html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: May 2006

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, May 28, 2006

 

பெண்ணாசை துரத்துதே!!!

நான் போன செவ்வாய் காலைல தான் சென்னைல இருந்து, திருநெல்வேலி திரும்பி வந்தேன். வந்த உடனே அம்மா "டேய்! நம்ம கல்லிடைகுறிச்சி மாமாவுக்கு உடம்பு சரி இல்லடா, சுதர்ஸன் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க. நிலமை கொஞ்சம் மோசம் தான். கொஞ்சம் போய் பார்த்துட்டு வர்றியா?"
எங்க கல்லிடைகுறிச்சி மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். பாசாங்கு இல்லாத மனுஷன். அதுக்கு மேல என் மேல ரொம்ப பிரியம் வெச்சிருந்த நல்லவர். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. சொந்தம் என்னவா இருந்தாலும், வயசுக்கு மூத்தவங்கள அண்ணன், அக்கா அப்படின்னு கூப்பிட்டே பழக்கம் ஆகிடுச்சு.
மாமாவ ஐ.சி.யூல வெச்சு இருந்தாங்க. அந்த ஆஸ்பத்திரில என்ன கூத்துன்னா, பேஷன்ட், ஐ.சி.யூல இருந்தா கூட வந்தவங்க தங்க ரூம் கிடையாது. வெளில தான் தங்கணும். அதுவும் போக அந்த இடத்துல கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்ததால ஒரே மண்ணும், சிமெண்டும் மேல விழுந்துட்டு இருந்தது. மதியம் ஒரு 12 மணிக்கு என்னையும் அவங்க கணவரையும் உக்கார சொல்லிட்டு, எங்க அக்கா குளிக்க பக்கத்துல உள்ள ஃபிரண்ட் வீட்டுக்கு போய்ட்டாங்க.
ராத்திரி உடன் டிக்கட்ல வந்ததால கண்ணெல்லாம் பயங்கர எரிச்சல்.
"அத்தான்! நான் படுத்துக்குறேன், எதுனா வேணும்னா எழுப்புங்க" அப்படின்னு சொல்லிட்டு சாய்ஞ்சுட்டேன்.
அவர் நமக்கு பக்கத்துலயே கொஞ்ச நேரம் கழிச்சு சாய்ஞ்சுட்டார். வெளில தான் படுக்க வேண்டி இருந்ததால நல்ல உறக்கம் எல்லாம் இல்ல. திடீர்னு முன்னால மெடிக்கல் கவுண்டர்ல ஒரு பொண்ணு நிக்குறா. என்னாடா தெரிஞ்ச முகமா இருக்கேனு பாத்தா, ஷர்மிளா
பக்கத்துல நம்ம அத்தான், செம தூக்கம். சரி இங்க தான போய் என்னனு கேட்டு வந்திடலாம்னு போனேன்.
"ஷர்மிளா?"
"நீங்க எங்க இங்க?" ஆச்சரியமா என்ன பார்த்து கேட்டா.
"எங்க மாமா அட்மிட் ஆகி இருக்காங்க, நீங்க என்ன இங்க?"
"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்!" சொல்லும் போதே கண்ல தண்ணி.
"ஐயய்யோ! இப்ப எப்படி இருக்கு?"
"ஐ.சி.யூல இருந்து வெளில வந்துட்டாங்க, ஆனாலும் ரொம்ப கஷ்டப்படுறாங்க."
அதுக்குள்ள அவங்க பில் வந்துட்டதால, கிளம்பிட்டாங்க.
திரும்பி பாத்தா, எங்க அத்தான், மந்தகாச புன்னகையோட "என்ன தம்பி! கேர்ள் பிரண்டா?"
"சேசே! அதெல்லாம் இல்ல அத்தான். இந்த பொண்ணுக்கு நான் தான் போன வருஷம் பிராஜக்ட் பண்ணி குடுத்தேன். அப்பவே இவங்க அப்பாவ நல்லா தெரியும். அதான் என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்லை."
"அப்படியா! என்னவோ நேத்திக்கு நைட் பூரா ஜெபம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ரொம்ப கஷ்டம் தான்."
சரினு கேட்டுகிட்டேன். அடுத்த நாள்ல இருந்த நான் வேலைக்கு போகணும், காலைல மட்டும் தான் இருக்க முடியும். சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வந்து, காலைல குடுத்த டிபன் பாத்திரங்கள வாங்கிட்டு போகணும். இது தான் எனக்கு குடுக்கப் பட்ட வேலை. ஷர்மிளா இருக்க வேற என்ன வேணும் சந்தோஷமா ஏத்துகிட்டேன்.
வந்த உடனே அக்கா சொல்லிட்டாங்க "பிரஸ்! சார்ஜர் கொண்டு வரல, உன் சார்ஜர் சாயங்காலம் வரும்போது கொண்டு வந்துடு"
"சரிக்கா"
அடுத்த நாள் ஷர்மிளாவ நான் பார்க்கவே இல்லை. அதுக்கடுத்த நாள் காலைல அம்மா ஆஸ்பத்திரிக்கு டிபன் கொண்டு போய்ட்டு அங்க இருந்து நேரா வேலைக்கு போக சொல்லிட்டாங்க. பொதுவா ஆஸ்பத்திரினாலே போர் அடிக்கும், அதனால டான் பிரவுண் டாவின்ஸி கோட் புஸ்தகத்த எடுத்துகிட்டு போனேன்.
அன்னைக்கு பாத்து, மாமாவ ஜெனரல் ரூமுக்கு கொண்டு வந்துட்டாங்க. உடனே அவர ஸ்கேன் பண்ணனும்னு சொல்லி கூப்ட்டு போய்ட்டாங்க, கூட அக்காவும் போக வேண்டியதா போச்சு. இப்ப ஆஸ்பத்திரில உக்காந்து எல்லா பொருளையும் தேவுடு காக்க நம்மள விட்டு போய்ட்டாங்க.
"அக்கா!" நு ஒரு குரல் திடீர்னு
ஆஹா இந்த குரல எங்கேயோ கேட்டிருக்கோமே, அப்படினு நினைச்சுகிட்டே கதவை திறந்தா, ஷர்மிளா!!!
"ஆனந்தி அக்கா இல்ல?"
"எங்க அக்கா தான் ஆமா உங்களுக்கு எப்படி எங்க அக்காவ தெரியும்?"
"அப்பா ஐ.சி.யூல இருக்கும்போது, நாங்க ரெண்டு பேரும் தான் வராண்டாவுல உக்காந்திருப்போம்."
"அப்படியா? சரி ரொம்ப நாளா காண்டாக்டே இல்லையே, ஒரு கால் பண்ணி இருக்க கூடாதா?"
"இல்ல பிரச்சினை வேண்டாம்னு விட்டுட்டேன்."
எனக்கு முகத்துல அடிச்சா மாதிரி ஆகிடுச்சு, இவகிட்ட என்னத்த போட்டு பேசிகிட்டுனு
"என்ன விஷயமா இப்ப வந்தீங்க?"
"செல்போன் சார்ஜர் வேணும்!"
"எப்பவுமே உங்களுக்கு உதவிகிட்டே இருக்கணும்னு எனகு விதிச்சிருக்கு போல இருக்கு, என் சார்ஜர் தான் எடுத்துகிட்டு போங்க"
"இல்ல பரவாயில்ல, என் தங்க வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வருவா"
"என் சார்ஜர் யூஸ் பண்ண உங்க சித்தப்பா கோவிப்பாரா என்ன?
"அப்படியெல்லாம் இல்ல, சரி தங்கை வந்ததும் குடுத்து அனுப்புறேன்."
எனக்கு நான் பண்றது சரியா தப்பானு தெரியல ஆனா இந்த ஒரு 'நட்பு' தொடரணும்னு ரொம்ப விரும்பினேன்.
தினமும் இந்த மாதிரி சின்ன சின்ன இடக்குகள், புன்னகைகள் எல்லாம் கிடைச்சுகிட்டே இருந்தது, நானும் ரசிச்சுகிட்டே இருந்தேன்.
எங்க மாமாவ டிஸ்சார்ஜ் பண்ற நாள் வந்தது,
சாதாரணமா, அவங்க முன்னாடி போற மாதிரி போய் நின்னுகிட்டு,
"சரிங்க, எங்க மாமாவ வேலூர் சி.எம்.சில காட்ட சொல்லிட்டாங்க. இன்னைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ். அப்பாவுக்கு என்ன சொல்றாங்க?"
"ஒண்ணும் சொல்ல மாட்டேன்றாங்க, அதான் பிரச்சினையே, இப்பவே முப்பத்தஞ்சு வரைக்கும் போயிடுச்சு."
"நான் கண்டிப்பா கடவுள வேண்டிக்குறேங்க! அப்ப வரட்டுமா?"
"மறுபடியும் நம்ம பார்க்கவே முடியாதா?"
"இல்ல! அப்படி சொல்ல முடியாது, இப்ப பாருங்க, இந்த ஆஸ்பத்திரில இந்த சூழ்நிலைல நாம சந்திப்போம்னு எதிர்பார்த்தமா என்ன?"
"நாம கடைசியா அந்த ஹோட்டல்ல பேசினது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு"
"எனக்கும் அத மறக்க முடியாது, உங்க தங்கச்சி ஒரு விஷயம் சொன்னாங்க..."
"என்ன சொன்னா?"
"உங்களுக்கும் என்ன பிடிச்சிருந்ததுன்னு.."
உடனே முகத்த வேற பக்கம் திருப்பிகிட்டு, ஒரு நிமிஷம் கழிச்சு
"இப்பவும் சொல்றேன், எனக்கு உங்கள பிடிக்கும், ஆனா நீங்க எந்த தப்பான முடிவுக்கும் வர வேண்டாம்"
"என்னங்க நீங்க, என்ன பிடிச்சிருக்குனு சொல்லி இருக்கீங்க, நான் என்ன தப்பா எடுத்துக்க போறேன்."
"இல்ல, நான் சும்மா சிரிச்சதுக்கே, வீட்டுக்கு கால் பண்ணி எனக்கு நல்லா பூசை வாங்கி குடுத்தீங்க, இப்ப இப்படி சொன்னத்துக்கப்புறம் என்ன செய்வீங்களோ?"
"அன்னைக்கு சித்தப்பா ரொம்ப அடிச்சுட்டாங்களா?"
"பச்! ஆமா, ஆனா எனக்கு வலிக்கல."
"ஏன்?"
"நீங்க எனக்கு பேச முயற்சி பண்ணி இருக்கீங்க அப்படிங்குறதே எனக்கு ரொம்ப சந்தோஷம்..சரி அம்மா ரூம்ல தனியா இருப்பாங்க. நான் வரட்டுமா.. உங்க நம்பர் இன்னும் என்கிட்ட இருக்கு. I will surely call you someday..bye"
இப்ப இந்த பொண்ணு என்ன சொல்ல வருது. வீட்ல அடி விழுது பேசாத அப்படின்னா, இல்லை நீ கால் பண்றது எனக்கு பிடிச்சிருக்குன்னா?
ஒரு மண்ணும் புரியல, என்னமோ போங்க!!

