html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: கல்யாணமாம் கல்யாணம்...

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, July 02, 2006

 

கல்யாணமாம் கல்யாணம்...

நட்சத்திர வாரத்தின் முடிவுல கல்யாணம், நம்ம நிலவு நண்பனுக்கு. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல.. நிலவு நண்பன பத்தி..வலைப் பதிவாளர்கள் எல்லாருக்கும் நல்லாவே அவரைத் தெரியும்...ஜூலை ரெண்டாம் தேதி அதாவது இன்னைக்கு அருமையான முறையில் நடந்து முடிந்தது.
சனிக்கிழமை எனக்கு நைட் ஷிப்ட். காலைல வந்து ஞானியார் அனுப்புன மின்னஞ்சல்ல வரவேற்பு தனியா இருக்கானு பார்த்தேன் இல்லை.. சரினு சொல்லி காலைல ஒரு 10 மணிக்கு இருக்குறாப்ல மண்டபத்துக்கு போயிட்டேன். வலை நண்பர்கள சந்திக்குறதுல இருக்குற பிரச்சினை சுவாரஸ்யமானது.. பார்க்குற எல்லாரையும் "இவரா இருக்குமோ?" அப்படின்னே தோணும். அப்படித்தான் நான் மண்டபத்துல துபாய் ராஜா சாரைத் தேடினேன். சார் கண்லயே படலை.
சரி!! எனக்கு ஏற்கனவே அவங்க கல்யாண முறை பழக்கம் அப்படிங்குறதால உள்ள போய் உக்காந்து கிட்டேன். உள்ள போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, நிலவு நண்பனோட தம்பி நெஹ்மத்துல்லா, நம்ம செட்னு.. அவரோட பிரண்ட்ஸ் பல பேரை எனக்கு தெரிஞ்சு இருந்தது.. அதனால மிங்கிள் ஆகுறதுல பிரச்சினை இல்லை.
கல்யாணத்துல சம்பிரதாயங்கள் துவங்குவதற்கு முன்னால, மணமக்களை வாழ்த்தி பேச வந்தாங்க. முதல்ல ஒருத்தர் நல்ல கணீர் குரல்ல பேச ஆரமிச்சார். அவர் சொல்ல சொல்ல தான் நம்ம நிலவு நண்பன இன்னும் நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சது. எல்லாரும் அப்படி பாராட்டுறாங்க. சதக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முதற்கொண்டு வந்து வாழ்த்தினாங்க.. எத்தன பேருக்கு இந்த மாதிரி நடக்கும்? ஞானியாரே! ராசிக்காரர் தான் நீங்க..
அப்புறம் சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச பின்னால வரிசைல நின்னு போய் நான் வாழ்த்தினேன். ஏற்கனவே தொலைபேசில பேசி இருந்ததால பெரிய அறிமுகம் ஒண்ணும் தேவைப் படலை. கல்யாணத்துல உபசரிப்பு ரொம்ப நல்லா இருந்தது.. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனி தனி பந்திகள் இருந்தது. நான் எல்லாம் ரெண்டு பிரியாணியும் நல்லா இருக்குதானு பார்த்துட்டேன். சைவ சாப்பாடுல போட்ட கேசரி..டாப் கிளாஸ்..
ஐஸ் வரைக்கும் சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி மேடைக்கு போய் பார்த்தேன்..
"என்ன தல!! யாரையும் காணோம், நான் மட்டும் தான் வந்திருக்கேனா?"
"அப்படி எல்லாம் இல்லையே! சிங் ஜெயக்குமார், ப்ரியன், நிலாரசிகன், துபாய் ராஜா, எல்லாரும் வந்திருந்தாங்களே. நாகை சிவா கால் பண்ணி இருந்தார்.கொஞ்சம் சீக்கிரம் வந்து இருந்தீங்கன்னா அறிமுகமாகி இருக்கலாம்."
அய்யோ மூணு பேரையும் பார்க்காம மிஸ் பண்ணிட்டமேனு இருந்தது.. அண்ணிகிட்ட அறிமுகம் என்னை அறிமுகம் பண்ணி வெச்சார் ஞானியார்.. அப்புறம் விடை குடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் மூணு மாசத்துக்கு இங்க தான இருப்பார் பொறுமையா நம்ம விருந்து குடுத்துக்கலாம்.
இதை துபாய் ராஜா படிப்பார்னு நினைக்குறேன். அவருக்காக..
"என்னங்க போன் நம்பர் எதுக்கு குடுத்தேன்.. கால் பண்ணுங்க தலைவா.. ஊருக்கு போரதுக்கு முன்னாடி பார்க்க வேண்டாமா??"
இது தாங்க நான் இன்னைக்கு உருப்படியா பண்ண காரியம்..
ஞானியும் அண்ணியும் பல வருஷங்கள் இன்னைக்கு இருந்த மாதிரியே சந்தோஷமா இருக்கணும்.
பி.கு. இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் சொல்லிட்டாங்க. "ஜோடிப் பொருத்தம் பிரமாதம்"னு. சுத்தி போட்டுகுங்க!!!

