html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: சனிக்கிழமை சூப்பர் அடிதடி திருவிழா!!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, May 14, 2006

 

சனிக்கிழமை சூப்பர் அடிதடி திருவிழா!!


சனிக்கிழமை யாராவது பிரணாய் ரய் அவர்களின் செய்தி தொலைகாட்சியான NDTV பார்த்தீர்களா??
இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மும்பை மருத்துவ மாணவர்கள் மீது தடியடி நடத்தப் பட்ட காட்சிகளை ஒளிபரப்பினார்கள.
பார்க்கிறது செய்திகள் தானா இல்லை ரங் தே பசந்தி படத்தின் காட்சி்சி தானா என்பது போல் இருந்தது. போலீஸாரையும் மொத்தமாக குற்றம் சொல்லிவிட முடியாது. உண்ணாவிரத போரட்டமாக இருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து. மாணவர்கள் அணியாக புறப்பட்டு ராஜ்பவனை நோக்கி சென்ற போது தான் போலீஸார் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால் மசியாத மாணவர்கள் மீது அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தான் சர்ச்சைக்கு உரியது. மாணவர்கள் தங்கள் கோரிக்கை வைப்பதற்காக ஆளுனரை சந்திக்க செல்லும் போது கலவரம் எவ்வாறு ஏற்படப் போகிறது. தலித் தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது பிரச்சினை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை மாணவர்களுடனும் அதை செய்து இருக்கலாம்.அதை விட்டு "உன் மேல் சாராயத்தை தெளித்து நீ குடித்ததாக வழக்கு போடுவேன்" என சொல்வது நன்றாகவா இருக்கிறது. பெண்மை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் அந்த பெண் மருத்துவர்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட காடசி்சி்்சிகளை பார்த்திருக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் போலிஸாரின் தடியடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களை வைத்தே இன்னும் தென் மாவட்டங்களில் ஒருவர் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நான் இந்த பதிவ எழுதியவுடன் வரும் பின்னூட்டம் "3000 வருஷம் நாங்க வாங்கினோம் இப்பொ நீங்க வாங்குங்க" என்பதாகத் தான் இருக்கும். தங்கள் கருத்தை வலியுறுத்த ஆளுனரை சந்திக்க சென்றவர்களுக்கு இந்த கதியா?
"அத்துமீறி நுழையும்போது தான் அவர்களை தடுக்க வேண்டி வந்தது. நாங்கள் தடியடி நடத்தவில்லை" என ஒரு காவல்துறை அதிகாரி சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் தடியடி நடத்தியது கோப்பு காட்சிகளில் இருக்கிறது.
இதன் விளைவாக ஞாயிற்று கிழமை 2000 மருத்துவர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தானே தவிர வேறு யாரும் இல்லை. சென்ஸிடிவ் ஆன இந்த பிரச்சினைக்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்.
இப்போதைக்கு இது பற்றி அறிக்கை தரச் சொல்லி காவல்துறையை மகாராஷ்டிர அரசு கேட்டுள்ளது. என்று தணியும் இந்த அடக்குமுறை.

Comments:
அடேங்கப்பா! உங்க ஆட்கள் அதாவது அந்த அடிபட்ட ஆட்கள் எல்லாம் புனித ஆத்மாக்களா? அவங்க மேல தடியடி நடத்தவே கூடாதா??? என்னய்யா உங்க நியாயமும் மண்ணாங்கட்டியும்.
பாவாணன்
 
//தலித் தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது பிரச்சினை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை மாணவர்களுடனும் அதை செய்து இருக்கலாம்.//
இதில் தலித் தலைவர்கள் எங்கே உள்ளே வந்தார்கள்?
//தாமிரபரணி ஆற்றில் போலிஸாரின் தடியடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களை வைத்தே இன்னும் தென் மாவட்டங்களில் ஒருவர் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.//

இதில் என்ன தப்பு இருக்கிறது..

தொடர்ந்து.. உங்கள் பதிவில் மறைமுகமாக கூட இல்லை.. நேரடியாகவே சாதிய குணம் வெளிப்படுகிறது.
நீர் அய்யர் தானே?
 
