html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: சந்திப்புகள்

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Wednesday, May 17, 2006

 

சந்திப்புகள்

. எங்க ராஜேஸ்வரி அக்கா. இந்த மாதிரி ஒரு பொண்ணு உலகத்துல இருக்கவே கூடாது. இனிமே பிறக்கவே கூடாது அப்படின்னு நான் நினைக்குற ஒரு பொண்ணு.
நான் நினைக்குறது தப்பா கூட இருக்கலாம். ஆனா அவங்க மேல எனக்கு அளவு கடந்த வெறுப்பு. அப்படி அவங்க என்ன பண்ணாங்க. வாங்க என் கூட ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி,
எனக்கு ராஜேஸ்வரி அக்காவ ரொம்ப பிடிக்கும், நல்லா அழகா இருப்பாங்க. எங்க தெருவுல பசங்க எல்லாம் அவங்க வர்றதுக்காக மணிக்கணக்கா காத்துகிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி ஒரு அக்கா கூட நான் பேசுறதே எனக்கு பெருமைனு நான் நினைச்சுகிட்டு இருந்தேன். எங்க அம்மா கொஞ்சம் அழகு கலை, துணில ஜர்தோசி பண்றதுனு பொழுடு போக்கிட்டு இருப்பாங்க. எங்க வீட்ல ரெண்டு பேரும் ஆம்பிளை பசங்க, அதனால தெருவுல உள்ள அக்காமார் எல்லாம் எங்க அம்மாவுக்கு செல்லம். அப்படி எனக்கு அறிமுகம் ஆனவங்க தான் இந்த ராஜேஸ்வரி அக்கா.
ஏற்கனவே அழகு அதிலயும் எங்க அம்மா மேக் அப் பண்ணி விட்டா ராஜி அக்கா படு சூப்பரா இருப்பாங்க. அப்போ தான் நான் 9த் படிச்சுகிட்டு இருந்தேன். பல காதல் படங்கள பார்த்து "இவ்வளவு புனிதமானதா காதல்?" அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த சமயம். ஒரு நாள் ராஜி அக்கா கூட பேசிக்கிட்டு இருக்கும் போது கீழ தெருவுல ஒருத்தர் எங்களயே பாத்துகிட்டு இருந்தா மாதிரி இருந்தது. அக்காவும் அவர் இருக்குற இடத்தையே பாத்துகிட்டு நின்னாங்க. என்னடா இது அப்படின்னு பாத்துகிட்டு இருக்கும்போதே ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டாங்க. சரிதான் அக்கா மாட்டிகிட்டாங்க.
"அக்கா யாருக்கா அவன்? நான் போய் மாமா கிட்ட சொல்லி கூப்டு வரவா?"
"சும்மா இருடா! எல்லாம் தெரிஞ்சவங்க தான்"
"நான் பார்த்ததே இல்லையே?"
"அவரு ஈரோடுல இருந்து வந்திருக்காருடா!"
"ஈரோடு ல இருந்தா எதுக்கு? ஆமா இதெல்லாம் உனக்கு எப்படிக்க தெரியும்?"
"நம்ம ரமேஷ் அண்ணா இன்டர்னெட் சென்டர் ஆரம்பிச்சாங்கல்ல, அப்பொ நான் அங்க போயிருந்தப்ப, கம்பியூட்டர்ல பேசிகிட்டோம். அவர் போட்டோ அனுப்ச்சார். நான் தான் நேர்ல வர சொன்னேன்!"
"பேர் என்ன?"
"நெல்லியன்"
"சரி இப்ப என்ன பண்ண போறீங்க?"
"அதான் எனக்கும் தெரியல"
"சரி நான் பாத்துக்குறேன், ஆனா எங்கம்மா கிட்ட சொல்லிட கூடாது சரியா?"
"நான் ஏண்டா சொல்லப் போறேன்?"
நான் நேரா கீழ போய் "சார்! உங்கள பத்தி இப்பொ தான் தெரிய வந்தது.இங்க இருந்து நேரா பத்து நிமிஷம் நடந்தா வ.உ.சி மைதானம்னு ஒண்ணு வரும். அங்க ஒரு பார்க் இருக்கும். அங்க வெயிட் பண்ணுங்க அக்கா வருவாங்க"
"அவங்க உனக்கு அக்காவா?"
"அப்படித்தான்"
சரினு சொல்லிட்டு அவர் போய்ட்டார். ஆள் நல்லாத்தான் இருந்தாப்புல. சரினு சொல்லி ராஜி அக்கா அம்மாகிட்ட பார்க் கூப்பிட்டு போறேன்னு சொல்லி அவங்கள கூப்டு போனேன். என்னவோ ஒரு தெய்வீக காதலுக்கு உதவி பண்ணி வரலாற்று குறிப்புல இடம் பெறப் போற பூரிப்புல போனேண் கூட.
