html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, May 14, 2006

 

பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

நம்ம வலைப்பதிவு உலகத்துல நம்ம சீனியர்ஸ் நிறைய பேரு கல்யாணம் பண்ணிகிட்டு எப்படி நல்ல பேர் வாங்கறதுன்னு தெரியாம திண்டாடிகிட்டு இருக்காங்க. அவங்களுக்காகத் தான் இந்த பதிவு.

கல்யாண வாழ்க்கைல ஆம்பிளைகளுக்கு ஒரே ஒரு லட்ச்சியம் தான் இருக்கணும். அது தான் மனைவிய சந்தோஷப்படுத்துறது.
இப்போ விளையாட்ட ஆரம்பிப்போம், அதாவது மனைவிக்கு பிடிக்குற மாதிரி நீங்க செஞ்சீங்கன்னா +ல பாயிண்ட்ஸ் கிடைக்கும், மாத்தி செஞ்சா -ல கிடைக்கும். அவங்க எதிர்பார்த்தத செஞ்சுட்டீங்கன்னா, சாரி! உங்களுக்கு பாயிண்ட் எதுவும் கிடைக்காது.

கடமைகள்:
படுக்கை தட்டி போடுறது : +1
அழகான தலையணை வைக்க மறந்தா: -
உங்க போர்வைய அந்த படுக்கைல வைச்சா : -1
காலைல உங்க மனைவிக்கு பெட்ல வெச்சு காஃபி குடுத்தா : +5
ராத்திரி ஏதோ சத்தம் கேட்டு நீங்க முழிச்சா : 0
சத்தம் கேட்டு நீங்க முழிச்சு அது ஒண்ணுமில்லைனா : 0
சத்தம் கேட்டு நீங்க முழிக்க அங்க ஏதோ இருக்குன்னா : +5
அதை நீங்க கைல கிடைச்ச குடையால அடிச்சா : +10
அது உங்க மனைவியோட செல்ல பூனையா இருந்தா : -40

பொது விழாக்களில்:
நீங்க கடைசி வரக்கும் அவங்க கூட இருந்தா: 0
நீங்க உங்க ஃப்ரெண்ட் கூட பேசிகிட்டு இருந்தா: -2
அவங்க பேரு ஸ்வேதாவா இருந்தா: -4
அவங்க நல்லா பாடுனா: -6
அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னா: -18

மனைவியின் பிறந்தநாள்:
நீங்க அவங்க பிறந்த நாளை ஞாபகம் வெச்சிருந்தா: 0
அதுக்காக அவங்களுக்கு வாழ்த்தும் பூவும் வாங்கிட்டு போனா: 0
நைட் டின்னருக்கு நீங்க ஹோட்டல் கூட்டு போனா: +1
அந்த ஹோட்டல்ல ஏ.சி இல்லைனா: -2
அவங்கள கேக்காம நீங்களே ஆர்டர் பண்ண: -3
சர்வர் அவங்க மேல சாம்பார கொட்டிட்டா: -25

உங்கள் தேகம்:
உங்களுக்கு வெளிய தெரியிற மாதிரி தொப்பை விழுந்தா: -15
அதுக்காக தினமும் உடற்பயிற்சி பண்ணா: +10
உடம்பை பிடிக்காத டிரஸ் போட ஆரம்பிச்சீங்கன்னா: -30
"அது ஒண்ணும் பிரச்சினை இல்ல; உனக்கும் இருக்கு" அப்படின்னு சொன்னா: -900

தர்மசங்கடமான கேள்வி:
இந்த டிரஸ்ல நான் குண்டா தெரியுறேனா அப்படின்னு அவங்க கேட்டு நீங்க
பதில் சொல்ல யோசிச்சீங்கன்னா: -10
எங்க அப்படினு கேட்டா: -35
வேற ஏதாவது பதில் சொன்னா: -20

தகவல் பரிமாற்றம்:
அவங்க ஒரு பிரச்சினை பத்தி உங்ககிட்ட சொன்னா
பரிதாபமான பார்வையோட கேட்டுகிட்டு இருந்தா : 0
அதே மாதிரி 30 நிமிஷம் கேட்டுகிட்டு இருந்தீங்கன்னா : +5
உங்களுக்கு அது மாதிரி நடந்தப்போ நீங்க எப்படி மீண்டு வந்தீங்கன்னு சொன்னா: +50
அவங்க சொல்றத கேக்குற மாதிரி பாவலா பண்ணிட்டு கிரிக்கெட் பாத்துட்டு "நீங்க என்ன நினைக்கிறீங்க"னு கேக்கும் போது அசடு வழிஞ்சா: -50
தொடர்ந்த் அரை மணி நேரம் டி.வி பார்க்காம அவங்க சொல்றத கேட்டா: +100
நீங்க தூங்கிட்டதுனால தான் அப்படினு அவங்களுக்கு தெரிஞ்சா: -200.