Saturday, May 27, 2006

 

சென்னை தமிழ் டீன்ஸ்..


என்னடா இது சென்னை தமிழ் டீன்ஸ்னு கலவையா ஒரு தலிப்பு இருக்கேனு பார்க்குறீங்களா? அதை பத்தி தான் நான் இப்ப சொல்ல வரேன். சென்னை தமிழ் டீன்ஸ், என் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம்.
போன வருஷம் நான் ஒரு இன்டர்னெட் சென்டர்ல வேலை பாத்தது உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். அப்போ எனக்கு அறிமுகமானதுதான் ஹைஃபை.காம்.
நிறைய பேருக்கு இந்த சைட் பத்தி தெரிஞ்சிருக்கலாம். அதுல எனக்கு கிடைத்த அருமையான தங்கை தான் சிந்துஜா. எல்லாருக்கும் முன்னாடியே சொல்லி இருக்கேன். சிந்துஜா எனக்கு சிபாரிசு பண்ண குழுமம் தான் இது. இதுக்கான சுட்டி.
முதல்ல ரொம்ப சாதாரணமா யார்கிட்டயும் ஒட்டாம கொள்ளாம நாம பாட்டுக்கு போனமா ஃபார்வர்ட் வந்த மெயில அங்க ஒட்டினோமா வந்தோமானு இருந்தேன். ஆனா அதுக்கான இடம் அது கிடையாதுனு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டேன். யாருமே அங்க என்ன மாதிரி வெட்டி கிடையாது. நல்லா படிச்சு வேலையில இருக்குற, படிச்சுகிட்டு இருக்குற பசங்க இருக்குற குழுமம். கொஞ்ச கொஞ்சமா அந்த குழு மக்கள் அவங்க பக்கம் என்ன இழுக்கா ஆரம்பிச்சாங்க.
போகப் போக எங்க குழுமத்துல தேவை இல்லாத விஷயங்கள் குறைந்து எங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பிச்சோம். அருமையான ஒரு நட்பு வட்டத்துல நான் இருக்கேன்.
"அதெல்லாம் சரிடா தம்பி அதப் பத்தி இப்ப ஏன் புலம்புற?"னு தான கேக்குறீங்க.
எங்க குழுமத்தோட மூணாவது சந்திப்பு இந்த மாதம் 21ம் தேதி நடந்தது. நானும், என் நண்பன் பாலாவும் 19ம் தேதியே அங்க இருந்தோம். எங்க குழுமத்தை துவக்கி பெரிய நட்பு வட்டத்துக்கு எங்களை இழுத்த நண்பர் மைக் எங்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அவருடன் அவரது ரூமில் தங்குவதாகத்தான் ஏற்பாடு. அன்று அவரது பிறந்த நாள் ஆகிவிட்டபடியால் மாலை அண்ணாநகர் காஃபி டேயில் பார்ட்டி நடந்தது.
நான், பாலா, என் அண்ணன், சிடிடி (சென்னை தமிழ் டீன்ஸ்) உறுப்பினர் குரு, என் தங்கை சிந்து எல்லாரும் கலந்து கொண்டோம், வழக்கமான விசாரிப்புகள், பரிசளிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, சாப்பிட துவங்கினோம். என்னத்த காஃபி டே, ஒரு மண்ணும் நல்லா இல்லை. இதுல நான் வேற சுவத்துல மாட்டி இருந்த படத்த பார்த்து, அது வேணும்னு கேட்டு, அது வாயில வைக்க சகிக்கல.

அன்னைக்கு பொழுது ஒரு வழியா நைட் 11 மணிக்கு முடிஞ்சுது. அதுக்கப்புறம் சில சொந்த வேலைகள் காரணமாக (ஹிஹி நீங்க நினைக்குறது சரிதான்) நானும் பாலாவும் மட்டும் தனியாக வெளியில் சென்றோம்.

அயனாவரம் அபிராமி மெகா மாலில் பொழுத்தை கழித்து, இரவு 11 மணிக்கு ரூமுக்கு திரும்பி படுத்தாச்சு. அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சென்னை தமிழ் டீன்ஸ் 3ஆவது சந்திப்பு. எல்லாரும் காலை பத்து மணிக்கு காந்தி மண்டபத்தில் சந்திப்பதாக திட்டம். வழக்கம் போல சொதப்பிட்டானுங்க. ஷேர் ஆட்டோல போகும் போதே கால் வந்தது, "பிரஸ், நாங்க சில்ரன்ஸ் பார்க்ல இருக்கோம் வந்துடுடா."
சரினு சொல்லி அங்க போனா எல்லாரும் வந்து இருந்தாங்க. அங்க காலைல எல்லாம் பேசி முடிச்சுட்டு, மத்தியானம் பெசன்ட் நகர் பொன்னுசாமி மெஸ்ல ஒரு புடி புடிச்சுட்டு, சாயங்காலம் பூரா கடற்கரைல விளையாடினது எல்லாம் காலா காலத்துக்கும் ஞாபகம் இருக்கும்.
எனக்கும் இந்த இணைய நட்பு மேல முதல்ல நம்பிக்கை கிடையாது. அதை பொய்யாக்கி இந்த குரூப் அருமையான இணைய நண்பர்களை எனக்கு குடுத்திருக்கிறது.
மேல நான் குடுத்திருக்குற லிங்க் பயன்படுத்தி நீங்களும் எங்க கூட சேர்ந்துக்கலாம், உங்களுக்கு விருப்பம் இருந்தா, உங்களுக்காக ஒரு புதிய, அழகான, உபயோகமான, உங்கள் துக்கங்களில் தோள் குடுக்க, உங்க்ளோடு சேர்ந்து சந்தோஷத்தில் குதிக்க ஒரு பத்து நண்பர்கள் காத்துகிட்டு இருக்கோம்.
நான் என்னோட பயண கட்டுரை மாதிரி தான் எழுதணும்னு நினைச்சேன், ஆனா இது எப்படி எல்லாமோ போயிடுச்சு. அடுத்த சந்திப்பு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
அதுக்குள்ள நீங்க உள்ள புகுந்து எல்லாரோடவும் கலந்துகிட்டீங்கன்னா, ஃப்ன்னுக்கு நான் கேரண்டி.

