html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: பெண்ணாசை பொல்லாதது... பாகம் 3

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Tuesday, May 09, 2006

 

பெண்ணாசை பொல்லாதது... பாகம் 3

நான் ஆப்பிள வித்த கதையும், வம்பா ஃபோன்ல ஏமாந்த கதையும் உங்களுக்கு தெரியும்.
படிக்கலென்னா கீழ இருக்கு சுட்டி.
நான் போன வருஷம் ஒரு பிரௌசிங் சென்டரல வேலை பார்த்தேன். அது ஒரு காம்ப்ளெக்ஸ்ல கடைசி கடை. நான் வேல பார்த்த கடைக்கு முன்னாடி ஒரு டெய்லர் கடை உண்டு. அதுல டெய்லரா இருந்தது அண்ணன் தம்பி ரெண்டு பேரு. நான் அவங்கள பெரியப்பா, சித்தப்பானு தான் கூப்பிடுவேன். ஆவங்களும் என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. இதுல பெரியப்பா ரொம்ப விவரமானவர். 4 பாஷை தெரியும். நல்லா பேசுவார். சித்தப்பா நம்மள மாதிரி தான். நக்கல் மன்னன்.
எப்பவுமே பிப்ரவரி, மார்ச் மாசத்துல காலேஜ் பிராஜக்ட் அதிகமா வரும். நாங்களும் கஷ்டப்பட்டு வேல பார்த்து குடுப்போம். அப்போ ஒரு வாட்டி வந்தது தான் நம்ம "ஷர்மிளா". நம்ம நிலவு நண்பர் படித்த காலேஜ் தான். பேர் சொல்ல யோசனையா இருக்கு. நான் வழக்கம் போல வேல பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு ஜான்ஸ் காலேஜ் பையன் பயங்கர பிரச்சின பண்ணிகிட்டு இருந்தான்.
அப்போ தான் இந்த பொண்னு அவங்க சித்தப்பா கூட வந்திருந்தாங்க.
"இங்க பிராஜக்ட் பண்ணி குடுப்பீங்களா??"
நான் ஏற்கனவே கடுப்பில இருந்தேனா, "அதான் வெளில போட்ருக்கில்ல? அப்புறம் என்ன கேள்வி?"
"ப்ளீஸ்! கொஞ்சம் அவசரம்"
"என்ன அவசரம்னாலும் இன்னைக்கு மதியம் தான். என்னிக்கு பிராஜக்ட் சப்மிஷன்?"
"ஏப்ரல் 13த்"
"அப்புறம் என்ன? இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்கு. சாயங்காலம் வாங்க!"
"இல்ல! இது கொஞ்சம் நான் பக்கத்துல இருந்து பாக்கணும்"
சரின்னு சொல்லி உக்காந்து இருந்த பையனோட பிராஜக்ட் ப்ரிண்ட் அவுட் எடுத்து குடுத்து அனுப்புறதுக்கு 2 மணி ஆயிச்சு. அதுகுள்ள அவங்க சித்தப்பன் வந்த வரத்து.
"இந்த தமிழ் பாதுகாப்பு இயக்கத்த பத்தி என்ன நினைக்குறீங்க தம்பி??
"நான் தெலுங்கு சார்"
"நான் அந்த இயக்கத்துல முக்கியமான பொறுப்புல இருக்கேன். இன்னைக்கு விஜயா கார்டன்ஸ்ல் மீட்டிங். நீங்க கொஞ்சம் சீக்கிரம் முடிச்சா நல்லா இருக்கும்"
"அப்படியா! சரி சார் நீங்க இந்த ப்ராஜக்ட் பேப்பர குடுத்துட்டு போங்க! நான் பார்த்து வைக்கிறேன்."
அப்போ தான் எனக்கு அவங்க குடுத்தாங்க ஷாக்.
ஒரு பேப்பர்ல ஒரு நூறு ஆங்கில கவிஞர்கள் பேரு. 1790ல இருந்து அப் டு டேட். எல்லார் எழுதின புக்ஸ் வேணும்னு எழுதி குடுத்தாங்க.
"மேடம் நீங்க தப்பா புரின்சுகிட்டீங்க! நீங்க பிராஜக்ட் ப்ரிப்பேர் பண்ணி குடுத்தா நாங்க டைப் பண்ணி தருவோம். அவ்ளொதான். நான் உக்காந்து எல்லாரோட புக்கையும் தேட்றதெல்லாம் நடக்காத காரியம்!"