பிரசன்னா, உடனடியாக Comments moderation ஐ enable செய்யவும். இல்லை என்றால் தேவை இல்லாத ஜந்துக்கள் வந்து பின்னூட்டம் இட்டுச் செல்லும்..

வெளி நாட்டில் இருப்பதினால் NDTV பார்க்க முடியவில்லை, ஆனால் இந்த விஷயம் கண்டனத்திற்குறியது.

போராட்டம் எல்லாம், அறிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத் தான் சொந்தம்! மற்றவர்கள் எல்லாம் போராடக் கூடாது போலும்.!!

வஜ்ரா ஷங்கர்.
 
என்ன செய்வது பிரசன்னா,அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாத எந்த ஒரு போராட்டமும் அங்கீகரிக்கப்படாத
போராட்டமாகவே நம் நாட்டில் கருதப்படுகிறது.

அன்புடன்
துபாய் ராஜா.
 
அப்படியே அதர், மற்றும் அனானி ஆப்ஷன்களையும் நீக்கிவிடுவது நல்லது...பல இழி பிறவிகள் இதைத் தான் பயன்படுத்தி "தூய தமிழில் அர்ச்சனை" செய்யும்...

வஜ்ரா ஷங்கர்.
 
//
தொடர்ந்து.. உங்கள் பதிவில் மறைமுகமாக கூட இல்லை.. நேரடியாகவே சாதிய குணம் வெளிப்படுகிறது.
நீர் அய்யர் தானே?
//

பிரஸன்னா,

அய்யர் ஆக்கிட்டாங்களா உங்களையும்...! வாழ்துக்கள். இதே ரேஞ்சில் எழுதிக் கொண்டிருந்தால், இந்துத்வாவாதி, இந்து அடிப்படைவாதி என்று முத்திரை குத்தப் படுவீர்கள்.

வஜ்ரா ஷங்கர்.
 
//"தூய தமிழில் அர்ச்சனை" செய்யும்..//
நமது எண்ணம் அதுவல்ல ஷங்கர் சார்!
அப்படி எழுது கிறவனை எதிற்கும் ஆட்களில் நானும் ஒருவன்.
தவிர திரு.பிரசன்னா.. மின்னஞ்சல் முகவரி வேறு கொடுத்து இருக்கிறார்.திட்டுவதாக இருந்தால் அது போதும்.
மேட்டுக்குடி மக்கள் தான் சும்மா சும்மா தலித்துகளை வம்புக்கு இழுக்கிறார்கள். அதனால் தான் கேட்டேன்.
தவிர்.. நான் தலிதோ, உயர் சாதிக்காரனோ கிடையாது.
பொயர் சொல்லுவதிலும் எனக்கு வருத்தமில்லை.
அன்பன்
விடுதலை.
 
///இதில் தலித் தலைவர்கள் எங்கே உள்ளே வந்தார்கள்?///
நான் பேச்சு வார்த்தை பத்தி கருத்து எடுத்துப்பீங்கனு தான் அந்த சொற்றொடர அடிச்சேன். சொல்லி வெச்சா மாதிரி தப்பா எடுத்துகிட்டீங்க.
///உங்கள் பதிவில் மறைமுகமாக கூட இல்லை.. நேரடியாகவே சாதிய குணம் வெளிப்படுகிறது.
நீர் அய்யர் தானே?///
இதுக்கு நான் என்ன பதில் சொன்னா நீங்க ஒத்துப்பீங்க? நான் இந்தியன் அப்படின்னு சொன்னா இல்ல நாங்க தான் மண்ணின் மைந்தர்கள் நீங்க கைபர் போலன் கண்வாய் வழியா வந்தீங்கனு வரலாறு பேசுவீங்க. நான் இந்த கேள்விக்கு பதில் சொல்றதா இல்லை. ஏற்கனவே ஒருத்தர் டிக்ளர் பண்ணித் தானே எல்லா பிரச்சினையும் வந்தது.
 