Thursday, May 25, 2006

 

மதுமிதா கவனத்திற்கு-பிரசன்னா!

வலைப்பதிவர் பெயர்: பிரசன்னா
வலைப்பூ பெயர் : நான் பிரசன்னா
சுட்டி(url) : http://nanprasanna.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: திருநெல்வேலி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தேசிகன் சார் பதிவை படிச்சுட்டு தான் இந்த மாதிரி பண்ணலாம்னு தோணிச்சு.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :December 24, 2005
இது எத்தனையாவது பதிவு: இதை சேர்த்து 30.
இப்பதிவின் சுட்டி(url): http://nanprasanna.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நம்ம பேசுறத யாரும் கேக்குறதில்ல! அதான் இங்க வந்து புலம்பலாம்னு ஆரம்பிச்சேன்
சந்தித்த அனுபவங்கள்: ரொம்ப பெரிய அனுபவம் எல்லாம் எதுவும் இல்லீங்க.
பெற்ற நண்பர்கள்: நிலவு நண்பன், வஜ்ரா ஷங்கர், பரஞ்ஜோதி சார் இப்படி கொஞ்சம் பேரு.
கற்றவை: கையளவு.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கொஞ்ச பேரு படிக்குறாங்க அப்படிங்குற நிறைவு இருக்கு.
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து வலைப் பதியப் போகிறேன்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ரொம்ப சாதரணமான பையன் நான். இன்னும் பத்து வருஷத்துல பெரிய ஆளா வரணும்னு ஆசை இருக்கு. அன்னைக்கு நான் எனக்கு ஒரு பெண் உதவியாளர் வெச்சுகிட்டு வாழ்க்கை வரலாறு எழுதலாம்னு இருக்கேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூ ஒரு நல்ல ஊடகமா வளர்ந்து வருது. அதை எவ்வளவு நல்லபடியா பயன்படுத்தணுமோ அப்படி பயன்படுத்தி படிக்குறவங்க சிந்தனை தூண்டுறா மாதிரி இருக்கணும். அம்புட்டுதேன்

Wednesday, May 17, 2006

 