"பிளீஸ்! எங்க கேட்டாலும் இப்படித்தான் சொல்றாங்க! கொஞ்சம் பண்ணி குடுங்க"
"பண்ணலாம் ஆனா ஒரு கண்டிஷன், நான் பிரௌஸ் பண்றதுக்கும் சேர்த்து தான் பில் போடுவேன், சரியா??"
சரின்னு சொல்லிட்டு அவங்க கிளம்பி போய்ட்டாங்க. இருந்த டென்ஷன்ல அவங்க மூஞ்சியெல்லாம் பார்க்கல! அந்த சித்தப்பா மூஞ்சி மட்டும் நினைவுல இருந்தது. எப்படியும் அவர் வருவார்ல, அப்போ பிராஜக்ட் பத்தி பாத்துக்கலாம்னு இருந்துட்டேன்.
மதியம் சாப்பிட நேரமானதும் டெய்லர் சித்தப்பா என்ன தேடி வந்துட்டார். "என்ன பிரஸ்! சாப்பிடல?"
"சாப்பிடணும் சித்தப்பா! இன்னைக்கு ஒரு பிராஜக்ட். சரி பண்ணி குடுக்கணும்"
"ஆமா நான் கூட பார்த்தேன், பிரபாகரன் வந்திருந்தாரே?"
"பேரெல்லாம் தெரியாது! ஏதோ தமிழ் பாதுகாப்பு அப்படி இப்படின்னார்"
"இவனத் தெரியாத உனக்கு. நம்ம ஊர்ல இருக்குற மெஜாரிட்டி ஜாதி அவன். வக்கீல். அவங்க கட்டபஞ்சாயத்துகெல்லாம் இவந்தான் முன்னால நிப்பான். சீக்கிரம் கழட்டி விட்டு காச வாங்கி போடு. இல்லன்னா பிரச்சினை தான்."
இது என்னடா இது புது சோதனை! சரி அந்த பொண்ணுக்கு முதல்ல முடிச்சிடுவோம். அப்படின்னு அந்த பிராஜக்ட எடுத்து வெச்சு உக்காந்தா! கடுப்பாயிடுச்சு. முதல் 3 கவிஞர்கள தாண்ட்ரதுகுள்ள 30 பக்கத்துக்கு மேல போயிடுச்சு. எனக்கு அவன் காசு தருவானா தரமாட்டானானு யோசனை.
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே மணி ஏழு ஆயிட்டுது. எனக்கு ஒரு பழக்கம். சாயங்காலம் பன்னீர் சோடா குடிச்சாத் தான் எனக்கு அடுத்து வேல ஓடும். சரினு சொல்லை கல்லாவுல இருந்து கொஞ்சம் ரூவா எடுத்துட்டு கீழ போய் குடிச்சிட்டு மேல வந்தா நமக்கு முன்னாடி ஒரு பொண்ணு படி ஏறிகிட்டு இருந்தா, சரி சித்தப்பா கடைக்கு சுடி தைக்க வந்த பொண்ணு போல இருக்குனு நினைச்சு விட்டுட்டேன்.
அதாவது எனக்கு சித்தப்பாவுக்கும் ஒரு டீலிங். அவர் கடைக்கு அழகான ஒரு பொண்ணு வந்தா, தண்ணி வேணும்னு சொல்லி அனுப்புவார். நான் உடனே அவர் கடைக்கு போய் அவங்க முன்னாடி நிப்பேன். சிலது கண்டுக்கும், சிலது கண்டுக்காது. அதனால அந்த பொண்ணு சித்தப்பா கடைக்கு போனா நமக்கு தகவல் வரும்னு சொல்லி மெதுவா போனேன். நான் இல்லாதப்ப பாலா சென்டர பார்த்துப்பான். அந்த பொண்ணு பாலா கிட்ட விசாரிச்சு இருக்கு, காலைல பிராஜக்ட் குடுத்தேன், அவர் எங்க அப்படின்னு. அதுக்குள்ள நானே போய்ட்டேன்.
"வாங்க! உங்க பிரஜக்ட் ரொம்ப கஷ்டமா இருக்குங்க! உங்க சித்தப்ப ரூவா தரேன்னு சொன்னார். ஆனா இது ஒரு 400 பக்கத்துக்கு மேல போகும் போல இருக்கு. கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்"
"ஒண்ணும் பிரச்சினை இல்லை!"