அவங்க என்ன தனியா நிக்க வெச்சு பேசிகிட்டு இருந்தாங்க. என்னடா இது, இவங்க லவ்வுக்கு நாம தான் ரிஸ்க் எடுத்தோம். நம்மள கழட்டி விட்டுட்டாங்களேனு நினைச்சு கஷ்டமா இருந்தாலும், விடுடா நாமெல்லாம் வழிப்போக்கர்கள் தானேனு விட்டுட்டேன்.
அங்க தான் அவங்க ரெண்டு பேரும் காதல சொல்லிகிட்டாங்க. அப்புறம் நான் எங்க குடும்பத்தோட வேற இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அப்போ அப்போ அந்த நெல்லியன பார்ப்பேன்.
"என்ன சார்! இங்கயே செட்டில் ஆகிட்டீங்களா?"
"ஆமா பிரசன்னா! இங்க ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல இருக்கேன்."
"லவ்ஸ்??"
"அது அப்படியே போய்கிட்டு இருக்கு, நீ ராஜ் கிட்ட பேசவே இல்லியா?"
"இல்ல! சரி சார் நான் கிளம்புறேன்."
"ஓகே!"
இப்படி அப்போ அப்போ பேசிக்குறது அவ்வளவு தான். நான் 11த் படிக்கும் போது வந்த காதலர் தினத்தப்போ எங்க ஊர் சைன்ஸ் சென்டர்ல ரெண்டு பேரையும் பார்த்தேன். அக்காவுக்கு என்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். மதியம் சேர்ந்து சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லிட்டாங்க. என்னல்லாமோ பேசினாங்க. கல்யாணம் பண்ணிகிட்டு ஈரோடு போகணும். ஒரு குழந்தை தத்து எடுத்துகிட்டு இன்னொரு குழந்தை பெத்துக்கணும் அப்படி இப்படினு. அவங்களுக்கு அது ரொம்ப சந்தோஷம் குடுத்திருக்கலாம், எனக்கு பயங்கர கடுப்பாகி போச்சு.
அப்புறம் ஒரு நாள் அம்மா சொன்னாங்க, "நம்ம ராமசாமி கோவில் தெரு ராஜி நினைவு இருக்காடா உனக்கு?"
"என்னம்மா இதெல்லாம் ஒரு கேள்வியா?"
"கல்யாணம்டா அவளுக்கு!"
"மாப்பிள்ளை பேர் வித்தியாசமா இருக்குமே?"
"இல்லயே சுந்தர மூர்த்தினு தான போட்டிருக்கு"
என்னது! ஒரு வேள அவன் பேரு சுந்தர மூர்த்தி தானா, நம்ம கிட்ட நெல்லியன் அப்படினு சொல்லி இருக்கானா?
"அக்காவ நான் ஒரு வாட்டி போய் பாத்துட்டு வரேன்மா!"
"போய்ட்டு வாடா"
அக்கா நல்லா சந்தோஷமாத்தான் இருந்தாங்க, அவந்தான் மாப்பிள்ளை போல இருக்குனு நினைச்சேன்.
"என்னக்கா கல்யாணமாமே, நமகெல்லாம் சொல்றதில்ல?"
"வாங்க பெரிய மனுஷரே! இப்ப தான உங்களுக்கு வழி தெரியுது. அம்மா நிச்சயதார்த்த ஆல்பம் கொண்டாங்க, பிரஸ் வந்திருக்கு"
ஆல்பத்த வாங்கி பாத்தா 1000 வாட்ச் அதிர்ச்சி. மாப்பிள்ள வேற யாரோ.
"என்னக்கா இது?"
"சத்தம் போடாத மாடில போய் பாக்கி பேசிக்கலாம்"
எனக்கு வந்த கோவத்துல பொரிஞ்சு தள்ளிட்டேன்
"ஆம்பிளையா அவன் எல்லாம்? இப்படி ஒரு ஏற்பாடு நடக்குதுனு தெரிஞ்ச உடனே அவன் வந்து உங்க அப்பா கிட்ட பேசி இருக்கணும்ல? எங்க இருக்கான் இப்ப? நான் போய் என்னானு கேக்கவா?"
"நான் தான் அவர வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்க கூடாதுனு சொல்லிட்டேன்"
"ஏன் அக்கா?"
"அவர் என்னாடா மாசத்துக்கு 3000 ரூவா சம்பளமா வாங்குறார், அத வெச்சு எப்படி குடும்பம் நடத்துறது? இப்ப பாத்திருக்குற சுந்தர் சேரன்மாதேவில நல்ல பணக்காரர். தோப்பு , துறவு எல்லாம் இருக்கு. நிம்மதிஆ வாழாலாம். அதான் இந்த முடிவு எடுத்தேன்."
"நெல்லியன் கிட்ட என்ன சொன்னீங்க?"