சந்திப்புகள்

. எங்க ராஜேஸ்வரி அக்கா. இந்த மாதிரி ஒரு பொண்ணு உலகத்துல இருக்கவே கூடாது. இனிமே பிறக்கவே கூடாது அப்படின்னு நான் நினைக்குற ஒரு பொண்ணு.
நான் நினைக்குறது தப்பா கூட இருக்கலாம். ஆனா அவங்க மேல எனக்கு அளவு கடந்த வெறுப்பு. அப்படி அவங்க என்ன பண்ணாங்க. வாங்க என் கூட ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி,
எனக்கு ராஜேஸ்வரி அக்காவ ரொம்ப பிடிக்கும், நல்லா அழகா இருப்பாங்க. எங்க தெருவுல பசங்க எல்லாம் அவங்க வர்றதுக்காக மணிக்கணக்கா காத்துகிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி ஒரு அக்கா கூட நான் பேசுறதே எனக்கு பெருமைனு நான் நினைச்சுகிட்டு இருந்தேன். எங்க அம்மா கொஞ்சம் அழகு கலை, துணில ஜர்தோசி பண்றதுனு பொழுடு போக்கிட்டு இருப்பாங்க. எங்க வீட்ல ரெண்டு பேரும் ஆம்பிளை பசங்க, அதனால தெருவுல உள்ள அக்காமார் எல்லாம் எங்க அம்மாவுக்கு செல்லம். அப்படி எனக்கு அறிமுகம் ஆனவங்க தான் இந்த ராஜேஸ்வரி அக்கா.
ஏற்கனவே அழகு அதிலயும் எங்க அம்மா மேக் அப் பண்ணி விட்டா ராஜி அக்கா படு சூப்பரா இருப்பாங்க. அப்போ தான் நான் 9த் படிச்சுகிட்டு இருந்தேன். பல காதல் படங்கள பார்த்து "இவ்வளவு புனிதமானதா காதல்?" அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த சமயம். ஒரு நாள் ராஜி அக்கா கூட பேசிக்கிட்டு இருக்கும் போது கீழ தெருவுல ஒருத்தர் எங்களயே பாத்துகிட்டு இருந்தா மாதிரி இருந்தது. அக்காவும் அவர் இருக்குற இடத்தையே பாத்துகிட்டு நின்னாங்க. என்னடா இது அப்படின்னு பாத்துகிட்டு இருக்கும்போதே ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டாங்க. சரிதான் அக்கா மாட்டிகிட்டாங்க.
"அக்கா யாருக்கா அவன்? நான் போய் மாமா கிட்ட சொல்லி கூப்டு வரவா?"
"சும்மா இருடா! எல்லாம் தெரிஞ்சவங்க தான்"
"நான் பார்த்ததே இல்லையே?"
"அவரு ஈரோடுல இருந்து வந்திருக்காருடா!"
"ஈரோடு ல இருந்தா எதுக்கு? ஆமா இதெல்லாம் உனக்கு எப்படிக்க தெரியும்?"
"நம்ம ரமேஷ் அண்ணா இன்டர்னெட் சென்டர் ஆரம்பிச்சாங்கல்ல, அப்பொ நான் அங்க போயிருந்தப்ப, கம்பியூட்டர்ல பேசிகிட்டோம். அவர் போட்டோ அனுப்ச்சார். நான் தான் நேர்ல வர சொன்னேன்!"
"பேர் என்ன?"
"நெல்லியன்"
"சரி இப்ப என்ன பண்ண போறீங்க?"
"அதான் எனக்கும் தெரியல"
"சரி நான் பாத்துக்குறேன், ஆனா எங்கம்மா கிட்ட சொல்லிட கூடாது சரியா?"
"நான் ஏண்டா சொல்லப் போறேன்?"
நான் நேரா கீழ போய் "சார்! உங்கள பத்தி இப்பொ தான் தெரிய வந்தது.இங்க இருந்து நேரா பத்து நிமிஷம் நடந்தா வ.உ.சி மைதானம்னு ஒண்ணு வரும். அங்க ஒரு பார்க் இருக்கும். அங்க வெயிட் பண்ணுங்க அக்கா வருவாங்க"
"அவங்க உனக்கு அக்காவா?"
"அப்படித்தான்"
சரினு சொல்லிட்டு அவர் போய்ட்டார். ஆள் நல்லாத்தான் இருந்தாப்புல. சரினு சொல்லி ராஜி அக்கா அம்மாகிட்ட பார்க் கூப்பிட்டு போறேன்னு சொல்லி அவங்கள கூப்டு போனேன். என்னவோ ஒரு தெய்வீக காதலுக்கு உதவி பண்ணி வரலாற்று குறிப்புல இடம் பெறப் போற பூரிப்புல போனேண் கூட.
அவங்க என்ன தனியா நிக்க வெச்சு பேசிகிட்டு இருந்தாங்க. என்னடா இது, இவங்க லவ்வுக்கு நாம தான் ரிஸ்க் எடுத்தோம். நம்மள கழட்டி விட்டுட்டாங்களேனு நினைச்சு கஷ்டமா இருந்தாலும், விடுடா நாமெல்லாம் வழிப்போக்கர்கள் தானேனு விட்டுட்டேன்.
அங்க தான் அவங்க ரெண்டு பேரும் காதல சொல்லிகிட்டாங்க. அப்புறம் நான் எங்க குடும்பத்தோட வேற இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அப்போ அப்போ அந்த நெல்லியன பார்ப்பேன்.
"என்ன சார்! இங்கயே செட்டில் ஆகிட்டீங்களா?"
"ஆமா பிரசன்னா! இங்க ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல இருக்கேன்."
"லவ்ஸ்??"
"அது அப்படியே போய்கிட்டு இருக்கு, நீ ராஜ் கிட்ட பேசவே இல்லியா?"
"இல்ல! சரி சார் நான் கிளம்புறேன்."
"ஓகே!"
இப்படி அப்போ அப்போ பேசிக்குறது அவ்வளவு தான். நான் 11த் படிக்கும் போது வந்த காதலர் தினத்தப்போ எங்க ஊர் சைன்ஸ் சென்டர்ல ரெண்டு பேரையும் பார்த்தேன். அக்காவுக்கு என்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். மதியம் சேர்ந்து சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லிட்டாங்க. என்னல்லாமோ பேசினாங்க. கல்யாணம் பண்ணிகிட்டு ஈரோடு போகணும். ஒரு குழந்தை தத்து எடுத்துகிட்டு இன்னொரு குழந்தை பெத்துக்கணும் அப்படி இப்படினு. அவங்களுக்கு அது ரொம்ப சந்தோஷம் குடுத்திருக்கலாம், எனக்கு பயங்கர கடுப்பாகி போச்சு.
அப்புறம் ஒரு நாள் அம்மா சொன்னாங்க, "நம்ம ராமசாமி கோவில் தெரு ராஜி நினைவு இருக்காடா உனக்கு?"
"என்னம்மா இதெல்லாம் ஒரு கேள்வியா?"
"கல்யாணம்டா அவளுக்கு!"
"மாப்பிள்ளை பேர் வித்தியாசமா இருக்குமே?"
"இல்லயே சுந்தர மூர்த்தினு தான போட்டிருக்கு"
என்னது! ஒரு வேள அவன் பேரு சுந்தர மூர்த்தி தானா, நம்ம கிட்ட நெல்லியன் அப்படினு சொல்லி இருக்கானா?
"அக்காவ நான் ஒரு வாட்டி போய் பாத்துட்டு வரேன்மா!"
"போய்ட்டு வாடா"
அக்கா நல்லா சந்தோஷமாத்தான் இருந்தாங்க, அவந்தான் மாப்பிள்ளை போல இருக்குனு நினைச்சேன்.
"என்னக்கா கல்யாணமாமே, நமகெல்லாம் சொல்றதில்ல?"
"வாங்க பெரிய மனுஷரே! இப்ப தான உங்களுக்கு வழி தெரியுது. அம்மா நிச்சயதார்த்த ஆல்பம் கொண்டாங்க, பிரஸ் வந்திருக்கு"
ஆல்பத்த வாங்கி பாத்தா 1000 வாட்ச் அதிர்ச்சி. மாப்பிள்ள வேற யாரோ.
"என்னக்கா இது?"
"சத்தம் போடாத மாடில போய் பாக்கி பேசிக்கலாம்"
எனக்கு வந்த கோவத்துல பொரிஞ்சு தள்ளிட்டேன்
"ஆம்பிளையா அவன் எல்லாம்? இப்படி ஒரு ஏற்பாடு நடக்குதுனு தெரிஞ்ச உடனே அவன் வந்து உங்க அப்பா கிட்ட பேசி இருக்கணும்ல? எங்க இருக்கான் இப்ப? நான் போய் என்னானு கேக்கவா?"
"நான் தான் அவர வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்க கூடாதுனு சொல்லிட்டேன்"
"ஏன் அக்கா?"
"அவர் என்னாடா மாசத்துக்கு 3000 ரூவா சம்பளமா வாங்குறார், அத வெச்சு எப்படி குடும்பம் நடத்துறது? இப்ப பாத்திருக்குற சுந்தர் சேரன்மாதேவில நல்ல பணக்காரர். தோப்பு , துறவு எல்லாம் இருக்கு. நிம்மதிஆ வாழாலாம். அதான் இந்த முடிவு எடுத்தேன்."
"நெல்லியன் கிட்ட என்ன சொன்னீங்க?"
"என்ன சொல்ல! வீட்ல தெரிஞ்சு போச்சு, அம்மா மருந்து குடிச்சிட்டாங்க. இது சரி வராது. நான் எங்க இருந்தாலும் உங்க நினைப்பாவே இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டேன். அதுவும் நம்பிடுச்சு"
"அதுவா? என்னக்கா நீ, அவன் மனசு என்ன கஷ்டப்பட்டிருக்கும் யோசிச்சு பாத்தியா?"
"அதெல்லாம் பாத்தா நம்ம வேலை ஆகாது பிரஸ்"
"அவர்கிட்ட சொன்னா மாதிரியே என்கிட்டயும் சொல்லி இருக்கலாமில்ல. என்கிட்ட மட்டும் என்ன உண்மை வேண்டிக் கிடக்கு. உன் மேல எனக்கு மரியாதையாவது இருந்திருக்கும்"
"யாராவது ஒருத்தர் கிட்ட நம்ம உண்மை எல்லாம் சொன்னா, அப்புறம் நெஞ்சுல பாரம் இல்லாம வாழலாம் இல்லையா?"
"சரி! நான் கிளம்புறேன். என்ன கல்யாணத்துக்கு எதிர் பார்க்கதீங்க"
சொல்லிட்டு வந்துட்டேன்.
அப்புறம் எனக்கும் அவங்களுக்கும் டச் இல்ல. போன மாசம் பாஸ்போர்ட் ஆபீஸ் ல வெச்சு நெல்லியன பாத்தேன்.
"சார்! எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? உங்க பாப்பாவா? மேடம் எங்க?"
"நான் இப்ப ஸ்டேட்ஸ்ல இருக்கேன் பிரசன்னா, பாப்பாக்கு பாஸ்போர்ட் எடுக்க தான் வந்திருக்கேன்.ஹோட்டல்ல சாப்பிட்டு கிட்டே பேசலாமா?"
"சரி"
"எப்படிப்பா இருக்க? ராஜி அங்கிளுக்கு விஷ் பண்ணு"
"மார்னிங் அங்கிள்! மை நேம் இஸ் என்.ராஜேஸ்வரி"
"சார்! நீங்க இன்னும் அவங்கள மறக்கலையா?"
"இல்லப்பா, அப்படி காதலிச்சிருக்கேன். அவங்க வீட்ல கடுமையான எதிர்ப்பு. கல்யாணம் தான் காதலோட முடிவா இருக்கணுமா என்ன? அதான் நாங்க முன்னாடியே முடிவு பண்ணா மாதிரி இந்த குழந்தைய தத்து எடுத்துகிட்டேன். இப்போ ஜுன்ல அமெரிக்கா போறோம்"
அப்புறம் பாக்கி கதை எல்லாம் பேசி முடிக்கும் போது எனக்கு சிரிப்ப அடக்க முடியல. இந்த அக்கா சேரன்மாதேவி தோப்புகாரன கல்யாணம் பண்றதுக்கு கொஞ்சம் யோசிச்சிருந்தாஅமேரிக்கா போயிருக்கலாம்.
மணி பார்த்தா 1.00 அய்யோ என் அழகான ராட்சஸிக்கு பிறந்த நாள். ஏதாவது வாங்கிட்டு போகலன்னா அவ்வளவுதான். பக்கத்துல என்ன கடை இருக்கு? ஹ்ம் அங்க ஒரு கிப்ட் கடை இருக்கு. நல்ல வேளை.
"என்ன மாதிரி கிப்ட் சார் பார்க்கணும்?"
ஆகா! இந்த குரல எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே
ராஜேஸ்வரி அக்கா!!!!!
"என்னக்கா இங்க என்ன பண்றீங்க. வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?"
"அவன பத்தி பேசாத?" சொல்லும்போதே அக்கா கண்ல இருந்து கர கரனு கண்ணீர்.
"என்னக்கா ஆச்சு?"
"அவருக்கு யாரோ லவ்வர் இருந்திருக்காடா. அவங்க வீட்ல சொன்னதால தான் என்ன கல்யாணம் பண்ணிகிட்டாராம். 5 மாசத்துல அவரோட லவ்வர கூப்பிட்டு வெச்சு குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டார். என்ன ஒரு வேலைக் காரி மாதிரி நடத்துனாங்க. அதான் இப்போ அம்மா வீட்டுக்கே வந்துட்டேன்."
"எல்லாம் சரி ஆகிடும் அக்கா, கல்யாணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே?" அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து வெளில வந்துட்டேன்.
ஆமா, நான் ஏன் நெல்லியன பார்த்ததையும் அவன்கிட்ட செல் நம்பர் வாங்கினதையும் இவங்க கிட்ட சொல்லவே இல்லை?
என்னமோ போங்க.

Tuesday, May 16, 2006

 

பெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.

நாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது. தேவையானப்போ பெட்ரோல் போட்டு யார் வேனும்னாலும் எடுத்துட்டு போயிட்டு வருவம்.
அப்போ தான் ஒரு விஷயமா என்.ஜி.ஓ காலனி போயிருக்கும் போது, நானும் ஐயப்பா அண்ணனும் ஒரு பொண்ண பார்த்தோம், அது என்னடான்ன சரியான லுக். நம்ம ஐயப்பா அண்ணன் இருக்கார்ல அவர் ஸ்டைலே தனி. ரோட்ல ஒரு பொண்ணு தல நிமிந்துறக் கூடாது.ஸ்டைலா காலர தூக்கி விட்டு "தொல்லை தாங்க முடியலப்பா, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி முறைச்சு முறைச்சு பார்க்குதுங்க". அண்ணன் அது கழுத்து வலிக்குதுனு சொல்லி கழுத்த திருப்பி இருக்குனு சொன்னாலும் "அது எப்படி நான் இருக்குற பக்கம் திரும்பலாம்?" அப்படின்னு கேக்குற ஆளு. அப்படிபட்ட ஒரு ஆள இந்த பொண்ணு லுக் விட்டு போயிடுச்சு. நான் ஒருத்தன் நிக்குறேன்னு எண்ணமே இல்லாம வண்டியத் திருப்பி கிட்டு அந்த பொண்ணு பின்னாடி போய்ட்டார்.
போய்ட்டு வந்து "டேய் தம்பி! அண்ணனுக்கு பிக் அப் ஆகிடுச்சுடா!" அப்படின்னார். எனக்கு இன்னும் புரியல எப்படி ஐயப்பா அண்ணனுக்கு மட்டும் எல்லா பொண்ணும் விழுது. சரி விடுங்கப்பா அப்படின்னு வந்தாச்சு. இந்த மேட்டர பாளையங்கோட்டை வந்த உடனே போஸ்டர் அடிக்காத குறையா எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. பாலாவுக்கு பொசுங்கல் தாங்கல.
அடுத்து ஒரு வாரம் கழிச்சு, நானும் பாலாவும் படத்துக்கு போகலாம்னு வண்டி எடுத்துட்டு போனோம். அப்ப இதே மாதிரி தான் ஆனா கொஞ்சம் பெரிய பொண்ணு சைக்கிள்ல அதே மாதிரி பாத்துகிட்டே போச்சு.
"நிறுத்து! நிறுத்து வண்டிய நிறுத்து!" பால கத்துனான்.
என்னவோ ஏதோ அப்படின்னு வண்டிய நிப்பாட்டுனா, "அங்க ஒரு பொண்ணு நம்மள பார்த்துகிட்டே போச்சு. என்னானு போய் விசாரிக்கலாமா?"
"எது? நம்மளயா? அது எப்படி?"
"அப்படி இல்லா, நீ வண்டி ஓட்டுன, உன் முகம் அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா அவ திரும்பி பார்த்துகிட்டே போனா, அதுக்காக அவ என்னதான் பார்த்தானு நான் சொல்ல வரல!"
"நிறுத்து, அந்த பொண்ணுகிட்ட போய் இப்ப என்ன பேசப் போற?"
"ஐயப்பனுக்கு ஒரு உமா கிடைச்ச மாதிரி நமக்கு ஒரு ரமா கிடைக்க மாட்டாளா?"
"இப்பவே சொல்லிட்டேன்! நீதான் பேசணும் எனக்கு அந்த பொண்ணுகிட்ட ஒண்ணும் கிடையாது"
"நீ அவள நிப்பாட்டு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்."
அவன் பேச்ச நான் நம்புவனா! எல்லாம் விதி.
எங்க போறான்னு பாத்து, அவள போய் நிப்பாட்டினேன். பயங்கரமா திரு திருனு முழிச்சா.
பாலா பின்னால இருந்து ஸ்டைலா இறங்கினான், என்னதான் பேசப் போறான் அப்படின்னு நான் பார்க்குறப்பவே, என்ன பாத்து "மாப்ளே! ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லிடு"
"அட சுந்தர பாண்டியா கவுத்துட்டியே"னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, பழைய்ய்ய்ய்ய்ய்ய டெக்னிக் ஒண்ணு யூஸ் பண்ணேன்.
"நீங்க பூர்ணிமா தான?"
"இல்ல என் பேர் சிவசங்கரி"
ஆகா இந்த பொண்ணு பிரச்சினை பண்ணாதுனு ஒரு நம்பிக்கை வந்தது. அப்புறம் அவ எங்க படிக்குறா என்ன ஏதுன்னு கேட்டு வெச்சிகிட்டோம். பிரபலமான கல்லூரி என்பதால் பேர் குறிப்பிடவில்லை. "நான் தினமும் இந்த வழியா தான் கம்ப்யூட்டர் கிளாஸ் போவேன்" அப்படின்னு ஒரு கூடுதல் தகவல் வேற.
"சரி! கிளம்புறோம்" அப்படின்னு கிளம்பினா, "வெரி நைஸ் மீட்டிங் யூ" அப்படின்னு கை குடுத்தா. அதுவரைக்கும் சீன்லயே வராத நம்ம பாலா பாய்ஞ்சு கைய பிடிச்சுட்டான். அன்னைக்கு அவன் போட்ட ஆட்டம் இருக்கே, தாங்க முடியலடா.
இதுல ஒரு மேட்டர் சொல்லியாகணும். சும்மா சுடிதார் போட்டு ஒரு பொம்மைய நிக்க வெச்சா கூட நான் விடமாட்டேன். ஆனா ஏன்னே தெரியல அந்த பொண்ணும் மேல எனக்கு ஒண்ணும் தோணல.
அடுத்த நாளைக்கு கரெக்டா அவ கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன்னு சொன்ன நேரத்துக்கு நம்ம பய ஆஜர். அந்த பொண்ணும் கிராஸ் பண்ணி போச்சு. ஆனா நம்ம பயல கண்டுக்கல.. அவ்வளவு தான்.
ஒரு அரைமணி நேரம் கழிச்சு நான் போனேன். சபைல* நின்னுகிட்டு இருந்தான். என்னடா அந்தப் பொண்ண பாத்தியான்னு தான் கேட்டேன்.
"சும்மா இரு மாப்ளே! அந்த பொண்ணு ஒண்ணும் நல்ல பொண்ணு மாதிரி தெரியல,எல்லாவன் கிட்டயும் பேசுது, சிரிக்குது எனக்கு அது வேண்டாம். நீ வேணும்னா போ."
"எது? டேய் சும்மா இருந்தவன வண்டிய திருப்ப சொல்லி, இப்ப இப்படி பேசுறியா? அங்க அப்படியே நிப்பாட்டிக்க, இனிமே ஃபாலோ பண்ணு அப்படி இப்படினு எதுனா பேசுன, உங்கய்யா கிட்ட சொல்லிடுவேன்"
இது எல்லாத்தையும் அன்னைக்கு சபைக்கு புதுசா வந்து இருந்த ஒரு பையன் கேட்டுகிட்டு இருந்தான். அவன் பேரு மணி.கராத்தே பிளாக் பெல்ட்.