என்னடா இது புது குரலா இருக்கேனு பார்த்தா இந்த பொண்ணோட அப்பா. இவரு பேரும் பிரபாகரனாம்
அதெப்படி அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி பேர் வெச்சாங்க?? நமக்கெதுக்கு.
"சரி! இதுவரைக்கும் நீங்க கலெக்ட் பண்ண மேட்டர் பார்க்கலாமா??" அப்படின்னு சொல்லி அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து உக்காந்துகிட்டா.
நானும் எந்த கவிஞர் பத்தி எல்லாம் எடுத்தேனோ அதெல்லாம் காமிச்சேன்.
அந்த பொண்ணுக்கும் ரொம்ப சந்தோஷம். இப்படி போச்சுன்னா4 நாள்ல வேலை முடிச்சிடலாம்னு சொன்னா,எல்லாம் பீட்டர் தான். தப்பித் தவறி ரெண்டு மூணு வார்த்தை தான் தமிழ்ல வந்தது.
"ரொம்ப தாகமா இருக்கு தண்ணி கிடைக்குமா" அந்த பொண்ணு கேட்டா.
நான் எப்பவுமே தண்ணி எடுத்து வைக்க மாட்டேன். சித்தப்பா கடைல தான் போய் குடிக்குறது.
பாலாவ அனுப்பி தண்ணி வேணும்னு சொல்லி வாங்கிட்டு வாடானு அனுப்பி வெச்சேன்.
அவரு அத கோட் வேர்ட்னு நினைச்சுகிட்டு வந்துட்டார்.
'சித்தப்பா! தண்ணி எங்க??"
"என்ன விளையாடுறியா? தண்ணி வேணும்னா நம்ம பாஷைல என்ன அர்த்தம்?"
அதுக்குள்ள நிலமை புரிஞ்சி பாலா போய் தண்ணி கொண்டு வந்துட்டான்.
அந்த பொண்ணுன் அவங்க அப்பாவும் போனதுக்கப்புறம் சித்தப்பா சொன்னார்.
"ஏல! பிள்ள நச்னு இருக்கே!எதுவுன் ஐடியா போட்ருக்கியா??"
"நீங்க வேற சித்தப்பா, ஓனருக்கு தெரிஞ்ச பிரச்சினை ஆயிடும்"
"அப்படி இல்லடே! நீ ஒண்ணு பண்ணு நாளைக்கு அவ வரும்போது நல்லா பேச்சு குடு!"
"எங்க!! அவங்க டாடி தான் கூடவே உக்காந்திருப்பார்ல"
"அதான் பிரச்சினையா!! நான் பார்த்துக்குறேன் விடு"
அடுத்த நாளைக்கு சும்மா நச்சுனு போய் உக்காந்தாச்சு.
சனிக்கிழமைங்றதால அந்த பொண்ணும் மதியம் 3 மணிகெல்லாம் வந்திடுச்சு. சித்தப்பா கடைக்கு வந்து அந்த பொண்ணோட டாடிய என்னமோ சொல்லி கூப்டு போய்ட்டார்.
இன்னைக்கும் அந்த பொண்ணு செம பீட்டர்.
நான் "மேடம், நீங்க இங்லீஷ் லிட்ரெச்சரா இருக்கலாம், அதுக்காக இங்லீஷ்லயேவா பேசுரது! எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். அப்படின்னு கப்ஸா வுட்டேன்
அவளும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தமிழ் பேசிகிட்டு இருந்தா, இந்த டைம் பாத்து என் பெங்களூர் பிரண்ட் ஒருத்தர் கால் பண்ணிட்டார். அவர்கிட்ட இங்லீஷ்ல பேசியாக வேண்டிய நிலைமை. நான் பேச ஆரம்பிச்சதுல இருந்து அவ பார்த்துகிட்டே இருந்தா, பேசி முடிச்சதும் "யாரோ எனக்கு இங்லீஷ் தெரியாதுனு சொன்ன மாதிரி இருந்தது??" அப்படின்னா
"ஆமாங்க! உங்களுக்கும் தமிழ் தெரியும் எனக்கும் தெரியும் அப்புறம் எதுக்கு நாம இங்லீஷ்ல பேசணும்?"
"என் முழு பேர் தெரியுமா உங்களுக்கு??"
"சொல்லுங்க"
"ஷர்மிளா ப்ரிய வர்த்தனே"
"சிங்களம்??இங்க என்ன பண்றீங்க?"
"ஏன் நாங்க எல்லாம் இந்தியாவுல இருக்க கூடாதா?"
"அப்படி இல்ல"
