html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: சதுரங்கம்..

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Friday, June 02, 2006

 

சதுரங்கம்..

முதல் முதலா திவ்யா என் கிளினிக்கிற்கு வரும் போது, "கணவனால் கண்டு கொள்ளப் படாத இன்னொரு பெண்"அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவ கேஸ் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு பட்டது. அவள எதோ ஒண்ணு ரொம்ப பாதிச்சிருக்கு. அவள அமைதி படுத்துறது பெரிய கஷ்டமான வேலையா இருந்தது.

"பாலா என்னை ஒரு பொருட்டாவே மதிக்குறதில்ல, அவருக்கு எப்பவுமே அவரோட இன்ட்ரெஸ்ட் தான்"

"ஸ்டாக் மார்க்கெட்??"

" இல்ல! அது அவர் வரைக்கும் இருக்க வேண்டியது தான். ஆனா இவர் வெறியா இருக்குறது செஸ் மேல. எப்போ பாத்தாலும் செஸ் செஸ்னு வாழ்க்கய அனுபவிக்க மாட்டேன்றார்"

"புரியலியே!"

"நேத்திக்கு சாயங்காலம் காலாற நடக்கலாம்னு நான் தான் இவர செஸ் போர்ட் முன்னாடி இருந்து இழுத்துட்டு போனேன். அழகான மாலை நேரம், அமைதியான கோவில், பக்கத்துல நான். நியாயமா மனுஷனுக்கு என்ன தோணியிருக்கணும். அத விட்டுட்டு ராணிய தப்பா மூவ் பண்ணதால தோத்துட்டேன் அப்படிங்க்றார்.தட்டுல என்னமோ இருக்கு சாப்பிடணுமேன்னு சாப்பிடுறார்; நடுராத்திரியில கூரைய வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கார், எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.!"

"ஐயோ! ஆமா பாலா யார்கூட விளையாடுவார், எங்க வெச்சு விளயாடுவார்?"

"ஒரு பொண்ணு வரும் சார் வீட்டுக்கு, அதும் இவர மாதிரி தான் செஸ் பைத்தியம்"

ஆகா!! பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடிச்சாச்சு! பொறாமை தானா?? அந்த பொண்ண பத்தி இப்பொ கேக்குறது தப்பு. இல்லாத ஒண்ண இவங்களே கற்பன பண்ணி வாழ்க்கைய பாழாக்கிப்பாங்க. திவ்யாவும் அந்த பொண்ண தப்பா நினைக்கல.

"அவங்க ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?? நல்லா கலகலனு பேசுமா அந்த பொண்ணு."

"நீங்க வேற! ரெண்டு பேரும் சுத்தமா பேசிக்க மாட்டாங்க. மூஞ்சியக் கூட பார்த்துக்க மாட்டாங்க. ஒரு தடவை நான் அவங்களுக்கு டீ கொண்டு போனேன். அப்போ ஒரு வாட்டி தாங்க்ஸ்னு சொன்னாஅவ்ளொதான் நான் அவ வாய்ஸ் கேட்டது."

என்னடா இது இந்த கேஸ் இப்படி குழப்புது.

"சரி திவ்யா! நீங்க ஒண்ணு பண்ணுங்க, அந்த பொண்ண இனி வீட்டு பக்கம் வர விடாம நிப்பாட்டுங்க. செஸ் போர்ட உடைச்சி போடுங்க."

"பண்ணி பார்த்தாச்சு சார்! அவங்க ரெண்டு பேரும் ஃபோன்ல செஸ் விளையாடுறாங்க."

"ஙே!!"

"ஆமா சார்! ஒரு செஸ் போர்ட இமாஜின் பண்ணிகிட்டு. அங்க இருந்து நான் இப்படி பண்ரேன்னு அவ சொல்ல, நான் இப்படி அப்படி பண்ணுவேன்னு இவர் சொல்ல, எனக்கு சந்தேகம் வந்து ஸ்பீக்கர் போன்ல விளயாட சொன்னப்ப தான் எனக்கு தெரிஞ்சது. இந்த மாதிரி விளயாட ரொம்ப கான்ஸென்ட்ரேஷன் வேணும் சார்"

கிழிஞ்சது!!

"நீங்க நாளைக்கு வாங்க மேடம்! நல்ல தீர்வா நான் சொல்றென்."

சும்மா சொல்லிட்டேனே தவிர என்ன பண்ணனு எனக்கு தெரியல. யோசிச்சு பார்த்தப்போ தான் தெரிஞ்சது, அந்த பொண்ண கழட்டி விடணும், அதுக்கு திவ்யாவே விளயாண்டா என்ன? சே இவ்ளோ சின்ன விஷயத்துக்கு இப்படி கஷ்டப்பட்டோமே.