இதுதாங்க இல்லறத்தின் வெற்றி ஃபார்முலா, இதை ஃபாலோ பண்ணி நல்லா இருங்க!!
அன்பில்
பிரசன்னா

Comments:
ஹாய்

இந்த மாதிரி பாயின்ட் பாயின்டா எழுதி ப்ளாக்ல போட்டா : - 500.

நீங்க ப்ளாக்ல போட்டத படிச்சுட்டு மகளீர் கருத்து பதிஞ்சா,ஒவ்வொரு கருத்துக்கும் : - 1000

அப்படி பதிஞ்ச கருத்துக்கள்ள " நீங்க ரொம்ப நல்லா எழுதரீங்க.. உங்க எழுத்துப் போலவே நீங்களும் ரொம்ப அழகா இருப்பீங்களா"ன்னு ஒரே ஒரு மகளிர் கேட்டிருந்தா கூட : - 100000000000
-M. Padmapriya
 
நீங்க அவங்களோட துணியை துவச்சி கொடுத்தா: +25

அயர்ன் செய்து கொடுத்தா: +50

துவைக்கும் போதும் அயர்ன் செய்யும் போதும் கலரோ, துணியோ டேமேஜ் ஆனா: -75

காய்கறி வாங்கி வந்து கொடுத்தா: +15

வாங்கும் போது சரியா பார்க்காம சொத்தையும், அழுகின தக்காளியும் வாங்கி வந்தா: -75

ஊர் கதையும் உலகை கதையும் சொந்த கதையும் சலிக்காம பேசிக்கிட்டே இருந்தா: +60

புது டெக்னாலஜியும், வலைப்பதிவையும் பற்றி பேசிக்கிட்டிருந்தா: -45

மாசத்துக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்தா: +33

நீங்க வாங்கி கொடுத்ததைவிட உங்க அம்மாவுக்கு ஒரு ரூபாய் அதிகம் உள்ள புடவை வாங்கினா: -333

இது போல எழுதிகிட்டே போகலாம்............
 
நான் துரும்பு தான் கிள்ளி போட்டேன், நீங்க மலையளவு சொல்றீங்க. நன்றி..
 
////அப்படி பதிஞ்ச கருத்துக்கள்ள " நீங்க ரொம்ப நல்லா எழுதரீங்க.. உங்க எழுத்துப் போலவே நீங்களும் ரொம்ப அழகா இருப்பீங்களா"ன்னு /////
சரி உங்களுக்கு -100000000000
 
அன்பில் உங்கள் சொந்த ஊரா ப்ரசன்னா?
 
அப்படி எல்லாம் இல்ல குமரன் சார். சும்மா ஒரு பிலிமுக்கு அப்படி போடுறது. அன்பில்னு ஒரு ஊர் இருக்குறதே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்.
பிரசன்னா
 
எவ்வளவு கடுமையாக முயன்றாலும் எங்களவர்(எங்க லவர்-))) ஜீரோ பாயிண்ட் கூட எடுக்க வில்லை.
எடுக்க விட்ருவோமா என்ன ? :-)))
 
///"பெண்களை புரிந்து கொள்வது எப்படி?"///
தலைப்பே முற்றிலும் தவறு. பெண்களைப் புரிந்துகொள்வது என்பது சாத்தியமே அல்ல.

"பெண்களைப் புரிந்துகொள்வது எப்படி?" என தலைப்பு வைப்பதற்குப் பதிலாக "இல்லாத ஊருக்கு வழி தேடுவது எப்படி?" என விவாதிக்கலாம் :-)).
 
வாங்க முத்து இப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு என்னால பேச முடியலியே என்ன பண்ண??
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]