html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: பிறந்தாலும் பொம்பளையா பிறக்க கூடாது!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Monday, May 15, 2006

 

பிறந்தாலும் பொம்பளையா பிறக்க கூடாது!

சமீபத்தில் என் பதிவில் பின்னூட்டமிட்ட சக வலைப்பதிவாளர் பத்மபிரியா அவர்கள் வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த ஒரு பதிவு நம்மள ரொம்பவே பாதிச்சது.
அப்பா அம்மாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைச்சு போடுற பொண்ணுங்க நிலமை ரொம்ப பாவம்பா. அவங்களுக்கு அவங்க குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தணும், அந்த நேரத்துல அவங்களோட சந்தோஷமோ சின்ன சின்ன ரசனையான விஷயங்களையோ அவங்க அனுபவிக்க முடியாத்து கொடுமையான விஷயம் தான.
நாம ஆம்பிளை பசங்க, சம்பாரிச்ச பணத்த அப்படியே வீட்டுக்கு குடுக்குறது பெரும்பாலும் இல்லை. செல்பேசி ரீசார்ஜ், பைக்குக்கு பெட்ரோல் அப்படி இப்படினு கொஞ்சம் எடுத்துப்போம். ஆனா இந்த மாதிரி சில சுதந்திரங்கள் கூட உழைக்கும் சில நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு கிடைப்பதில்லையே! தப்பி தவறி எதாவது கோவத்துலயோ ஆபீஸ் டென்ஷன்லயோ தப்பான வார்த்தைகள் வந்து விழுந்துட்டா"சம்பாதிக்குற திமிர்"னு அம்மாவே சொல்லும்போது இந்த் பொண்ணுங்களுக்கு சுருக்குன் இருக்காதா???
நான் ஏன் இப்படி எழுதுறேன்னா, எனக்கு தெரிஞ்சு என் கண் முன்னாடி ஒரு அக்காவுக்கு இப்படி நடந்திருக்கு. அந்த அக்கா பேரு இந்துமதி அக்கா. நல்லா படிப்பாங்க. நான் 5த் படிக்கும் போது அவங்க கிட்ட தான் டியூஷன் படிச்சேன். அப்புறம் ரொம்ப படிக்க சொல்றாங்க அப்படின்னு நின்னுட்டேன். ஆனா எங்க அம்மாவுக்கு எப்பவுமே அந்த அக்காவ ரொம்ப பிடிக்கும் அப்படிங்குறதுனால எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.
உண்மைலியே சொல்லணும்னா எங்க இந்துமதி அக்கா ஒரு ஜகஜ்ஜால் ஜில்லி. எவ்வளவு பெரிய வேலை குடுத்தாலும் முகம் சுளிக்காம செய்வாங்க. ஒரு கல்யாண வீட்ட ஒதுங்க வைக்கணும்னா கூட அவங்கள தன் எல்லாரும் கூப்பிடுவாங்க. எனக்கு கூட ஸ்கூல்ல பேச்சு போட்டி, கவிதை போட்டி எல்லாம் வந்தா அவங்க தான் எழுதி தருவாங்க.
அந்த அக்கா காலேஜ் முடிக்கும் போது அவங்க அப்பா ரிடையர் ஆகிட்டாங்க. அப்போ தான் அவங்களுக்கு பிரச்சினை ஆரம்பிச்சது. உடனே ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டிய நிலமை. அவங்களுக்கு ரெண்டு தம்பி. ஒருத்தன் காலேஜ், இன்னொருத்தன் 10த். உங்களுக்கே தெரியும் எவ்வளவு கஷ்டம் அப்படின்னு. ரெண்டு பேரும் எக்ஸ்ட்ரா செலவு ஒண்ணும் வைக்கல அப்படினாலும், பீஸ், அது இதுனு ரொம்பவே செலவு.
கடவுள் புண்ணியத்துல ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சது. அவங்க அப்பாவுக்கு என்னமோ செங்கோல் கைமாறுனா மாதிரி ஒரு ஃபீலிங். அவ்வளவு தான் டார்ச்சர் ஆரம்பிச்சது. கொஞ்சம் வேலைல இருந்து வர லேட் ஆனா கூட "எவன்கூட சுத்திட்டு வர?" அப்படின்னு ஆரம்பிச்சு, ஒரு கட்டத்துல சாயங்காலம் ஆபீஸ் வாசல்ல போய் நின்னுக்குற அளவுக்கு ஆகிப் போச்சு.
