என்னடா இது சென்னை தமிழ் டீன்ஸ்னு கலவையா ஒரு தலிப்பு இருக்கேனு பார்க்குறீங்களா? அதை பத்தி தான் நான் இப்ப சொல்ல வரேன். சென்னை தமிழ் டீன்ஸ், என் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம்.
போன வருஷம் நான் ஒரு இன்டர்னெட் சென்டர்ல வேலை பாத்தது உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். அப்போ எனக்கு அறிமுகமானதுதான் ஹைஃபை.காம்.
நிறைய பேருக்கு இந்த சைட் பத்தி தெரிஞ்சிருக்கலாம். அதுல எனக்கு கிடைத்த அருமையான தங்கை தான் சிந்துஜா. எல்லாருக்கும் முன்னாடியே சொல்லி இருக்கேன். சிந்துஜா எனக்கு சிபாரிசு பண்ண குழுமம் தான் இது. இதுக்கான
சுட்டி.
முதல்ல ரொம்ப சாதாரணமா யார்கிட்டயும் ஒட்டாம கொள்ளாம நாம பாட்டுக்கு போனமா ஃபார்வர்ட் வந்த மெயில அங்க ஒட்டினோமா வந்தோமானு இருந்தேன். ஆனா அதுக்கான இடம் அது கிடையாதுனு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டேன். யாருமே அங்க என்ன மாதிரி வெட்டி கிடையாது. நல்லா படிச்சு வேலையில இருக்குற, படிச்சுகிட்டு இருக்குற பசங்க இருக்குற குழுமம். கொஞ்ச கொஞ்சமா அந்த குழு மக்கள் அவங்க பக்கம் என்ன இழுக்கா ஆரம்பிச்சாங்க.
போகப் போக எங்க குழுமத்துல தேவை இல்லாத விஷயங்கள் குறைந்து எங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பிச்சோம். அருமையான ஒரு நட்பு வட்டத்துல நான் இருக்கேன்.
"அதெல்லாம் சரிடா தம்பி அதப் பத்தி இப்ப ஏன் புலம்புற?"னு தான கேக்குறீங்க.
எங்க குழுமத்தோட மூணாவது சந்திப்பு இந்த மாதம் 21ம் தேதி நடந்தது. நானும், என் நண்பன் பாலாவும் 19ம் தேதியே அங்க இருந்தோம். எங்க குழுமத்தை துவக்கி பெரிய நட்பு வட்டத்துக்கு எங்களை இழுத்த நண்பர்
மைக் எங்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அவருடன் அவரது ரூமில் தங்குவதாகத்தான் ஏற்பாடு. அன்று அவரது பிறந்த நாள் ஆகிவிட்டபடியால் மாலை அண்ணாநகர் காஃபி டேயில் பார்ட்டி நடந்தது.
நான், பாலா,
என் அண்ணன், சிடிடி (சென்னை தமிழ் டீன்ஸ்) உறுப்பினர் குரு, என் தங்கை
சிந்து எல்லாரும் கலந்து கொண்டோம், வழக்கமான விசாரிப்புகள், பரிசளிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, சாப்பிட துவங்கினோம். என்னத்த காஃபி டே, ஒரு மண்ணும் நல்லா இல்லை. இதுல நான் வேற சுவத்துல மாட்டி இருந்த படத்த பார்த்து, அது வேணும்னு கேட்டு, அது வாயில வைக்க சகிக்கல.
அன்னைக்கு பொழுது ஒரு வழியா நைட் 11 மணிக்கு முடிஞ்சுது. அதுக்கப்புறம் சில சொந்த வேலைகள் காரணமாக (ஹிஹி நீங்க நினைக்குறது சரிதான்) நானும் பாலாவும் மட்டும் தனியாக வெளியில் சென்றோம்.
அயனாவரம் அபிராமி மெகா மாலில் பொழுத்தை கழித்து, இரவு 11 மணிக்கு ரூமுக்கு திரும்பி படுத்தாச்சு. அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சென்னை தமிழ் டீன்ஸ் 3ஆவது சந்திப்பு. எல்லாரும் காலை பத்து மணிக்கு காந்தி மண்டபத்தில் சந்திப்பதாக திட்டம். வழக்கம் போல சொதப்பிட்டானுங்க. ஷேர் ஆட்டோல போகும் போதே கால் வந்தது, "பிரஸ், நாங்க சில்ரன்ஸ் பார்க்ல இருக்கோம் வந்துடுடா."
சரினு சொல்லி அங்க போனா எல்லாரும் வந்து இருந்தாங்க. அங்க காலைல எல்லாம் பேசி முடிச்சுட்டு, மத்தியானம் பெசன்ட் நகர் பொன்னுசாமி மெஸ்ல ஒரு புடி புடிச்சுட்டு, சாயங்காலம் பூரா கடற்கரைல விளையாடினது எல்லாம் காலா காலத்துக்கும் ஞாபகம் இருக்கும்.
எனக்கும் இந்த இணைய நட்பு மேல முதல்ல நம்பிக்கை கிடையாது. அதை பொய்யாக்கி இந்த குரூப் அருமையான இணைய நண்பர்களை எனக்கு குடுத்திருக்கிறது.
மேல நான் குடுத்திருக்குற லிங்க் பயன்படுத்தி நீங்களும் எங்க கூட சேர்ந்துக்கலாம், உங்களுக்கு விருப்பம் இருந்தா, உங்களுக்காக ஒரு புதிய, அழகான, உபயோகமான, உங்கள் துக்கங்களில் தோள் குடுக்க, உங்க்ளோடு சேர்ந்து சந்தோஷத்தில் குதிக்க ஒரு பத்து நண்பர்கள் காத்துகிட்டு இருக்கோம்.
நான் என்னோட பயண கட்டுரை மாதிரி தான் எழுதணும்னு நினைச்சேன், ஆனா இது எப்படி எல்லாமோ போயிடுச்சு. அடுத்த சந்திப்பு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
அதுக்குள்ள நீங்க உள்ள புகுந்து எல்லாரோடவும் கலந்துகிட்டீங்கன்னா, ஃப்ன்னுக்கு நான் கேரண்டி.