"என்ன சொல்ல! வீட்ல தெரிஞ்சு போச்சு, அம்மா மருந்து குடிச்சிட்டாங்க. இது சரி வராது. நான் எங்க இருந்தாலும் உங்க நினைப்பாவே இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டேன். அதுவும் நம்பிடுச்சு"
"அதுவா? என்னக்கா நீ, அவன் மனசு என்ன கஷ்டப்பட்டிருக்கும் யோசிச்சு பாத்தியா?"
"அதெல்லாம் பாத்தா நம்ம வேலை ஆகாது பிரஸ்"
"அவர்கிட்ட சொன்னா மாதிரியே என்கிட்டயும் சொல்லி இருக்கலாமில்ல. என்கிட்ட மட்டும் என்ன உண்மை வேண்டிக் கிடக்கு. உன் மேல எனக்கு மரியாதையாவது இருந்திருக்கும்"
"யாராவது ஒருத்தர் கிட்ட நம்ம உண்மை எல்லாம் சொன்னா, அப்புறம் நெஞ்சுல பாரம் இல்லாம வாழலாம் இல்லையா?"
"சரி! நான் கிளம்புறேன். என்ன கல்யாணத்துக்கு எதிர் பார்க்கதீங்க"
சொல்லிட்டு வந்துட்டேன்.
அப்புறம் எனக்கும் அவங்களுக்கும் டச் இல்ல. போன மாசம் பாஸ்போர்ட் ஆபீஸ் ல வெச்சு நெல்லியன பாத்தேன்.
"சார்! எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? உங்க பாப்பாவா? மேடம் எங்க?"
"நான் இப்ப ஸ்டேட்ஸ்ல இருக்கேன் பிரசன்னா, பாப்பாக்கு பாஸ்போர்ட் எடுக்க தான் வந்திருக்கேன்.ஹோட்டல்ல சாப்பிட்டு கிட்டே பேசலாமா?"
"சரி"
"எப்படிப்பா இருக்க? ராஜி அங்கிளுக்கு விஷ் பண்ணு"
"மார்னிங் அங்கிள்! மை நேம் இஸ் என்.ராஜேஸ்வரி"
"சார்! நீங்க இன்னும் அவங்கள மறக்கலையா?"
"இல்லப்பா, அப்படி காதலிச்சிருக்கேன். அவங்க வீட்ல கடுமையான எதிர்ப்பு. கல்யாணம் தான் காதலோட முடிவா இருக்கணுமா என்ன? அதான் நாங்க முன்னாடியே முடிவு பண்ணா மாதிரி இந்த குழந்தைய தத்து எடுத்துகிட்டேன். இப்போ ஜுன்ல அமெரிக்கா போறோம்"
அப்புறம் பாக்கி கதை எல்லாம் பேசி முடிக்கும் போது எனக்கு சிரிப்ப அடக்க முடியல. இந்த அக்கா சேரன்மாதேவி தோப்புகாரன கல்யாணம் பண்றதுக்கு கொஞ்சம் யோசிச்சிருந்தாஅமேரிக்கா போயிருக்கலாம்.
மணி பார்த்தா 1.00 அய்யோ என் அழகான ராட்சஸிக்கு பிறந்த நாள். ஏதாவது வாங்கிட்டு போகலன்னா அவ்வளவுதான். பக்கத்துல என்ன கடை இருக்கு? ஹ்ம் அங்க ஒரு கிப்ட் கடை இருக்கு. நல்ல வேளை.
"என்ன மாதிரி கிப்ட் சார் பார்க்கணும்?"
ஆகா! இந்த குரல எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே
ராஜேஸ்வரி அக்கா!!!!!
"என்னக்கா இங்க என்ன பண்றீங்க. வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?"
"அவன பத்தி பேசாத?" சொல்லும்போதே அக்கா கண்ல இருந்து கர கரனு கண்ணீர்.
"என்னக்கா ஆச்சு?"
"அவருக்கு யாரோ லவ்வர் இருந்திருக்காடா. அவங்க வீட்ல சொன்னதால தான் என்ன கல்யாணம் பண்ணிகிட்டாராம். 5 மாசத்துல அவரோட லவ்வர கூப்பிட்டு வெச்சு குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டார். என்ன ஒரு வேலைக் காரி மாதிரி நடத்துனாங்க. அதான் இப்போ அம்மா வீட்டுக்கே வந்துட்டேன்."
"எல்லாம் சரி ஆகிடும் அக்கா, கல்யாணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே?" அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து வெளில வந்துட்டேன்.
ஆமா, நான் ஏன் நெல்லியன பார்த்ததையும் அவன்கிட்ட செல் நம்பர் வாங்கினதையும் இவங்க கிட்ட சொல்லவே இல்லை?
என்னமோ போங்க.