எதுக்கெடுத்தாலும் சந்தேகம், சம்பள பணம் பூராத்தையும் வாங்கி வெச்சுகிறது. இந்த மாதிரி பல பிரச்சினை. அப்பொ தான் நான் அவங்கள பார்த்தேன். வேலைக்கு போய்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க.
"ட்ரீட் எங்க?"
"ம்ம்! நாளைக்கு சாயங்காலம் அரசன் வந்துடுறியா?"
"சரிக்கா!"
அடுத்த நாளைக்கு காலைலயே ஒரு ஃபோன் வந்தது, இந்து அக்கா தான் பேசினாங்க.
"பிரஸ்! அரசன் வேண்டாம்மா! நீ சாயங்காலம் வீட்டுக்கே வந்துடேன். இங்க வெச்சு பாத்துக்கலாம்."
"சரிக்கா"
சாயங்கலம் அவங்க வீட்டுக்கு போனா எனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செட். சும்மா வாசனை தெருவையே தூக்கிச்சு.
அவங்க அப்பா, தம்பிங்க எல்லாருகிட்டயும் பேசிட்டு சாப்பிட உக்காந்தேன். அக்கா ஒரு வார்த்தை பேசலியே. அவங்க அப்பா தான் விடாம பேசிகிட்டே இருந்தார்.
"இது எல்லாம் என்ன பிரஸ். அவங்க அம்மா பூரி பண்ணா அவ்வளவு நல்லா இருக்கும். புண்ணியவதி போய் சேர்ந்துட்டா. இந்த கழுதைக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது, வேலைக்கு போறேன் அப்படின்னு ஒரு சாக்கு வெச்சுகிட்டு ஒரு வேலை பண்றதில்ல எல்லாம் நான் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்."
"அப்படி என்ன சார் வேலை இருக்க போவுது. சமைக்குறது அக்கா பாத்துப்பாங்க, வீடு சுத்தம் பண்றது எல்லாம் கேக்கவே வேண்டாம். நீங்க என்ன பண்ணுவீங்க.?"
"காலைல எழுந்து வாசல்லா பால் பாக்கேட் இருக்கும், அத உள்ள வைப்பேன். நானே போய் பேப்பர் வாங்கிட்டு வருவேன். இவள கொண்டு போய் ஆபீஸ்ல விடுவேன். அப்புறம் சாயங்காலம் இவள கூப்டு வருவேன். இப்பொல்லாம் மதியம் நானே எடுத்து போட்டு சாப்பிட வேண்டி இருக்கு."
"இவ்வளவு வேலை செய்யாதீங்க சார்! உடம்பு கெட்டு போயிட போகுது"
நான் சொன்னத அவர் புரிஞ்சுக்கல, சரினு சொல்லி கிளம்பியாச்சு. எனக்கு அவங்க அப்பாவ நினைச்சு கடுப்பா இருந்தது. ஒண்ணும் உடம்பு முடியாதவர் கிடையாது. கோயில்ல ரத்திரி ஏழு மணிக்கு மேல உக்காந்து வெட்டி கதை பேசிகிட்டு இருப்பார்.
அடுத்த நாள் அக்காவுக்கு கால் பண்ணேன்
"என்னக்கா நேத்து இப்படி பண்ணிட்டீங்க! நான் என்ன பூரி சாப்பிடவா ட்ரீட் கேட்டேன். உங்க கிட்ட பேசி நாளாச்சே, பேசலாமேனு தான ட்ரீட் கேட்டேன். "இன்னொரு பூரி சாப்பிடு" அப்படிங்குறத தவிர நீங்க ஒண்ணும் பேசலியே"
"எங்கடா! எனக்கும் வருத்தம் தான். ஆனா நாம நினைச்சா மாதிரி வாழ முடியுமா? உன்ன அரசன் கூப்டு போறேன்னு சொன்னதும் வீட்ல கத்த ஆரம்பிச்சுட்டாங்க.அதான் உன்ன வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து போட்டாச்சு. நல்லா இருந்ததா??"
"அக்கா எனக்கு ஒரு மேட்டர் புரியல! சம்பாதிக்குறது நீங்க தான? அதை செலவு பண்ண உங்க அப்பாகிட்டஎதுக்கு அனுமதி எல்லாம்?"
"பத்தொன்பது வயசுல எல்லாம் இப்படித்தாண்டா பேசுவீங்க. உனக்கு கல்யாணம் ஆகி வர்றவ வேலைக்கு போனா அவ சம்பளத்த நீ புடுங்கத்தான் செய்வ!"
"என்னமோக்கா, நல்லா இருந்தா சரிதான். வீட்டுக்கு ஒரு நாள் வாங்க அக்கா, அம்மா ஏதோ பேசணும்னு சொல்லிகிட்டு இருந்தாங்க."
