html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: இரண்டு நிமிடங்கள்...

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, June 01, 2006

 

இரண்டு நிமிடங்கள்...

திங்கட்கிழமை!! திங்கட்கிழமைனாலே தன்னால அலுப்பு வருது. ஆனா என்ன செய்ய, ஆபீஸ் கிளம்பணுமே. ரொம்ப நேரம் தூங்கின மாதிரி இருக்கே. மணி பார்த்தா 8.30. ஏன் இந்த அமுதா என்ன இன்னும் எழுப்பல?? சும்மா 7.30க்கே கிடந்து குதிப்பாளே?
கிச்சன்லயும் ஆளக் காணோம். எங்க போயிருப்பா?? வீடே அமைதியா இருக்கு.
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு தாங்க முடியல. காலைல இருந்து ஒரு காபி இல்ல, பேப்பர் எடுத்துக் குடுக்கல, அட இதெல்லம் வேணாம்பா, குட் மார்னிங்க் சொல்ல கூட யாரும் இல்லயே!! சரி பேப்பர் இருக்கானு ரேக் ல பார்த்தா, இன்னைக்கு பேப்பரும் இல்லை. கதவ திறந்து வெளில பார்த்தா, ஒரு வாரம் முந்தின பேப்பர்ல இருந்து இன்னைக்கு பேப்பர் வரைக்கும் இருக்கு. என்ன ஆச்சு இந்த பேப்பர் பையனுக்கு??
இப்பொ தான் எனக்கு லைட்டா ஒரு பயம் வர ஆரம்பிச்சது. என் செல் எடுத்து அமுதா நம்பர டயல் பண்ணேன். ரிங் போய்கிட்டே இருந்தது, அவ எடுக்கவே மாட்டேங்குறா!! எங்க போனாளோ? சரி மறுபடியும் ட்ரை பண்ணா வாய்ஸ் மெயில் போச்சு, அதுல அவளுக்கு மெஸேஜ் குடுத்துட்டு, ஃப்ரிட்ஜ் ல இருந்த பிரட் சாப்பிட்டு கிளம்பிட்டேன், நான் என் வேலய பார்க்கலேன்னா என் வேலை புஸ்ஸ்!! மனசுக்குள்ள சங்கடமாதான் இருக்கு. இருந்தாலும் அவளும் ஒரு பட்டதாரி, எங்கயாவது அவசர வேலயா போயிருக்கலாம். கால் பண்ணுவா. ஹ்ம்ம்ம்

வீட்ட விட்டு வெளில வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணி கிளம்பினேன். என்ன எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா என்னால ஒரு மனுஷனையும் பார்க்க முடியல. கடை இருக்கு, பஸ் இருக்கு. ஆனா எதிலயும் ஆட்கள் இல்ல. என்னடா இது?? ஆச்சர்யமா இருக்கே. இது கனவா நினைவானே எனக்கு தெரியல. உடனே திரும்ப வீட்டுக்கு வண்டிய திருப்பிட்டேன். வீட்டுக்குள்ள போகும்போதே ஃபோன் அடிச்சுகிட்டு இருந்தது. அவசர அவசரமா உள்ள போகுறதுக்குள்ள, ரிங் நின்னு போச்சு.

காலர் ஐ.டி ல நம்பர பார்த்தா அது பாலா. பாலா என் சொந்தக் காரன். இப்போ மதுரைல இருக்கான். நான் திரும்ப கால் பண்ண ரிங் போய்கிட்டே இருக்கு எடுக்க மாட்டெங்குறான். என்னது இது???
சரி விடுங்கடானு நேரா ஆபீஸுக்கே வண்டிய விட்டேன். எப்பவும் நிக்குற மாதிரி காரே இல்ல. எனக்கு ஷாக் பழகி போச்சு. உள்ள போனா யாரும் ஆபீஸ்ல இல்ல. நான் மட்டும் தான். சொல்லப் போனா நானே 1 அவர் லேட். ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு. இதுக்கு மேல ஆபீஸ்ல இருந்த எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு சொல்லி வெளில வந்துட்டேன்.

இப்போ என்ன பண்ணலாம். மனுஷன் இருக்குற அடையாளமே இல்லை. எதிரி நாடு அணுகுண்டு போடுறேன்னு மிரட்டி எல்லாரயும் வெளியூருக்கு அனுப்பிட்டானா?? இப்போ என்ன செய்யலாம். ரைட் நமக்கு கால் பண்ண ஒரே ஆள் நம்ம பாலா தான்.மதுரை இங்க இருந்து 150 கிலோ மீட்டர் தானே. கிளம்பிப் போய் பார்த்துட்டு வந்திடலாம்னு பைக்க ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சேன்.