"எங்க அப்பா இலங்கைல பிஸினஸ் பண்றேன்னு சொல்லி, எல்லா சொத்தையும் அழிச்சுட்டார், நேத்து வந்தார்ல எங்க சித்தப்பா, அவர் தான் இப்பொ என்னயும் என் தங்கச்சியயும் படிக்க வெச்சுகிட்டு இருக்காங்க. அம்மா சுடிதார் தைச்சு குடுப்பாங்க. ஏதோ வாழ்க்கை போய்கிட்டிருக்கு"
"சாரிங்க"
"எதுக்குங்க?"
அவங்க அப்பா வர்றதுக்குள்ள நிறைய பேசினோம். நண்பர்கள அறிமுகப்படுத்தினேன். எல்லார்கிட்டயும் நல்ல பேசினாங்க. இப்பொ எனக்கு அவங்க மேல ஒரு பரிதாபம் வந்தது. முதல்ல இவங்க பிராஜக்ட முடிக்கணும்.
5.30 மணிக்கு அவங்க அப்பா வந்து "என்னம்மா முடிஞ்சுதா??"னு கேட்டார்
"முடியலப்பா! இன்னும் 2 நாள் ஆகும் போல இருக்கு"
"ஏங்க! நான் வேணும்னா முடிச்சு வைக்கிறேன்! நீங்க ஏன் அலையுறீங்க?"
"ஏன்! நான் வர்றதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா??"
"சே சே! அப்படி எல்லாம் இல்லை"
"அப்போ திங்கள் சாயங்காலம் பார்க்கலாம்"
அவ கிளம்பி கீழ போகும்போது பார்த்தேன், அவங்க அப்பா கூட ஸ்கூட்டர்ல பின்னாடி உக்காந்து சென்டெர பார்த்துகிட்டே போனா.
எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. திங்ககிழம மதியம் சரியா 12.30 மணிக்கு ஒரு கால்.
"நான் தான் ஷர்மி (!) பேசுறேன். பிராஜக்ட் எந்த அளவு இருக்கு"
"அதான் ஈவினிங் வரப் போறீங்கள்ல, அப்புறம் என்ன இப்போவே கால்?"
"ஏன் நாங்க பண்ணக் கூடாதா??"
"உங்களுக்கு இல்லாத உரிமையா??"
பின்னாடி நிறய பொண்ணுங்க நின்னு கத்திகிட்டு இருந்தா மாதிரி சத்தம், சரிதான் பொண்ணு பிரண்ட்ஸ் மத்தில மாஸ் காமிக்குது.
"ஏங்க! சிக்னல் சரி இல்ல, ஒரு 5 நிமிஷம் கழிச்சு பேசுறீங்களா?"
"சரி"
உடனே சித்தப்பாவ கூப்டு அந்த பொண்ணு காலேஜ்கு கிளம்பியாச்சு. அவங்க காலேஜ் முன்னாடி ஒரு ஒரு ரூபா காயின் பூத் இருக்கு. அங்க இருந்து தான் பண்ணணும்.
கரெக்டா அங்க போய் இறங்கவும் கால் வருது. நான் அந்த கடைக்கு நேர் எதிர்ல நின்னுகிட்டு பேசினேன்.
அந்த பொண்ண சுத்தி ஒரு 4 பொண்ணுங்க நின்னுகிட்டு இருந்தாங்க, எல்லாம் இவ என்கிட்ட பேச பேச கிண்டல் பண்ணிகிட்டு இருந்தாங்க.
"என்னங்க! உங்க நட்பெல்லாம் பயங்கர கிண்டல் போல இருக்கு?"
"ஆசதான்! நான் தனியாதான் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன்"
"நம்பிட்டேன்"
"நம்பலையா?"
"அதிருக்கட்டும்! இந்த சுடிதார் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு"
"தாங்க்ஸ், ஐயோ எங்க இருக்கீங்க??"
"உங்க பின்னாடிதான்"
நானும் சித்தப்பாவும் நின்னுகிட்டு இருந்தோம்! கூட இருந்த பொண்ணுங்க எல்லாம் ஓடிடுச்சுங்க.
இவ வழிஞ்ச வழிசல பார்க்கணுமே.
3 நாள்ல பிராஜக்ட் நல்லா முடிஞ்சது, அவள அதுக்கப்புறம் நான் பார்க்கவே இல்லை.
எனக்கு ஒரு மாதிரி இருந்தது, சித்தப்பா பார்த்துட்டார்.