என்ன மேட்டர்னா முன்னாலயே சொன்னா மாதிரி எங்க அம்மாவுக்கு இந்து அக்காவ ரொம்ப பிடிக்கும். அதனால எல்.ஐ.சி ஏஜண்ட் ஒருத்தர் நல்லா இருக்கார்னு சொல்லி அவரோட ஜாதகமும் போட்டோவும் வாங்கி வெச்சிருந்தாங்க. அக்கா வந்து பாத்துட்டு அவங்களுக்கு பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க. இப்பொ அவங்க அப்பாகிட்ட இந்த மேட்டர கொண்டு போகும்போது தான் பிரச்சினை வந்துட்டு.
"நான் என்ன கையாலாகதவனா? என் பொண்ணுக்கு என்னால மாப்பிள்ளை பார்க்க முடியாதா? நீங்க எல்லாம் பார்த்து என் பொண்ணுக்கு கல்யாணம் ஆக வேன்டியது இல்லை."
அப்படினு சொல்லிட்டார். எங்கப்பா எங்கம்மா அழுவுறத பார்த்துட்டு, அவங்க மேட்டர்ல இனி தலையிட வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. உண்மையான காரணம் என்ன அப்படின்னா அவருக்கு தனக்கு மேல இருக்குற மாப்பிள்ளை வேண்டாம். எப்பவும் இவர் சொல்றத கேட்டு நடக்குற ஒருத்தன் வேணும். அதே மாதிரி ஒருத்தன பிடிக்கவும் செஞ்சார். முக்கியமான வேலை இருந்ததால அவங்கள பொண்ணு பார்க்க வரும்போது என்னால போக முடியல. எங்க அம்மா தான் போய்ட்டு வந்து ஒரே புலம்பல். "அந்த பொண்ணுக்கு இப்படியா ஆகணும்? அவங்க அம்மா இருந்தா இந்த நிலமை வருமா?"
"அம்மா என்ன ஆச்சு?"
"மாப்பிள்ள நல்லா இல்லடா?"
"என்ன நிறம் இல்லையா? அதுகெல்லாம் பாத்தா முடியுமா?"
"அப்படி இல்லடா, இந்து வ பார்த்து அவன் "30 வயசாகி இன்னும் கல்யாணமாகாம இருக்கீங்களே, யாராவது பாய் ஃபிரண்ட்ஸ் இருக்கானா? அவன் கூட எதுனா நடந்திருக்கா" அப்படினெல்லாம் கேட்டிருக்காண்டா!"
"அவங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தான?"
"சொன்னேன்! அவர் கேட்டதுல என்ன தப்பு அப்படிங்குறான் அந்த முட்டாள் பிராமணன், அதான் நான் பாதிலியெ வந்துட்டேன்."
முகமே தெரியாத அந்த மாப்பிள்ளை மேலயும், இந்து அக்கா அப்பா மேலயும் எனக்கு கொலை வெறி வந்தது.
நாங்க கல்யாணத்துக்கும் போகல. அப்புறம் நான் போன வருஷம் ஒரு இன்டெர்னெட்சென்டர்ல வேலை பாத்தேன்னு சொன்னேனில்லையா, அந்த முதலாளிக்கு நிறைய தொழில் உண்டு. கேஸ் ஏஜன்ஸி எடுத்திருந்தார். அங்க மானேஜர் வேலைக்கு எங்க சென்டர்ல வெச்சு தான் ஆளெடுத்தாங்க. உதவிக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க. அப்போ தான் இந்து அக்கா அப்பாவ ரொம்பா நாள் கழிச்சு பார்க்கிறேன். இன்டெர்வியூவுக்கு தான் வந்திருந்தார்.
எல்லாம் முடிஞ்சு கிளம்பும் போது அவர நிப்பாட்டி கேட்டேன்,
"எப்படி இருக்கீங்க? இந்து அக்கா எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க?"
"அவள பத்தி பேசாதப்பா. மும்பை போய்ட்டா, அவங்க வீட்டுக்காரர் அவள வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டார். இவா அவ புருஷன் கிட்ட சொல்லி எனக்கு செலவுக்கு பணம் அனுப்பலாமில்ல. அதுக்கு மனசு கிடையாது ராட்ச்ஸிக்கு. எனக்கு இன்னொரு இடத்துக்கு போகணும். அப்புறம் பேசலாமா?"
அடப்பாவி மனுஷா நீ இன்னும் திருந்தலயானு நினைச்சுகிட்டேன்.
இந்த மாதிரி எத்தனயோ பேர் இன்னும் இருக்காங்க. பெண்கள் வேலைக்கு போறதினால மட்டும் சுதந்திரம் அடைஞ்ச மாதிரி இனிமே பேசக்கூடாதுனு நான் முடிவு பண்ணது அப்படித்தான்.