"பாஸு"
"என்ன?"
"எனக்கு அந்த பிள்ளைய காமிக்கியளா?"
இவன் பொதுவா இப்படி பேசுற ஆள் கிடையாது. அதாவது நல்ல பையன்னு நினைக்க வேண்டாம், தைரியம் பத்தாது. அதனால நான் முன்னாடியே சொல்லிட்டேன். தூரத்துல இருந்து தான் காமிப்பேன், அப்படியே போய் பிக் அப் பண்ணிக்கணும். சரியா?
எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, கரெக்டா நூற்றாண்டு மண்டபம் முன்னாடி நின்னுகிட்டான். பய வரட்டும்னு நானும் இருட்டுல காத்து கிடந்தேன்.
அந்த பொண்ணும் சைக்கிள்ல வந்தா. தைரியமா கை காட்டி நிப்பாட்டிட்டான்.
"பேஷ்! பாலாவுக்கு இவன் பரவாயில்லை"
அடுத்து அவன் வெச்சான் பாருங்க அணுகுண்டு,
"என் நண்பன் உன்கிட்ட பேச ஆசை படுறாப்ல, அங்க நிக்குறான் பாருங்க"
இதுக்கு அவனே பரவாயில்லையேடா..
அந்த பொண்ண சொல்லியும் தப்பில்லை, ரெண்டாவது வாட்டி நான் வழியுறேன், "நீங்க பேசணும்னா நீங்களே நிக்க சொல்லலாமே, யாரோன்னு நினைச்சு போயிருப்பேன், உங்க வண்டிய பாத்து தான் நின்னேன்."
"அடிப் பாதகத்தி!!" மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.
"இல்ல சும்மாத்தான், ஆங், இது என் நண்பன் மணி." இவன கோத்து விட்டு நம்ம தப்பிச்சுகலாம்னு பார்த்தேன்
அவன் ஒரு பெரிய ஜென்டில் மேன் ரேஞ்சுக்கு தலைய லைட்டா ஒருதரம் ஆட்டிட்டு வேற பக்கம் திரும்பிகிட்டான்.
சம்பந்தமில்லாம ஏதோ பேசிட்டு, அவள அனுப்பிட்டு இவன்கிட்ட வந்தேன்.
"ஸாரி பாஸ்! பிள்ள பக்கத்துல வந்த உடனே என்ன பண்ணனு தெரியாம பதட்டத்துல இப்படி பண்ணிட்டேன்."
"என்னவோ! இனி என்ன இதுல இழுக்காத"
"அப்படி சொல்லாதீங்க, நான் அந்த பிள்ளைய சீரியஸா லவ் பண்றேன்."
"எது? இது எப்பலேர்ந்து?"
"இப்பத்தான்! பாத்த உடனே பிடிச்சு போச்சு"
அதெப்பிடிடா உங்களுக்கு மட்டும்.. சரி விடு.
"நான் என்ன பண்ணனும் அதுக்கு.?"
"ஒண்ணும் பண்ண வேண்டாம் தலைவா. என் கூட வந்தால் போதும்."
"என் வரலாறு எல்லாம் தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட!" (இன்னொரு பதிவு)
"என்னவோ விடுங்க நாளைக்கு சாயங்காலம் ஒரு 5.30க்கு சபைக்கு வந்திடுங்க பேசிக்கலாம்"
அடுத்த நாள் நான் வேணும்னே லேட்டா போனேன். அங்க பாத்தா நம்ம பாலா, மணி எல்லாம் உக்காந்திருந்தாங்க. அதுல நம்ம மணிக்கு காது கீதெல்லாம் கிழிஞ்சு ரத்தம். எங்கயோ வண்டில விழுந்திருப்பான்
"வாடா, எங்க போன! உன்னால பாரு பல்லி கில்லெல்லாம் உடைஞ்சிருக்கு!"
"நிறுத்து, இவன் வண்டில விழுந்ததுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பு?"
"வண்டில விழுந்தானா, ஹிஹி, சிவசங்கரி ஆள போட்டு அடிச்சிட்டு வந்திருக்கான்."
"என்னது அவளுக்கு ஆள் இருக்கா?"
"நான் தான் சொன்னேன்ல மாப்ளே, அவ எவனப் பாத்தாலும் இளிக்கா, "
"மேல ஒண்ணும் பேசாத, தெரியாதவங்கள பத்தி பேசுறது தப்பு, அதிலயும் பொட்ட பிள்ளைகள பத்து நம்ம ஊர்ல பேசுறது ரொம்ப தப்பு."
இப்ப தான் மணி வந்தான்.
"ஸாரி பாஸ்"
"பரவாயில்ல, என்ன ஆச்சு?"
"நீங்க வர லேட்டாயிட்டா, அதான் நான் அப்படியே நடந்து போகலாம்னு போனேன். நேத்து நாம அந்த பொண்ணு கூட பேசின எடத்துல இன்னொருத்தன் நின்னு பேசிகிட்டு இருந்தான். அதான் எனக்கு கோவம் வந்திட்டு அடிச்சுபுட்டேன்."
கொஞ்ச நேரம் நிறுத்திட்டு, "சாரி பாஸ்"னான் மறுபடி.
"இது எதுக்கு?"
"இல்ல அவன அடிச்சு முடிச்சப்புறம், டேய் உன்ன யார் அனுப்புனான்னு எனக்கு தெரியும், அவன்கிட்ட போய் சொல்லி அவன் என்ன கலரா இருந்தாலும், அழகா இருந்தாலும் அவன்கிட்ட வரமாட்டேன்னு அப்படின்னு அந்த பொண்ணு சொல்லிச்சு"
"என்னடா சொல்ற"
"இன்னொரு விஷயம்"
"இன்னொண்ணா?"
"அந்த அடிபட்ட பய, புதுப்பேட்டை தெரு. பாத்து இருந்துக்குங்க, நான் வரேன்."
"டேய் அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொன்ன நேத்திக்கு"
"அந்த பொண்ணு தான் இன்னொருத்தன லவ் பண்ணுதே, நாம ஒரு லவ் பேர்ட்ஸ பிரிக்க கூடாது."
இவன் என் வாழ்க்கைல மட்டும் விளையாடலாமா? என்ன கொடுமை இது. புதுப்பேட்டை தெரு மோசமான தெருவாச்சே. செட் சேந்தா கும்மி எடுத்துருவாங்களே. இவனுக்கு போய் நான் உதவி பண்ணுவனா? இன்னைக்கு வரைக்கும் அந்த மரண பயத்துலயே வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதனால தான் சொல்றேன், உங்க பெண்ணாசை மட்டும் இல்லை, உங்கள சுத்தி இருக்குறவன் பெண்ணாசையும் பொல்லாதது..
-----------------
சபை- இது நாங்க எல்லாம் கூடுற எடம். பெருசா சரித்திரமெல்லாம் இல்லை. நேர் மாடில ஒரு டியூஷன் உண்டு. அதுல ஒரு 3 பொண்ணுங்கள ரூட் விட்டோம். அதுகல மிஸ் பண்ணக் கூடாதேன்னு அங்க நின்னு நின்னு அது கூடுமிடம் ஆகிப் போச்சு. திருநெல்வேலி காரங்களுக்கு தெரியும். தெற்கு பஜார் சரஸ்வது ஸ்டோருக்கு எதுத்தால நிப்பம்.

