html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: கொஞ்சம் சோகமான நாள்

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, April 20, 2006

 

கொஞ்சம் சோகமான நாள்

என் வாழ்க்கைல மறக்க முடியாத சில நாட்கள் நான் ஹை ச்கூல் படிச்சது தான். பெண் நண்பர்கள் பல பேர் எனக்கு அப்போ இருந்தாங்க. அதுல பாதி கூட இப்பொ தொடர்பு இல்லாம போச்சு. சரி இதெல்லாம் இப்படித்தான்னு நினைக்கும்போது தான் நான் நேதிக்கு ஆனந்திய பார்த்தேன். நல்ல போண்ணு தான் ஆனா சரியான வாயாடி. அவகிட்ட பேசி மீள முடியதுனு நான் பேச்சு குடுக்கவே மாட்டேன். ஆனா அவ இருக்கா பாருங்க தன்னால வந்து பேசி வம்புக்கு இழுப்பா.

சரி ஸ்கூல்ல படிக்கும்போதெ இப்படி, காலேஜ் ல சேர்ந்ததுக்கப்புறம் கேக்கணுமா? அவள நேத்திக்கு பஸ்ல பார்க்கும் போது அப்படி நினைச்சு தான் பேசாம நின்னுகிட்ருந்தேன். அவளா பார்து வந்து பேசினா. எனக்கு பெரிய ஆச்சரியம். ரொம்ப மெச்சூர் ஆனா மாதிரி பேசினா (கவனிக்கவும் "மாதிரி").

பிரஸ் மேட்டர் தெரியுமாடா? சங்கரி அப்பா இறந்துட்டார்! உன்ன பார்கணும்னு சொல்லிகிட்டே இருந்தார்டா! உன் கான்டாக்ட் இல்லாம போச்சு.

அய்யோனு இருந்தது. ஆனா இப்போ என்ன செய்ய முடியும். நல்ல மனுஷன். எனக்கு பல விஷயங்கள சொல்லி குடுத்தவர். என்னோட மாறுபட்ட சிந்தனைகள பல பேர் பாராட்டும்போது நான் நன்றி சொல்லும் ஒரு நபர்.
சங்கரி!! என் தோழி. யாராவது நட்புனா என்னனு அவகிட்ட கேட்டா, என் பக்கத்துல வந்து உக்காந்து என் கழுத்த சுத்தி கை போட்டு இதுதான் அப்படின்னு சொல்லக் கூடிய தேவதை.

நாங்க எங்க ஸ்கூல் கேம்பஸ்ல ரொம்ப பிரபலம். சேர்ந்தெ சுத்துறது அப்படி இப்படின்னு. அப்போ தான் அவ ஒரு நாள் என்ன வீட்டுக்கு கூப்டா. சரினு நானும் சும்மாதான் போனேன். அப்போ தான் அவங்க அப்பாவ பார்த்தேன். செம ஜாலி டைப். அதே சமயம் பயங்கர புத்திசாலி. எனக்கு என்ன பத்தி அதுவரைக்கும் தெரியாத பல விஷயங்கள அவர் சொல்லி குடுத்தார்.

அப்போ தான் ஒரு பிரச்சினை வந்தது. ஸ்குல்ல எங்க நட்பை சந்தேகபட்டு டீச்சர் கூப்டு விசாரிச்சாங்க. நான் சும்மா போட்டு தாக்கிட்டேன். "பழக கூடாதுன்னா ஏன் கோ எஜுகேஷன் வெச்சீங்கன்"னு கிழிச்சி தள்ளிட்டேன். சரி சங்கரி அப்பாகிட்ட சொல்லலாம்னு போனா அவர் என்ன பார்த்து
"பிரஸன்ன உனக்கும் சங்கரிக்கும் எதாவது???" அப்படின்னு கேட்டார். எனக்கு என்ன சொல்ல அப்படின்னே தெரியல.

ஒண்ணும் சொல்லாம வெளில வந்துட்டேன். அப்புறம் நான் சங்கரிகிட்டயும் சரி அவங்க அப்பா கிட்டயும் பேசவெ இல்ல. அவங்க ஏன் அப்படி நினைச்சாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா அந்த மனுஷன் என்ன பார்கணும்னு சொல்லி இருக்கார். எதுக்குனு தெரியல. அவரோட கருத்துகள பகிர்ந்துகிரதுக்கா இல்ல மன்னிப்பு கேக்குறதுக்கா? தெரியல. நிவர்தி பண்ண முடியாத ஒரு தப்ப நான் செய்திட்டேனொனு எனக்கி ரொம்ப கவலையா இருக்கு.

Comments:
தவறுகள் செய்தது அவர்கள்.. நீர் வருத்தப்படுவதின் காரணம் பிரியலியேப்பா?
(பிழைகளை குறைத்துக்கொண்டால் வாசிப்பு தடை படாமல் இருக்கும், கவனிக்கவும்)
 
எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும் மன்னிக்கலாமே. எனக்கு அப்போ அது தொணலை ங்குறது தான் வருத்தம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]