ்ல இது போல விவாததுக்கு எடுத்துகொள்ளும் படியான படங்கள் வர போகுதுன்னு தெரியல. இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஹீரோவோட சவாலயும், ஹீரோயினோட தொப்புளயும் பார்க்க வேன்டி இருக்கோ???
படம்: ஹெத் ஜுயிதே
நாடு: நெதர்லாந்து
இயக்கம்: மார்ட்டின் கூல்ஹோவன்



Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]