அடுத்த நாள் திவ்யா வந்தப்போ என் டேபிள் மேல ஒரு செஸ் போர்ட். அழகா காயின் அடுக்கு வெச்சிருந்தேன்.

"சார்! என்ன இது??"

"நீங்களே இனி பாலா கூட விளயாடுங்க. அப்போ அவர சுலபமா உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்."

"சரி சார் ஆனா எனக்கு அந்த அளவுக்கு விளையாடத் தெரியாதே!!"

"எல்லாம் கத்துக்கலாம். இப்போ ஆரம்பிக்கலாமா?"

விளையாட ஆரம்பித்தது தான் தாமதம் திவ்யாவோட பாடி லாங்வேஜ் சுத்தமா மாறிப் போச்சு. சும்ம நச்னு விளையாண்டாங்க. இந்த அம்மா நல்ல புத்திசாலியா இருக்கணும் , புருஷன்் விளையாடினத பார்த்துட்டு இவ்வளவு அழகா விளையாடுறது கஷ்டம்.
என் காய்கள் ஒண்ணொண்ணா வெளில போய்கிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்யனு தெரியல. கைய கட்டிகிட்டி உக்காந்துட்டேன்.

"என்னாச்சு இன்னைக்கு, அதுக்குள்ள தோத்துட்டீங்க?"

"என்னாச்சு இன்னைக்கா? நாம இதுக்கு முன்னாடி எங்க விளையாடினோம்?"

நான் கேட்டுகிட்டே இருந்தேன், அவங்க கண்டுக்கவே இல்ல. மெதுவா எனக்கு உரைக்க ஆரம்பிச்சது. அவங்க நான் பாலானு நினைச்சு விளையாண்டுகிட்டு இருக்காங்க. அப்போ அவங்க பாலா கூட விளையாடி இருக்காங்க. அடிக்கடி விளையாடி இருக்காங்க. அதான் இப்போ அவங்க திறமை எல்லாம் காட்டி விளையாடுறாங்க. அப்போ அந்த இன்னொரு பொண்ணு யாரு???

"திவ்யா...திவ்யா. போதும் விளையாடினது. நிறுத்துங்க!!"

அவங்க நான் பேசினத கேக்கவுமில்ல. விளையாட்ட நிறுத்தவுமில்ல.

"திவ்யா" நான் இப்போ கத்தினேன்.

"எங்க எங்க! ஏன் இப்பொ கத்துனீங்க? அவள எங்க?

ஒரு நிமிஷத்துல புத்திசாலியா விளையாடிகிட்டு இருந்த திவ்யா காணாமப் போய், அம்மாகிட்ட அடி வாங்க பயந்துகிட்டு பீரொ பின்னாடி ஒளியுற ஒரு பொண்ண நான் பார்த்தேன்.

"ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! இங்க நம்மள தவிர யாரும் இல்ல. யாருக்கு பயந்தீங்க, எதுக்கு பயந்தீங்க??"

"திவ்யாவுக்கு!" பாதி கலங்கிய கண்ணோடு அவள் சொன்னாள்.

Comments:
MPD - பன்முகஆளுமை
 
பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'
பார்த்தீர்களா?பாதிப்பு தெரிகிறது!!!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
 
அய்யா.. உங்க பக்கத்தை திறந்தாலே.. தனிய ஒரு விண்டோ திறக்குது.. அடிக்கடி அது வருது மாத்த முடியுமான்னு பாருங்க..
இல்லாவிட்டால்..
வேறு வீடு பார்க்க வேண்டியது தான்..
அன்பன்
விடுதலை
 
வாங்க சார், வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.
///தனிய ஒரு விண்டோ திறக்குது.. அடிக்கடி அது வருது ////
எனக்கும் அத என்ன பண்ணனு தெரியல, தெரிஞ்சவங்க யாராவது இருந்தா கொஞ்சம் பாத்து உதவி பண்ணுங்க.
பிரசன்னா
 
/// பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'
பார்த்தீர்களா?பாதிப்பு தெரிகிறது!!!!.///
சந்திரமுகி, குடைக்குள் மழை, அந்நியன் எல்லாம் கலந்துகட்டி அடிச்சது தான்.
 
ஹலோ
இந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத் தெரியுமா?
2] அது "இன்னொரு கணவனால்.."னு
இருக்கக்கூடாதுங்க."...இன்னொரு பெண்ணின்..." இருக்கனும்
என்ன நான் சொல்றது சரிதானே?
 
