html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: இட ஒதுக்கீடு.

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Saturday, April 08, 2006

 

இட ஒதுக்கீடு.

ஹ்ம்ம்ம்!! சில விஷயங்களுக்கு முடிவே கிடயாதுமா!! ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஆகிய கல்வி நிருவனங்களில் சேர்ந்து படிக்க மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோற்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர தீர்மானித்திருக்கிரார்கள். இதுல 97 சதவிகித மக்கள் இத ஏத்துகிறாங்கன்னு கருத்து கணிப்பு வேற. சார், திறமை இருந்தா யார் வேணும்னாலும் எங்க வேணும்னாலும் போய் படிக்கலாம். ஏன் அம்பேத்கார் படிக்கலியா??
ஒரு குறிப்பிட்ட சாதியை தொடர்ந்து குத்துவதன் மூலம் திராவிட கட்சிகளுக்கு உள்ள நன்மைகள் எனக்கு புரியவில்லை. இப்பொழுது மத்திய அரசும் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. இப்பொ ஒரு தலைமுறை என்பது 33 வருஷம். அப்படி பார்தா அம்பெத்கர் அரசியல் அமைப்பு சட்டதுல சொன்னதவிட 1/2 தலைமுறைக்கு வாய்ப்பு அதிகம குடுத்தாச்சு.
அப்புறம், இந்த இட ஒதுக்கீடு எதுக்காக? ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி போன்ற இடங்களிலிருந்து பல வெளி நாட்டினர் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை இந்த இன்ஸ்டிடூஷன் மூலம் தேர்ந்து எடுக்கின்றன. இதில் இட ஒதுக்கீடு என்றால், 1000 சீட்டுக்கு 270 சீட் குடுக்க வேண்டும். அப்படியானால் 199.9 மார்க் எடுத்த மாணவனும் 110.0 மார்க் எடுத்த மாணவனும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டும்.
நல்லா படிச்சீங்கன்னா நீங்க மெரிட்ல உள்ள போகலாமே. எதுக்காக இட ஒதுக்கீடு?? இங்க நல்லா படிச்சு மார்க் வாங்க முடியாத உங்களால எப்படி இந்த பெரிய கல்லூரியில படிச்சு மார்க் வாங்க முடியும்? வெளினாட்டு கம்பெனி கிட்டயும் போய் இட ஒதுக்கீடு கேப்பிங்களா??
இப்பொவெ தனியார் நிறுவனங்கள்ல இட ஒதுக்கீடுக்கு அடி போட்ருக்கீங்க. இது எங்க போய் முடியும் தெரியுமா?? இந்திய இளைங்கர்கள் வேலை தெரியாதவர்கள் என்கிற நிலமைக்கு கொண்டு விடும்.

Comments:

இப்பொ ஒரு தலைமுறை என்பது 33 வருஷம். அப்படி பார்தா அம்பெத்கர் அரசியல் அமைப்பு சட்டதுல சொன்னதவிட 1/2 தலைமுறைக்கு வாய்ப்பு அதிகம குடுத்தாச்சு.


பிரண்ணா பாலச்சந்தர், அம்பேத்கார் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தாலும், அந்த இடஒதுக்கீடே ஐ.ஐ.டி.யில் 1973க்குப் பின்னாடிதான் வந்தது. அதுவும் கூட இன்னும் முழுமையாக அமலாகல, அதுக்கு ஏராளமான தடைக்கற்களை வைச்சிருக்கீங்க. ஐயா திறமைன்னா எதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா? மனு நீதின்னு ஒண்ணு வைச்சிருக்கீங்களே அதன் பெயரால் நீங்க செஞ்ச அட்டகாசம் கொஞ்சமா? நெஞ்சமா? 3000 வருடமா யாரையும் படிக்கக்கூடாது, படிப்பதை கேட்க்கக்கூடாது, அப்படி யாராவது படித்தால் நாக்கை அறுக்கனும், ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றனும் அப்படியெல்லாம் அடக்குமுறை பண்ணிங்களே. அதனாலத்தான் நாங்கள் இப்ப மிகவும் பிற்பட்ட நிலையில இருக்கோம். எங்களுடைய உரிமையை நீங்க பறிச்சீங்க, அந்த உரிமையைத்தான் நாங்க இப்ப கேக்குறோம்.


நல்லா படிச்சு மார்க் வாங்க முடியாத உங்களால எப்படி இந்த பெரிய கல்லூரியில படிச்சு மார்க் வாங்க முடியும்?

இதத்தான் நாங்களும் கேக்குறோம். உங்களுக்குத்தான் ரொம்ப மூளை இருக்குதே, நீங்க ஏன் ஐ.ஐ.டி.யை பிடித்து தொங்குறீங்க... உலகமே உங்க கையில இருக்கும் போது, உங்க மூளை வைத்து நீங்க நீல் ஆம்°டிராங் மாதிரி நிலவுக்குப்போயி குடியேறிறலாமே!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]