Comments:
பிரசன்னா,
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல விஷயகளில் குழந்தைகளையும், பெண்களையும் ஒப்பிட இயலும். அதனால்தானோ என்னவோ குழந்தைகளைப் போலவே தனித்து நின்று பலவற்றைச் செய்வது பெண்களுக்கும் இச்சமூகத்தில் கடினமான ஒன்றாகிவிடுகிறது.
 
என்ன இருந்தாலும் எங்க அம்மா ஜெயலலிதாமாதிரி வருமா?
 
கரெக்ட்! குழந்தைகளைப் போன்ற மனசு தான் பெண்களுக்கு, ஆதரித்து நடத்த நல்ல தந்தையும், கணவனும் கிடைத்து விட்டால் அவர்கள் தொட முடியாத உயரங்கள் கிடையாது.
 
///என்ன இருந்தாலும் எங்க அம்மா ஜெயலலிதாமாதிரி வருமா?///
நான் சொன்னது ஒரு எக்ஸ்ட்ரீம் நீங்க சொல்றது ஒரு எக்ஸ்ட்ரீம், ரெண்டு பேரையும் கம்பேர் பண்றது கஷ்டம்.
 
//நான் சொன்னது ஒரு எக்ஸ்ட்ரீம்....கஷ்டம்//
நல்ல பதில்! கை கொடுங்க பிரசன்னா
 
கை குடுத்தா போச்சு. தொடர்ந்து தரும் வருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றி.
பிரசன்னா
 
ஹாய் ப்ரசன்னா

இந்த படைப்பு மிகவும் நன்றாக உள்ளது. நல்ல வேகமான நடை. செம்மை படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு 15 வயதில் வரும் மனமுதிர்ச்சி பெண்களுக்கு 20 வயதில் கூட வருவதில்லை. இதுதான் இதெற்கெல்லாம் காரணம்.
 
அப்படி சொல்வதற்கில்லை அக்கா! எல்லாம் வளர்க்கிற முறைதான் என்பது என் கருத்து. என் அக்கா பெண் சாப்பிடும் போது அவளுக்கு வைத்த அப்பளம் உடைந்து இருந்தது. அத அப்படியே எடுத்து வெச்சிட்டா. "அப்பளத்த உடைச்சிதான சாப்பிட போற, அப்புறம் என்ன?" அப்படின்னு கேட்டதுக்கு, "என் அப்பளத்தா நான் தான் உடைச்சி திங்கணும், அடுத்தவங்க உடைச்சதுக்காக நான் சாப்பிட கூடாது" அப்படின்னா. பொண்ணுக்கு 6 வயசு தான். எல்லாம் வளர்கிற முறைதன்
பிரசன்னா
 
பிரசன்னா
நல்ல யதார்த்தமான பதிவு.பெண்களின் இளகிய மனத்தை தனக்கேற்ற மாதிரி பயன் படுத்தி கொள்பவர் உண்டு. யாரையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கி அதனால் அவர்களை பயன் படுத்தி கொள்வது அதிகம். மன முதிர்ச்சி இல்லாமல் இல்லை, சார்ந்திருக்க வேண்டுமே என்பதால் விட்டு கொடுத்துவிடுவது பழக்கமாகி இருக்கிறது
 
தேன் துளி அக்கா, நீங்க வந்ததில் பெரிய சந்தோஷம், பின்னூட்டம் போட்டது ரொம்ப சந்தோஷம். எல்லா வகையான பெண்களும் இருக்காங்க. கூடிய விரைவில் எனது இன்னொரு அனுபவத்தை பதிவா போடப் போறேன், அப்பொ இதே மாதிரி வந்து கருத்து சொல்லுங்க
பிரசன்னா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]