Comments:
வித்தியாசமா யோசிச்சி இருக்கீங்க.. உண்மைக் கதையா??
 
உண்மை கதை தான் அக்கா. ஆனா ரெண்டு பேரையும் ஒரே நாள்ல மீட் பண்ணல, கதைக்கு ஒரு டெம்போ குடுக்க அப்படி எழுதினேன்.
 
"இப்ப பாத்திருக்குற சுந்தர் சேரன்மாதேவில நல்ல பணக்காரர். தோப்பு , துறவு எல்லாம் இருக்கு. நிம்மதியா வாழலாம். அதான் இந்த முடிவு எடுத்தேன்."

நம்மூரு பிள்ளைளே இப்படித்தான் ப்ராக்டிக்கலா யோசிப்பாங்க பிரசன்னா!
பழகாத சாமியை விட பழகுன பிசாசே
மேல்னு, ஈரோட்டுக்காரனை விட்டுட்டு
நம்ம சேர்மாதேவிகாரனை கட்டுனா
பார்த்தியா!!!.கடைசீல பிசாசு தன் வேலையை காமிச்சுட்டுல்லா!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.
 
Good effort... Keep writing Brother
 
உண்மை உண்மை உண்மை தவிர வேறு இல்லை.
துபாய் ராஜா சொன்னா சரியாத்தான் இருக்கும்
பிரசன்னா.
 
"உண்மை உண்மை உண்மை தவிர வேறு இல்லை.துபாய் ராஜா சொன்னா சரியாத்தான் இருக்கும்"
பிரசன்னா.

எல்லாம் அனுபவம்தேன்!!!.ஊரு, உலகத்திலே நம்ம பாக்காதாப்பு!!. நம்ம கதையெல்லாம் எடுத்து விட்டா
எத்தனையோ எபிசோடு ஓடும்லா!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.
 
அப்போ ஒரு வலைப்பூ துவங்கிட வேண்டியதுதான துபாய் ராஜா. அதிக நேரம் எல்லாம் பிடிக்காது. நம்ம விட்டது சிகப்பு மாதிரி எதுனா காமெடியா எழுதிட்டு ஒரு மாசத்துக்கு மறுமொழி மட்டுறுத்தல் மட்டும் பண்ணிகிட்டு இருக்கலாம். அவ்வளவு பின்னூட்டம் அவருக்கு.
பிரசன்னா
 
Hi பிரசன்னா,
Enjoyed reading about akka.I like the way how you write in tamil......It is almost seventeen years I wrote something in tamil...

Don't compromise on your originality buddy.
Meendum sandhipoam
Kulipirai Chidambaram
 
நல்லா இருக்கு உங்க ப்ளாக்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]