"என்னடே அந்த பிள்ளைகிட்ட பேசணும் போல இருக்கா??"
"ஆமா! ஆனா வம்பு வந்துடக் கூடாது"
"அதுக்குத்தான நம்ம ரோஸி இருக்கா, நீ கவலப்படாத"
ரோஸி! எங்க காம்ப்ளெக்ஸ்ல இருந்த பி.சி.ஓல வேல பார்த்தா. காலேஜ் பசங்க பொண்ணுங்க கிட்ட பேசணும்னா இவகிட்ட தான் வந்து நிப்பாங்க. அழகா கூப்டு குடுப்பா. நல்ல புத்திசாலி, எவ்வளவு பிரச்சினை ஆன சூழ்நிலை ஆனாலும் சமாளிச்சிடுவா.
அங்க தான் இப்போ போனோம்.
"அப்போ நீங்களும் மாட்டிகிட்டீங்களா"
"பேசாம போனப் போடு"
"சரி சரி"
"ஹலோ! ஷர்மி இருக்காங்களா, நான் அவங்க பிரண்ட், நிர்மலா, எப்படி இருக்கீங்க ஆன்டி?"
"...."
"உங்க ஆளு லைன்ல வரும், பேசுங்க!"
நானும் ஆசையாத் தான் காத்துகிட்டு இருந்தேன். அவங்க அம்மாதான் திரும்ப வந்தாங்க.
நான் அவசரப்பட்டு "நான் தாங்க! பிரசன்னா"
"யாருடா நீ? என் பொண்ணுக்கு போன் பண்ற?" அப்படி இப்படினு காச்சி எடுத்துட்டாங்க.
எனக்கு என்ன பண்ணனு தெரியல. போன வெச்சுட்டேன்.
ஒரு 3 நாள் கழிச்சு, சர்மிளா கால் பண்ணாங்க்.
"உங்ககிட்ட் பேசணும், கொஞ்சம் விஜயா கார்டன்ஸ் வரீங்களா"
உடனே கிளம்பி போனேன். அங்க அந்த பொண்ணு உக்காந்து இருந்தது. கூட அவங்க தங்கச்சி வந்து இருந்தாங்க.
"நீங்க ஏன் கால் பண்ணீங்க?"
"இல்லங்க! பிராஜக்ட் முடிஞ்சு போச்சு, எப்போ பார்க்க முடியும்னு தெரியல, அதான்"
"எங்க வீட்ல இதெல்லாம் பிரச்சினை ஆகும், இனி இந்த மாதிரி பண்ணாதீங்க" அப்படின்னு சொல்லிட்டு எந்திரிச்சி போய்ட்டாங்க.
எனக்கு என்ன பேசன்னு தெரியல, தப்பு என மேல தான, ஒரு பொண்ணு சிரிச்சி பேசிட்டாங்க அப்படின்னு உடனே மூவ் பண்ணது எவ்வளவு சீப் பான நடவடிக்கை.
அவங்க மட்டும் தான் போனாங்க. அவங்க தங்கை உக்காந்து இருந்தாங்க
"பிரசன்னா!"
"நான் வேணும்னு பண்ணல, சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க"
"இல்ல, நீங்க கால் பண்ணது எங்க சித்தப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு, அவர் எங்க அக்காவ போட்டு அடி அடின்னு அடிச்சுட்டார். "
"என்னது! உங்க அப்பா என்ன பார்த்துகிட்டு இருந்தாரா?"
"என்ன பண்ண முடியும், இப்போதைக்கு நாங்க அவர் நிழல்ல தான் இருக்கோம், அதான் அக்கா அந்த மாதிரி பேசிட்டா"
"பரவாயில்லீங்க! நான் தான் என்ன ஏதுனு தெரிஞ்சுக்காம, வீணா கால் பண்ணி பிரச்சினை பண்ணிட்டேன். எனக்கு பிடிச்சிருக்குன்னா உங்க அக்காவுக்கும் என்ன பிடிச்சிருக்கணும்னு என்ன இருக்கு?"
"இல்ல அவளுக்கும் உங்கள பிடிச்சிருந்து"
------------------------------------------------------------------------------------------------
இப்படித்தாங்க நான் பெண்ணாசைல பண்ண ஒரு விஷயம் எனக்கு மட்டுமில்லாம அவங்களுக்கும் வேதனை தர்றதா ஆகிடுச்சு. அதனால தான் சொல்றேன், பெண்ணாசை பொல்லாதது.
பெண்ணாசை பொல்லாதது - 1
பெண்ணாசை பொல்லாதது - 2