Monday, May 15, 2006

 

பிறந்தாலும் பொம்பளையா பிறக்க கூடாது!

சமீபத்தில் என் பதிவில் பின்னூட்டமிட்ட சக வலைப்பதிவாளர் பத்மபிரியா அவர்கள் வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த ஒரு பதிவு நம்மள ரொம்பவே பாதிச்சது.
அப்பா அம்மாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைச்சு போடுற பொண்ணுங்க நிலமை ரொம்ப பாவம்பா. அவங்களுக்கு அவங்க குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தணும், அந்த நேரத்துல அவங்களோட சந்தோஷமோ சின்ன சின்ன ரசனையான விஷயங்களையோ அவங்க அனுபவிக்க முடியாத்து கொடுமையான விஷயம் தான.
நாம ஆம்பிளை பசங்க, சம்பாரிச்ச பணத்த அப்படியே வீட்டுக்கு குடுக்குறது பெரும்பாலும் இல்லை. செல்பேசி ரீசார்ஜ், பைக்குக்கு பெட்ரோல் அப்படி இப்படினு கொஞ்சம் எடுத்துப்போம். ஆனா இந்த மாதிரி சில சுதந்திரங்கள் கூட உழைக்கும் சில நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு கிடைப்பதில்லையே! தப்பி தவறி எதாவது கோவத்துலயோ ஆபீஸ் டென்ஷன்லயோ தப்பான வார்த்தைகள் வந்து விழுந்துட்டா"சம்பாதிக்குற திமிர்"னு அம்மாவே சொல்லும்போது இந்த் பொண்ணுங்களுக்கு சுருக்குன் இருக்காதா???
நான் ஏன் இப்படி எழுதுறேன்னா, எனக்கு தெரிஞ்சு என் கண் முன்னாடி ஒரு அக்காவுக்கு இப்படி நடந்திருக்கு. அந்த அக்கா பேரு இந்துமதி அக்கா. நல்லா படிப்பாங்க. நான் 5த் படிக்கும் போது அவங்க கிட்ட தான் டியூஷன் படிச்சேன். அப்புறம் ரொம்ப படிக்க சொல்றாங்க அப்படின்னு நின்னுட்டேன். ஆனா எங்க அம்மாவுக்கு எப்பவுமே அந்த அக்காவ ரொம்ப பிடிக்கும் அப்படிங்குறதுனால எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.
உண்மைலியே சொல்லணும்னா எங்க இந்துமதி அக்கா ஒரு ஜகஜ்ஜால் ஜில்லி. எவ்வளவு பெரிய வேலை குடுத்தாலும் முகம் சுளிக்காம செய்வாங்க. ஒரு கல்யாண வீட்ட ஒதுங்க வைக்கணும்னா கூட அவங்கள தன் எல்லாரும் கூப்பிடுவாங்க. எனக்கு கூட ஸ்கூல்ல பேச்சு போட்டி, கவிதை போட்டி எல்லாம் வந்தா அவங்க தான் எழுதி தருவாங்க.
அந்த அக்கா காலேஜ் முடிக்கும் போது அவங்க அப்பா ரிடையர் ஆகிட்டாங்க. அப்போ தான் அவங்களுக்கு பிரச்சினை ஆரம்பிச்சது. உடனே ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டிய நிலமை. அவங்களுக்கு ரெண்டு தம்பி. ஒருத்தன் காலேஜ், இன்னொருத்தன் 10த். உங்களுக்கே தெரியும் எவ்வளவு கஷ்டம் அப்படின்னு. ரெண்டு பேரும் எக்ஸ்ட்ரா செலவு ஒண்ணும் வைக்கல அப்படினாலும், பீஸ், அது இதுனு ரொம்பவே செலவு.
கடவுள் புண்ணியத்துல ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சது. அவங்க அப்பாவுக்கு என்னமோ செங்கோல் கைமாறுனா மாதிரி ஒரு ஃபீலிங். அவ்வளவு தான் டார்ச்சர் ஆரம்பிச்சது. கொஞ்சம் வேலைல இருந்து வர லேட் ஆனா கூட "எவன்கூட சுத்திட்டு வர?" அப்படின்னு ஆரம்பிச்சு, ஒரு கட்டத்துல சாயங்காலம் ஆபீஸ் வாசல்ல போய் நின்னுக்குற அளவுக்கு ஆகிப் போச்சு.
எதுக்கெடுத்தாலும் சந்தேகம், சம்பள பணம் பூராத்தையும் வாங்கி வெச்சுகிறது. இந்த மாதிரி பல பிரச்சினை. அப்பொ தான் நான் அவங்கள பார்த்தேன். வேலைக்கு போய்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க.
"ட்ரீட் எங்க?"
"ம்ம்! நாளைக்கு சாயங்காலம் அரசன் வந்துடுறியா?"
"சரிக்கா!"
அடுத்த நாளைக்கு காலைலயே ஒரு ஃபோன் வந்தது, இந்து அக்கா தான் பேசினாங்க.
"பிரஸ்! அரசன் வேண்டாம்மா! நீ சாயங்காலம் வீட்டுக்கே வந்துடேன். இங்க வெச்சு பாத்துக்கலாம்."
"சரிக்கா"
சாயங்கலம் அவங்க வீட்டுக்கு போனா எனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செட். சும்மா வாசனை தெருவையே தூக்கிச்சு.
அவங்க அப்பா, தம்பிங்க எல்லாருகிட்டயும் பேசிட்டு சாப்பிட உக்காந்தேன். அக்கா ஒரு வார்த்தை பேசலியே. அவங்க அப்பா தான் விடாம பேசிகிட்டே இருந்தார்.
"இது எல்லாம் என்ன பிரஸ். அவங்க அம்மா பூரி பண்ணா அவ்வளவு நல்லா இருக்கும். புண்ணியவதி போய் சேர்ந்துட்டா. இந்த கழுதைக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது, வேலைக்கு போறேன் அப்படின்னு ஒரு சாக்கு வெச்சுகிட்டு ஒரு வேலை பண்றதில்ல எல்லாம் நான் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்."
"அப்படி என்ன சார் வேலை இருக்க போவுது. சமைக்குறது அக்கா பாத்துப்பாங்க, வீடு சுத்தம் பண்றது எல்லாம் கேக்கவே வேண்டாம். நீங்க என்ன பண்ணுவீங்க.?"
"காலைல எழுந்து வாசல்லா பால் பாக்கேட் இருக்கும், அத உள்ள வைப்பேன். நானே போய் பேப்பர் வாங்கிட்டு வருவேன். இவள கொண்டு போய் ஆபீஸ்ல விடுவேன். அப்புறம் சாயங்காலம் இவள கூப்டு வருவேன். இப்பொல்லாம் மதியம் நானே எடுத்து போட்டு சாப்பிட வேண்டி இருக்கு."
"இவ்வளவு வேலை செய்யாதீங்க சார்! உடம்பு கெட்டு போயிட போகுது"
நான் சொன்னத அவர் புரிஞ்சுக்கல, சரினு சொல்லி கிளம்பியாச்சு. எனக்கு அவங்க அப்பாவ நினைச்சு கடுப்பா இருந்தது. ஒண்ணும் உடம்பு முடியாதவர் கிடையாது. கோயில்ல ரத்திரி ஏழு மணிக்கு மேல உக்காந்து வெட்டி கதை பேசிகிட்டு இருப்பார்.
அடுத்த நாள் அக்காவுக்கு கால் பண்ணேன்
"என்னக்கா நேத்து இப்படி பண்ணிட்டீங்க! நான் என்ன பூரி சாப்பிடவா ட்ரீட் கேட்டேன். உங்க கிட்ட பேசி நாளாச்சே, பேசலாமேனு தான ட்ரீட் கேட்டேன். "இன்னொரு பூரி சாப்பிடு" அப்படிங்குறத தவிர நீங்க ஒண்ணும் பேசலியே"
"எங்கடா! எனக்கும் வருத்தம் தான். ஆனா நாம நினைச்சா மாதிரி வாழ முடியுமா? உன்ன அரசன் கூப்டு போறேன்னு சொன்னதும் வீட்ல கத்த ஆரம்பிச்சுட்டாங்க.அதான் உன்ன வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து போட்டாச்சு. நல்லா இருந்ததா??"
"அக்கா எனக்கு ஒரு மேட்டர் புரியல! சம்பாதிக்குறது நீங்க தான? அதை செலவு பண்ண உங்க அப்பாகிட்டஎதுக்கு அனுமதி எல்லாம்?"
"பத்தொன்பது வயசுல எல்லாம் இப்படித்தாண்டா பேசுவீங்க. உனக்கு கல்யாணம் ஆகி வர்றவ வேலைக்கு போனா அவ சம்பளத்த நீ புடுங்கத்தான் செய்வ!"
"என்னமோக்கா, நல்லா இருந்தா சரிதான். வீட்டுக்கு ஒரு நாள் வாங்க அக்கா, அம்மா ஏதோ பேசணும்னு சொல்லிகிட்டு இருந்தாங்க."
என்ன மேட்டர்னா முன்னாலயே சொன்னா மாதிரி எங்க அம்மாவுக்கு இந்து அக்காவ ரொம்ப பிடிக்கும். அதனால எல்.ஐ.சி ஏஜண்ட் ஒருத்தர் நல்லா இருக்கார்னு சொல்லி அவரோட ஜாதகமும் போட்டோவும் வாங்கி வெச்சிருந்தாங்க. அக்கா வந்து பாத்துட்டு அவங்களுக்கு பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க. இப்பொ அவங்க அப்பாகிட்ட இந்த மேட்டர கொண்டு போகும்போது தான் பிரச்சினை வந்துட்டு.
"நான் என்ன கையாலாகதவனா? என் பொண்ணுக்கு என்னால மாப்பிள்ளை பார்க்க முடியாதா? நீங்க எல்லாம் பார்த்து என் பொண்ணுக்கு கல்யாணம் ஆக வேன்டியது இல்லை."
அப்படினு சொல்லிட்டார். எங்கப்பா எங்கம்மா அழுவுறத பார்த்துட்டு, அவங்க மேட்டர்ல இனி தலையிட வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. உண்மையான காரணம் என்ன அப்படின்னா அவருக்கு தனக்கு மேல இருக்குற மாப்பிள்ளை வேண்டாம். எப்பவும் இவர் சொல்றத கேட்டு நடக்குற ஒருத்தன் வேணும். அதே மாதிரி ஒருத்தன பிடிக்கவும் செஞ்சார். முக்கியமான வேலை இருந்ததால அவங்கள பொண்ணு பார்க்க வரும்போது என்னால போக முடியல. எங்க அம்மா தான் போய்ட்டு வந்து ஒரே புலம்பல். "அந்த பொண்ணுக்கு இப்படியா ஆகணும்? அவங்க அம்மா இருந்தா இந்த நிலமை வருமா?"
"அம்மா என்ன ஆச்சு?"
"மாப்பிள்ள நல்லா இல்லடா?"
"என்ன நிறம் இல்லையா? அதுகெல்லாம் பாத்தா முடியுமா?"
"அப்படி இல்லடா, இந்து வ பார்த்து அவன் "30 வயசாகி இன்னும் கல்யாணமாகாம இருக்கீங்களே, யாராவது பாய் ஃபிரண்ட்ஸ் இருக்கானா? அவன் கூட எதுனா நடந்திருக்கா" அப்படினெல்லாம் கேட்டிருக்காண்டா!"
"அவங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தான?"
"சொன்னேன்! அவர் கேட்டதுல என்ன தப்பு அப்படிங்குறான் அந்த முட்டாள் பிராமணன், அதான் நான் பாதிலியெ வந்துட்டேன்."
முகமே தெரியாத அந்த மாப்பிள்ளை மேலயும், இந்து அக்கா அப்பா மேலயும் எனக்கு கொலை வெறி வந்தது.
நாங்க கல்யாணத்துக்கும் போகல. அப்புறம் நான் போன வருஷம் ஒரு இன்டெர்னெட்சென்டர்ல வேலை பாத்தேன்னு சொன்னேனில்லையா, அந்த முதலாளிக்கு நிறைய தொழில் உண்டு. கேஸ் ஏஜன்ஸி எடுத்திருந்தார். அங்க மானேஜர் வேலைக்கு எங்க சென்டர்ல வெச்சு தான் ஆளெடுத்தாங்க. உதவிக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க. அப்போ தான் இந்து அக்கா அப்பாவ ரொம்பா நாள் கழிச்சு பார்க்கிறேன். இன்டெர்வியூவுக்கு தான் வந்திருந்தார்.
எல்லாம் முடிஞ்சு கிளம்பும் போது அவர நிப்பாட்டி கேட்டேன்,
"எப்படி இருக்கீங்க? இந்து அக்கா எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க?"
"அவள பத்தி பேசாதப்பா. மும்பை போய்ட்டா, அவங்க வீட்டுக்காரர் அவள வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டார். இவா அவ புருஷன் கிட்ட சொல்லி எனக்கு செலவுக்கு பணம் அனுப்பலாமில்ல. அதுக்கு மனசு கிடையாது ராட்ச்ஸிக்கு. எனக்கு இன்னொரு இடத்துக்கு போகணும். அப்புறம் பேசலாமா?"
அடப்பாவி மனுஷா நீ இன்னும் திருந்தலயானு நினைச்சுகிட்டேன்.
இந்த மாதிரி எத்தனயோ பேர் இன்னும் இருக்காங்க. பெண்கள் வேலைக்கு போறதினால மட்டும் சுதந்திரம் அடைஞ்ச மாதிரி இனிமே பேசக்கூடாதுனு நான் முடிவு பண்ணது அப்படித்தான்.