சரியா கயத்தாறு தாண்டின உடனே ஒரு லாரி கண்ணுல பட்டது.ஆகா நம்ம இன்னைக்கு காலைல இருந்து பார்த்ததுல மூவிங் ல பார்த்தது இது ஒண்ணு தான். சரி நிப்பாட்டி எங்க இருந்து வருது? அந்த ஊர் நிலவரம் எப்படினு கேக்கலாம்னு வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டு ரோட்ல வந்து கைய காமிச்சேன். பரதேசிப் பய!! வண்டியா ஓட்டுறான். நேரா என்ன வந்து தூக்கிட்டான். அம்மா!! உடம்பெல்லாம் வலிக்குதே. இப்பொ வீட்டுக்கு போனா போதும். மெதுவா கிளம்புவோமா.

வீட்டுக்கு போனா என்ன யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க!! நான் ஒருத்தன் இருக்குறதயே யாரும் கண்டுக்கல, அவங்க அவங்க வேலய பார்த்துகிட்டு இருக்காங்க. என்ன வீட்டு முன்னாடி ஒரே கூட்டம். ஆங்! அங்க அமுதா உக்காந்து அழுதுகிட்டிருக்காளே!! என்ன ஆச்சுனு தெரியலியே?? என்ன பாரு் அமுதா. என்கிட்ட பேசேன்.

"அமுதா" சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா பக்கத்து வீட்டு மாமி.
"வாங்க மாமி! நீங்களாவது என்னனு கேளுங்க!"
சுத்தம். அவங்களும் என்ன கண்டுக்கவே இல்ல. என்னடா ஆச்சு உங்களுகெல்லாம். சரி மாமி பக்கத்துல உக்காந்துக்கலாம்னு உக்காந்து அவங்க பேசுறத கேட்டுகிட்டு இருந்தேன்.
"எப்படி அமுதா ஆச்சு??"

"என்னத்த சொல்றது மாமி! இவர் ஒரு வருஷமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா இருக்கார். நாந்தான் இவருக்கு எல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன். திடீர்னாப்புல இன்னைக்கு காலைல எதோ கனவு கண்டவர் மாதிரி அமுதா இந்த மெஸேஜ் கிடைச்சதும் எனக்கு கால் பண்ணு அப்படின்னார். எனக்கு என்ன செய்யன்னே புரியல. அவர அப்படியே எடுத்து என் மடில போட்டுகிட்டேன். என்னென்னவோ புலம்பினார். கடைசியில ஏதோ பெரியா பஸ் மோதின மாதிரி முகத்தில வலி காமிச்சார். அப்புறம் அவ்ளொதான் மாமி. எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு! என்ன அனாதயா விட்டுட்டு போயிட்டாரே"
எல்லாம் கேட்டுகிட்டு இருந்த நான் இப்பொ "ஙே" முழிச்சுகிட்டு இருக்கேன்.

Comments:
ங்அன்fஎங்மெடொப்க்ட்டபார்
பின்னூட்டம் எப்படி?
 
// ங்அன்fஎங்மெடொப்க்ட்டபார்
பின்னூட்டம் எப்படி?//
என் கதை மாதிரியே இருக்கு :)
 
ஐயோ கொடுமையே! இப்ப தான் நான் டாவின்சி கோட் படிச்சுகிட்டு இருக்கேனா, இந்த சிவஞானம்ஜி எதுனா விளையாடுறாரானு 1 மணி நேரம் மாத்தி கீத்தி எல்லாம் போட்டு பாத்தேன். இதத்தான் கதைல ஒன்றுதல் அப்படிம்பாங்க...
பிரசன்னா
 
அடங்கொக்கமக்கா!

இத விட்டா எனக்கு ஒண்ணுமே சொல்லத் தோணலிங்கோ!
 
அப்பாடா. நம்மள மாதிரி ஜென்கதை எழுதும் இன்னோரு ஆத்மா..!!!

ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.. டா வின்சி கோட் படிச்சதினால இந்தக் கதையா இல்லை வேற ஏதாச்சும் பாதிப்பா?
 
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுதாகர்.
 
///டா வின்சி கோட் படிச்சதினால இந்தக் கதையா இல்லை வேற ஏதாச்சும் பாதிப்பா?///
அவர் ரேஞ்சுக்கெல்லாம் எனக்கு கற்பனை பண்ண தெரிய மாட்டேங்குதே.. சும்மா தோணிச்சுனு எழுதினேன் அக்கா. ஆமா இது பேர் ஜென் கதையா என்ன???
 
அய்யோ பிரசன்னா, இந்த கதையெ போனவாரம் எங்கேயோ படிச்சேனே? எங்கேன்னு தெரியலெயே. குழப்பமா இருக்குதே......
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]