Comments:
ஸம்ம post பா. ரொம்ப நல்லா இருன்துது. Especially அன்த சித்தப்பா character ரொம்பவெ நல்லா இருந்துது!
 
கலக்கு பிரசன்னா கலக்கு !!!!!!.

அன்புடன்
துபாய் ராஜா.
 
அந்த டெய்லர் சித்தப்பாட்ட சொல்லுங்க இப்படியெல்லாம் சின்னப் பசங்களை உசுப்பேத்தக்கூடாதுன்னு...
 
/// அந்த டெய்லர் சித்தப்பாட்ட சொல்லுங்க இப்படியெல்லாம் சின்னப் பசங்களை உசுப்பேத்தக்கூடாதுன்னு.///
அடடா நான் நேத்திக்கு தான் சார் பதிவுல ஒரு மேட்டர்ல அட்வைஸ் வாங்கிட்டு வந்தேன். அதுக்குள்ள எங்க சித்தப்பாவ வைறியளே! எதோ உங்க பின்னூட்டத்தில அசட்டு சிரிப்பு அப்படி இப்படினு படிச்ச ஞாபகம்.
சும்மா சொன்னேன் தருமி சார். இந்த விஷயத்துக்கு அப்புறம் பொண்ணுங்க மேட்டர பத்தி என்கிட்ட பேசுறதயே அவர் விட்டுட்டார்.
 
/// கலக்கு பிரசன்னா கலக்கு !!!!!!.///
வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி
துபாய் ராஜா
 
சும்மா சொல்லக்கூடாது
நம்பும்படியா கற்பனை செய்து
நல்ல ஸ்ட்டைல்லெ எழுதுறீங்க
a different style
கலக்குங்க
 
இது முழுக்க முழுக்க கற்பனை இல்ல சிவஞானம்ஜி. கற்பனையும் கலந்து இருக்கு. அம்புட்டுதேன்.
பிரசன்னா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]