Comments:
வலை நண்பரின் திருமண வைபவத்தை இந்தளவேனும் விபரித்ததற்கு நன்றி.
 
உண்மை தாங்க எனக்கு அவ்வளவு நல்லா எழுத வராது..
 
அட, நம்ம ரசிகவ் கல்யாணத்தோட முதல் update வாசிச்சாச்சு! ரொம்ப நன்றி திருவாளர் நல்ல பையன் பிரசன்னா.
 
பிரசன்னா

நீங்கள் அழகாகத்தான் விவரித்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்திலோ எழுதிய விதத்திலோ
குறையில்லை.

ஒரு திருமண வைபவத்தில் எத்தனையோ இனிமையான சுவையான நிகழ்வுகள் நடைபெறும்.
அத்தனையையும் எம்மால் காண முடியாவிட்டாலும் ரசிகவ்வின் திருமணத்தில் நடைபெற்ற இவ்வளவையேனும் எங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்தீர்களே! அதைத்தான் நன்றியுடன் குறிப்பிட்டேன்.
 
இத்தனை நாள் எங்கு சென்றீர்?ஆளையே காணொம்?
லேட்டா வந்தாலும் லேட்டெஸ்டா வந்துவிட்டீர்கள்.
நிலவின் திருமணத்தை விவரித்ததை
சொல்கிறேன்
நன்றி
மீண்டும் சந்தித்தால் நிலவுக்கு என் வாழ்த்தைக் கூறவும்
 
அடடே நீங்க நல்ல பையன் பிரசன்னவாமே!
அப்ப நன்றி நல்ல பையா!
 
நல்லா எழுதிருக்கீங்க ப்ரசன்னா. எங்களுக்கும் சேர்த்து ரெண்டு பிரியாணியும் ஒரு கை பார்த்துட்டு வந்தது தான் சூப்பர்..

சரி, போட்டோ எதுவும் எடுக்கலியா? ப்ரியன் வருவேன்னு சொல்லிகிட்டு இருந்தாரே.. நாகை சிவா எப்பங்க இந்தியா போனாரு? சூடான்ல கண்ணிவெடி ஆராய்ச்சி தானே செஞ்சிகிட்டு இருக்காருன்னு இல்லை நினைச்சேன்...
 
பிரசன்னா,

நீங்க வந்திருந்தீங்களா?

ம்ம்ம் சுட சுட ரசிகவ் போட்ட பிரியாணி போலவே சுட சுட பதிவு போட்டுடீங்க!

நானும் , சிங்.ஜெயக்குமாரும் பத்து மணியிலிருந்து அங்கேயேதான் இருந்தோம் மதியம் 3.30 வரை.நிலாரசிகனும் 12 மணிக்கு எங்களுடன் இணைந்துக் கொண்டார்.

நாகைசிவா வந்திருந்தாரா?

