என்ன இன்னைக்கு!! சே மறுபடியும் ஒரு ஒண்ணுமில்லாத நாள். வேற என்ன சொல்ல முடியும். முக்கியமான ஒண்ணும் நடக்கல, முக்கியமான யாரையும் பார்க்கல.என் வாழ்க்கை புத்தகத்துல கிழிக்கப் பட வேண்டிய ஒரு பக்கம்.
சொந்த ஊர விட்டு சென்னைக்கு பிழைக்க வந்த 2 வருஷம் ஆச்சு. சம்பளம் நல்லா தான் குடுக்குறாங்க. ஆனா மனசு சொந்த ஊரயும் அம்மா அப்பா தம்பி எல்லாரயும் தேடத்தான் செய்யுது.
இத எல்லாம் இப்போ 23சி அயனாவரம் போய் சேர்ற வரைக்கும் தான் யோசிக்க வேண்டி இருக்கும். அங்க போய் இறங்கின உடனே மத்த கவலைகள் என்ன ஆட்கொள்ளுது.
க்ரீரீரீச்.....
சுத்தம் இந்த டிரைவர் யாரையோ இடிச்சுட்டான். நம்ம கலாச்சாரப்படி ஜன்னல் வழியா வெளிய எட்டிப் பார்த்தேன். செம அடி. பாவம் பையன் 20 வயசு தான் இருக்கும். ஸ்பாட் டெட்.
பார்த்துகிட்டு இருக்கும் போது என் காதுல ஒரு சூடான மூச்சு. "என்ன சார் ஆச்சு?" ஆண்டவா பெண்கள் குரலுக்கு இப்படி மயக்குற சக்தி உண்டா. திரும்பி பார்த்தேன். நல்ல அழகான பொண்ணு. நாகரீகமா டிரஸ் பண்ணி இருந்தா. அவ கேட்டதுக்கு எதோ ஒரு பதில சொல்லிட்டு கம்னு இருந்துட்டேன்.
ஆனா ஏன் இந்த பொண்ணு என்ன இப்படி டிஸ்டர்ப் பண்றா. மேல கம்பில அவ கையும் என் கையும் உரசும் போது ஏன் எனக்கு என்னமோ பண்ணுது??
திரும்பி பார்த்தேன். அவளும் என்ன பார்த்து சிரிக்குற மாதிரி எனக்கு தோணிச்சு. நான் கைய நவுட்டுனா, அவளும் என் கை பின்னாலயே அவ கைய கொண்டு வர்றா.
என்ன படிக்கட்டு பக்கம் போறா?? இறங்க வேண்டிய ஸ்டாப் வந்து விட்டுருக்குமோ? ஏன் இறங்கும் போது என்ன அப்படி பார்த்துட்டு போறா??
நானும் பின்னாலயே இறங்கினேன். என்ன அவ பார்த்திருக்கணும்.
நான் எதோ தப்பான எண்ணத்துல அவள ஃபலோ பண்றேன்னு நினைச்சு திடீர்னு ரோடு கிராஸ் பண்ணா. அவ்ளொதான் "வீல்"னு ஒரு சத்தம். ரத்தம் ரோடு பூரா ஓடுது. "நல்ல டீசண்டான ஃபேமிலி போல இருக்கே", "இவ்வளவு அழகான பொண்ணுக்கா இப்படி ஒரு முடிவு?" ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி வருத்தப்ப்டுறாங்க. நான் சத்தமில்லாம அழுதுகிட்டு இருக்கேன்.
"என்ன சார் ஆச்சு" பார்த்துகிட்டு இருக்கும் போதே அந்த குரல், அந்த மூச்சு. என் பின்னாடி நின்னு சிரிக்குறா.
அவ்வளவு தான் நான் கத்திகிட்டே ஓட ஆரம்பிச்சுட்டேன்.
"--த்தா கண்ணில்ல?"னு திட்டின தாண்டி, பாத்து சார்னு கத்துனவனத் தாண்டி ஓடிட்டேன்.
"சார்! பாத்து லாரி!!!!"
Sorry It was too late...
-------------------------------
பி.கு: என் இந்த கதய பார்த்துட்டு நீங்க என்ன சொல்லுவீங்கன்றத நான் தலைப்பாவே வெச்சுட்டேன். அதத் தவிர வேற எதுனா சொல்லுங்களேன்.