///வெளி நாட்டில் இருப்பதினால் NDTV பார்க்க முடியவில்லை, ஆனால் இந்த விஷயம் கண்டனத்திற்குறியது.///
அந்த தொலைக்காட்சிக்கு வலைதளம் இருக்கிறது ஷங்கர் சார்.www.ndtv.com நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
///அப்படியே அதர், மற்றும் அனானி ஆப்ஷன்களையும் நீக்கிவிடுவது நல்லது...பல இழி பிறவிகள் இதைத் தான் பயன்படுத்தி "தூய தமிழில் அர்ச்சனை" செய்யும்...///
அதெல்லாம் உங்கள மாதிரி 100,150னு பின்னூட்டம் அடிக்குறவங்க வைக்குறது. நமக்கு வர்றதே 1 இல்ல 2. வர்றது அனானி தான். அவங்களயும் தடுத்தா எப்படி. சரி அப்படி எதுனா வந்தா எடுத்து விட வேண்டியது தான்.
 
///என்ன செய்வது பிரசன்னா,அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாத எந்த ஒரு போராட்டமும் அங்கீகரிக்கப்படாத
போராட்டமாகவே நம் நாட்டில் கருதப்படுகிறது.///
அதை மாத்தணும்னு தான் எல்லாரும் கஷ்டப்படுறாங்க. வோட்டு வங்கிக்கு ஆசைபட்டு மற்ற கட்சிகளும் பேசாமல் இருக்கின்றன. அது தான் வருத்தம்.
 
///நமது எண்ணம் அதுவல்ல ஷங்கர் சார்!
அப்படி எழுது கிறவனை எதிற்கும் ஆட்களில் நானும் ஒருவன்.
தவிர திரு.பிரசன்னா.. மின்னஞ்சல் முகவரி வேறு கொடுத்து இருக்கிறார்.திட்டுவதாக இருந்தால் அது போதும்.///
மிகவும் சந்தோஷம் விடுதலை சார். எனக்கு பட்டத எழுதினேன். நான் இருக்குற இடத்துல தலித் தலைவர்கள் அடிக்கடி இந்த மாதிரி சாலை மறியல் பண்றதையும் அதைத் தொடர்ந்து எழும் கலவரங்களும் என்னை பாதித்திருக்கின்றன. அதனாலதான்.
திட்ட மட்டும் இல்ல சார்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்தவும் செய்யலாம்.;-)
 
//பிரஸன்னா,

அய்யர் ஆக்கிட்டாங்களா உங்களையும்...! வாழ்துக்கள். இதே ரேஞ்சில் எழுதிக் கொண்டிருந்தால், இந்துத்வாவாதி, இந்து அடிப்படைவாதி என்று முத்திரை குத்தப் படுவீர்கள்.//
ஏதோ அவங்க ஆசை சொல்லிட்டு போறாங்க..
 
//
நமது எண்ணம் அதுவல்ல ஷங்கர் சார்!
//

அனானி ஆப்ஷனில், விடுதலை அவர்களே,
நல்லெண்ணம் இருந்தால் நல்லது தான். Blogger சேவையைத் துவக்கிக் கொள்ள ஐந்து நிமிடம் கூட ஆகாதே.

//
உங்கள மாதிரி 100,150னு பின்னூட்டம் அடிக்குறவங்க வைக்குறது. நமக்கு வர்றதே 1 இல்ல 2. வர்றது அனானி தான். அவங்களயும் தடுத்தா எப்படி. சரி அப்படி எதுனா வந்தா எடுத்து விட வேண்டியது தான்.
//

பிரஸன்னா,

யாருங்க செஞ்சுரி எல்லாம் அடிக்கிறது, அதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படனும். இல்லெ சமயல் குறிப்பு எழுதனும். :)

ndtv.com பார்க்காமலா...அடிக்கடி இல்லை என்றாலும் அப்பப்ப, பார்துக் கொள்வது தான்.

//
மேட்டுக்குடி மக்கள் தான் சும்மா சும்மா தலித்துகளை வம்புக்கு இழுக்கிறார்கள். அதனால் தான் கேட்டேன்.
தவிர்.. நான் தலிதோ, உயர் சாதிக்காரனோ கிடையாது.
//

ஏங்க, யாராவது தலீத் என்றார்களா? அய்யர் என்றார்களா? எதுவுமே இல்லாமல் சந்தடிச் சாக்கில் அய்யர் தானே என்று கேட்டு விட்டீர்கள்! அவரும் ஆமா அதுக்கென்ன இப்போன்னு சொல்லியிருந்தா நீங்க இப்படி பேசுவீர்களா? உண்மையாகச் சொல்லுங்கள்... நீ அய்யர், தயிர் சாதம், சாம்பார் வடை, என்று எத்தனை பேர் வந்து குத்தியிருப்பாங்க!!?!