துபாய் ராஜா வந்து யாரையும் பார்க்க முடியவில்லை என சொன்னதாய் பாலபாரதி காலை அலுவலகம் வரும் வழியில் செல்பேசியில் அழைத்துச் சொன்னார்...

ம்ம்ம் எல்லோரும் வந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டதே :(
 
அடடடா தப்பு நடந்து போச்சுங்க.. நாகை சிவா தொலைபேசியில் தான் வாழ்த்து சொன்னாராம். நாந்தான் தப்பா எழுதிட்டேன்.. மாத்திடுறேன். இதான் அரை தூக்கத்துல எங்கயும் போக கூடாதுங்குறது...
 
சிவஞானம்ஜி கண்டிப்பாய் இன்னொரு முறை நிலவை சந்திப்பேன். நம்ம ஊர் மாப்பிள்ளைக்கு விருந்து குடுக்கலைனா எப்படி? காலைல பேசினேன். அவரும் வருவதற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்.. எப்படியும் 3 மாசம் இங்கதான இருக்க போறார்.. அப்புறம் அந்த நல்ல பையன் மேட்டர் வேற ஒண்ணும் இல்லை தலைவா, என்னுடைய மின்னஞ்சல் முகவரி mrniceguy467. அதை தமிழ்படுத்தி திருவாளர் நல்ல பையன்னு சொல்லிப்பேன்.
 
பொன்ஸ் அக்கா, போட்டோ எல்லாம் அஜித் குமார் கல்யாணத்துக்கு எடுத்தா மாதிரி ஒரு 20 பேர் எடுத்துகிட்டு இருந்தாங்க. நான் கேமரா கொண்டு போகலை. நிலவு நண்பன் அப்புறமா போட்டோ எல்லாம் குடுப்பார்னு நினைக்குறேன். அப்படினாலும் ரொம்ப நாளைக்கு இணையத்தில வீட்டு பெண்கள் புகைப்படம் இருக்குறது ரிஸ்க் தான.
 
ப்ரியன் சார், நீங்க திருநெல்வேலி தானா.. எனக்கு ஒரு நாலஞ்சு பேர பார்க்க அடையாளம் தெரிஞ்சா மாதிரி இருந்தது.. ஆனா பக்கத்துல போய் கேக்கலை.. உங்கள கூட பாத்திருப்பேன். நீங்களும் என்னை பார்த்திருக்கலாம். நம்ம ஊர்ல இவ்வளவு அழகான பையனா?? அப்படின்னு ஆச்சரியப்பட்டிருக்கலாம். அதுக்கு தாங்க நம்ம புகைப்படத்தை தனி மெயில்ல ஷேர் பண்ணிகிட்டிருந்துருக்கணும்.
 
அன்பு பிரசன்னா திருமண விழாவைப் பற்றிய விவரம் சுருக்கமாகவும் கச்சிதமாகவும் இருந்தது.

அன்பு ஞானிக்கு மீண்டும் உங்கள் மூலம் வாழ்த்துக்கள்.

ஆனா நீங்க யாரையும் சந்திக்கலேங்கறதுதான் கொஞ்சம் வருத்தமான விசயம்.
 
நன்றி பிரசன்னா..

திருமண அவசரத்தில் யாரையும் சரிவர கவனிக்கவே முடியவில்லை..மன்னித்துக்கொள்ளுங்கள்..

இந்த உதவியை மறக்கவே முடியாது..

திருமண பரபரப்புகள் முடிந்தவுடன் தொலைபேசியில் அழைக்கின்றேன்
 
நன்றி மஞ்சூர் ராசா, அடுத்து உடனே நம்ம ஆள் ஒருத்தருக்கு கல்யாணம் வர்ற மாதிரி இருக்கு. அறிவிப்பு வந்த உடனே சொல்றேன். அப்ப எல்லாரையும் பாத்துகிட்டா போச்சு..
 
என்ன ரசிகவ் சார், நன்றி எல்லாம் சொல்லிகிட்டு. உங்க அழைப்புக்காக காத்துகிட்டு இருக்கேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]