ஆமாம் ப்ரசன்னா..
நேரம் கிடைக்க வேண்டாமா?
அதுவும் சொந்த கணிணி இல்லாத ஆசாமி நான். ப்ரவுசிங் செண்டர் தான் நம்ம.. இடம்..
சீக்கரம் அதை சரி பண்ணுங்க..
தெரியாட்டி.. அதுக்கு த்னிப்பதிவு போடுங்க..
நானும் களத்திற்கு வந்துட்டேன்...
:)
 
///ஹலோ
இந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத் தெரியுமா?//
எழுதி இருந்தேனே தலைவா படிக்கலையா??
http://nanprasanna.blogspot.com/2006/06/4.html
 
///ஆமாம் ப்ரசன்னா..
நேரம் கிடைக்க வேண்டாமா?
அதுவும் சொந்த கணிணி இல்லாத ஆசாமி நான். ப்ரவுசிங் செண்டர் தான் நம்ம.. இடம்..///

நாமளும் பிரவுசிங் சென்டர்ல ஆரம்பிச்ச ஆளுங்க தாங்க. இனி உங்க கணினிய நீங்க நல்லா பாத்துப்பீங்கனு நினைக்குறேன்.(வாங்கினா), யுனிகோட் எழுத்துரு இருக்குற மையத்த தேடிப் பிடிக்க கஷ்டமா இல்லை??

///நானும் களத்திற்கு வந்துட்டேன்...
:)///
வாங்க வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!! :-)
 
one-click notification test
 
கஷ்டம் தலைவா.. கஷ்டம்.. இந்த பொன்ஸு பொன்ஸூன்னு ஒரு பொண்ணு நிம்மதியா ப்ளாக் படிக்க விடாம, பசி பசின்னு படுத்தறா.. அவ கிட்டேர்ந்து கொஞ்சம் காப்பாத்தறீங்களா?

அத்தோட, உங்க கதை ஆரம்பத்திலயே ஊகிச்சிட்டேன்.. செஸ் பொண்ணு பேரையாவது மாத்தி இருக்கலாம்..
 
உங்க அறிவும், திறமையும் எல்லாருக்கும் இருக்குமா அக்கா. அதுவும் போக கதை எழுதுறதுல நான் அப்பரண்டிஸ் தான. இன்னும் போக போக பி.டி. சாமி மாதிரி திடுக் திருப்பங்களோட கதை எழுத முயற்சி பண்றேன்.
பசி பசினு சொல்ற அந்த பொண்ணு நாக்கை அறுத்தா சரியாப் போயிடும்.
;-)
 
Beautiful Mind.
Kadhalai romba anubavichu elluthareenga aiya.
"ஙே!!"
Mudhan Mudhalaga Ketkirane..Idhu Tamiraparani Tamila...
Anbudan
Kulipirai Chidambaram
 
ஆமாங்க, நமக்கு காதல்ல கொஞ்சம் அனுபவம் நிறைய கேள்வி அறிவு எல்லாம் உண்டு. எப்படி எல்லாம் காதலிக்கணும்னு நினைச்சேனோ அப்படியெல்லாம் இன்னைக்கு காதலிச்சுகிட்டு இருக்கேன். அது என்னோட பெண்ணாசை பொல்லாதது கடைசி பாகத்துல வரும்ங்க. நமக்கு திருநெல்வேலி தானுங்க. சினிமால நம்ம ஊர் பாஷைய பேசுறேன் பேர்வழினு கொலை பண்ணுவாங்க. நான் அது மாதிரி எல்லாம் எதுவும் பண்ணலனு நினைக்குறேன்.
தொடர்ச்சியான வருகைக்கு நன்றி சிதம்பரம் சார்.
 
பிரசன்னா, ஏற்கனவே இந்த கதையெ படிச்சிட்டேனோ? ஒரே குழப்பமா இருக்கப்பா.

அப்புறம், நம்ம பக்கம் வந்ததுமல்லாமெ
வாழ்த்து சொல்லி ஞாபகப்படுத்தியதற்கும் நன்றிகள்.
 
அடடா நன்றி எல்லாம் சொல்லி நம்மள அந்நியபடுத்துறீங்களே..
நீங்க நம்பிக்கை குழுமத்துல மெம்பரா என்ன. அந்த கதை போட்டிக்கு தான் இந்த ரெண்டு கதையும் அனுப்பி வெச்சேன்.
பிரசன்னா
 
heh..i guess it wud b better if u write in tamil..that wil enable more ppl to read...
 
nice post ....blogrolling you
 
I thought this is tamil... Nivya is this meant to be some insult???
Thanks supriya your blog rocks...
 
have u read tell me ur dreams............... multiple personality disorder... ur too good...
 
Jai,

Tell me your dreams is one of my favourite novel.. Really. Anniyan copied tell me your dreams in various scenes :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]