ஞாயமா ஒரு பாயின்ட் எடுத்துவெச்சா, உடனே விழுவது முத்திரை தான். இது நிறுத்தப் படவேண்டும் தமிழ்மணத்தில், அப்பொழுது தான் ஜாதி ஒழியும். மேல் தட்டு மக்கள் தலீத் களை வம்பிழுக்கிறார்கள் என்றால் என்ன? இந்தப் பதிவில் அப்படி ஒன்றுமே இல்லையே.

முதல் அனானிப் பின்னூட்டத்தைப் பாருங்கள், "உங்க ஆட்கள்..."

இதில் இழுக்காத வம்பா!!?

வஜ்ரா ஷங்கர்.
 
///அப்படியே அதர், மற்றும் அனானி ஆப்ஷன்களையும் நீக்கிவிடுவது நல்லது...பல இழி பிறவிகள் இதைத் தான் பயன்படுத்தி "தூய தமிழில் அர்ச்சனை" செய்யும்...///
அதெல்லாம் உங்கள மாதிரி 100,150னு பின்னூட்டம் அடிக்குறவங்க வைக்குறது. நமக்கு வர்றதே 1 இல்ல 2. வர்றது அனானி தான். அவங்களயும் தடுத்தா எப்படி. சரி அப்படி எதுனா வந்தா எடுத்து விட வேண்டியது தான்.


" இக்கருத்தை வலைப்பதிவர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு வரும் நல்ல அனானிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் ".

அன்புடன்,
துபாய் ராஜா.
 
This comment has been removed by a blog administrator.
 
பிரசன்னா. உங்கள் பதிவைப் படித்தேன். நன்றாக நடந்ததைக் காட்டியிருக்கிறிர்கள். என்.டி.டிவி காட்டியது ஒரு கோணம் மட்டுமே. இங்கே எனது வீட்டருகே இருக்கும் நண்பரின் உறவினர் மகன் இதில் அடிவாங்கியிருக்கிறான். போலீஸ் மட்டுமல்ல , பிற ஆட்களும் அடித்திருப்பதை அவர்கள் கூறுவது உறுதிசெய்கிறது. மொத்தத்தில் நாகரீகமும், ஜனநாயகமும் அடிவாங்கிச் செத்தது உண்மை.
அன்புடன்
க.சுதாகர்
 
Hi Prasana
Very good Article.I admire at your boldness.Be strong, these quota JOKERS can never last for long time ,they don't even have guts to write their name.
Though these guys got their education thru quota, still can't understand what is written in the article or can't perceive in the way it is inteneded too.They need a very big shift in their attitude.

We need More GURU MOORTHIE'S and CHO RAMASWAMY to keep criticising about these things happening in a so called democratic country.

BTW I am surprised to hear that NDTV has shown this.Most of us were under the impression, he is a strong supporter of Muslims and Backward community.

Good Luck PAL and keep your thoughts as original as this........

with best
Kulipirai Chidambaram
 
இப்பொ எல்லாம் எந்த எந்த மாநிலத்துல யார் ஆட்சினு தெளிவா கண்டுபிடிச்சிடலம். எப்படின்னா, ஒரு மாநிலத்துல கலவரம்னு சன் டி.வி ல ஊதி பெருக்கி காமிச்சா அது கூட்டணில இல்லாத கட்சி ஆட்சி பண்ணுது.
சன் டி.வில இது பத்தி வந்த செய்தி என்ன தெரியுமா?? மகாராஷ்டிரத்தில்ச் டாக்டர்கள் உண்ணாவிரதம். மக்கள் கடும் அவதி.
நல்ல நடுநிலை
 
Dear Mr.Kulipirai Chidambaram
Actually I was not into this type of posts. I was usually a funny guy and u can read my other posts to know it. but the scene in the television really made me to write this blog. comparing me with Manthira moorthy sir and Cho ramasamy sir is really a big garland on my shoulders I will try and keep up ur expectations.
P.S. My English is not so good. Please bear with me.
Prasanna
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]