 

மண்டல் 2, நாள் 3...


அடிதடி திருவிழாவைத் தொடர்ந்து...


சத்தம் ஓவரா இருக்கே...



சத்தியமா லத்தி சார்ஜ் நடக்கல சார்!...


என்ன பட சூட்டிங்????


எங்கள திராட்டுல விட்டுட்டீங்களெ அப்பு!!

முன்னால ஒரு வலைப்பூ நண்பர் தன் வலைப்பூவில் போராட்ட படங்கள போட்டு "போராட்டகாரர்களின் உடம்பில் சாதி தெரியும்"னு சொன்னாப்புல ஞாவகம். இந்த பய முகத்துல என்ன தெரியுதுங்கோ??
படங்கள்: www.ibnlive.com

Sunday, May 14, 2006

 

சோக்கு!

ஒரு பிரபலமான மனோதத்துவ நிபுணர் ஒரு பேட்டிக்காக அந்த தொலைகாட்சி அரங்கத்துக்கு வந்திருந்தார்.
அப்போ அவர பாத்து பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளர் கேட்டாங்க "சார்!எப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்க?"
"எதுவுமே சுலபம் இல்ல மேடம், நான் அவங்ககிட்ட எல்லாரும் பதில் சொல்லக் கூடிய ஒரு சுலபமான கேள்விய கேப்பேன், பதில் சொல்ல கஷ்டப்பட்டா நம்மளே புரிஞ்சுக்கலாம்"
"ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?"
"தாமஸ் குக், மூணு தடவை உலகத்தை சுத்தி வந்தார், அப்படி வரும்போது தன் ஒரு தடவை இறந்து போனார், அது எத்தனாவது தடவை? உங்களுக்கு தெரியுமா?"
"வேற ஏதாவது சப்ஜெக்ட்ல கேளுங்களேன், நான் வரலாறுல கொஞ்சம் வீக்"

 

பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

நம்ம வலைப்பதிவு உலகத்துல நம்ம சீனியர்ஸ் நிறைய பேரு கல்யாணம் பண்ணிகிட்டு எப்படி நல்ல பேர் வாங்கறதுன்னு தெரியாம திண்டாடிகிட்டு இருக்காங்க. அவங்களுக்காகத் தான் இந்த பதிவு.

கல்யாண வாழ்க்கைல ஆம்பிளைகளுக்கு ஒரே ஒரு லட்ச்சியம் தான் இருக்கணும். அது தான் மனைவிய சந்தோஷப்படுத்துறது.
இப்போ விளையாட்ட ஆரம்பிப்போம், அதாவது மனைவிக்கு பிடிக்குற மாதிரி நீங்க செஞ்சீங்கன்னா +ல பாயிண்ட்ஸ் கிடைக்கும், மாத்தி செஞ்சா -ல கிடைக்கும். அவங்க எதிர்பார்த்தத செஞ்சுட்டீங்கன்னா, சாரி! உங்களுக்கு பாயிண்ட் எதுவும் கிடைக்காது.

கடமைகள்:
படுக்கை தட்டி போடுறது : +1
அழகான தலையணை வைக்க மறந்தா: -
உங்க போர்வைய அந்த படுக்கைல வைச்சா : -1
காலைல உங்க மனைவிக்கு பெட்ல வெச்சு காஃபி குடுத்தா : +5
ராத்திரி ஏதோ சத்தம் கேட்டு நீங்க முழிச்சா : 0
சத்தம் கேட்டு நீங்க முழிச்சு அது ஒண்ணுமில்லைனா : 0
சத்தம் கேட்டு நீங்க முழிக்க அங்க ஏதோ இருக்குன்னா : +5
அதை நீங்க கைல கிடைச்ச குடையால அடிச்சா : +10
அது உங்க மனைவியோட செல்ல பூனையா இருந்தா : -40

பொது விழாக்களில்:
நீங்க கடைசி வரக்கும் அவங்க கூட இருந்தா: 0
நீங்க உங்க ஃப்ரெண்ட் கூட பேசிகிட்டு இருந்தா: -2
அவங்க பேரு ஸ்வேதாவா இருந்தா: -4
அவங்க நல்லா பாடுனா: -6
அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னா: -18

மனைவியின் பிறந்தநாள்:
நீங்க அவங்க பிறந்த நாளை ஞாபகம் வெச்சிருந்தா: 0
அதுக்காக அவங்களுக்கு வாழ்த்தும் பூவும் வாங்கிட்டு போனா: 0
நைட் டின்னருக்கு நீங்க ஹோட்டல் கூட்டு போனா: +1
அந்த ஹோட்டல்ல ஏ.சி இல்லைனா: -2
அவங்கள கேக்காம நீங்களே ஆர்டர் பண்ண: -3
சர்வர் அவங்க மேல சாம்பார கொட்டிட்டா: -25

உங்கள் தேகம்:
உங்களுக்கு வெளிய தெரியிற மாதிரி தொப்பை விழுந்தா: -15
அதுக்காக தினமும் உடற்பயிற்சி பண்ணா: +10
உடம்பை பிடிக்காத டிரஸ் போட ஆரம்பிச்சீங்கன்னா: -30
"அது ஒண்ணும் பிரச்சினை இல்ல; உனக்கும் இருக்கு" அப்படின்னு சொன்னா: -900

தர்மசங்கடமான கேள்வி:
இந்த டிரஸ்ல நான் குண்டா தெரியுறேனா அப்படின்னு அவங்க கேட்டு நீங்க
பதில் சொல்ல யோசிச்சீங்கன்னா: -10
எங்க அப்படினு கேட்டா: -35
வேற ஏதாவது பதில் சொன்னா: -20

தகவல் பரிமாற்றம்:
அவங்க ஒரு பிரச்சினை பத்தி உங்ககிட்ட சொன்னா
பரிதாபமான பார்வையோட கேட்டுகிட்டு இருந்தா : 0
அதே மாதிரி 30 நிமிஷம் கேட்டுகிட்டு இருந்தீங்கன்னா : +5
உங்களுக்கு அது மாதிரி நடந்தப்போ நீங்க எப்படி மீண்டு வந்தீங்கன்னு சொன்னா: +50
அவங்க சொல்றத கேக்குற மாதிரி பாவலா பண்ணிட்டு கிரிக்கெட் பாத்துட்டு "நீங்க என்ன நினைக்கிறீங்க"னு கேக்கும் போது அசடு வழிஞ்சா: -50
தொடர்ந்த் அரை மணி நேரம் டி.வி பார்க்காம அவங்க சொல்றத கேட்டா: +100
நீங்க தூங்கிட்டதுனால தான் அப்படினு அவங்களுக்கு தெரிஞ்சா: -200.

இதுதாங்க இல்லறத்தின் வெற்றி ஃபார்முலா, இதை ஃபாலோ பண்ணி நல்லா இருங்க!!
அன்பில்
பிரசன்னா

 

சனிக்கிழமை சூப்பர் அடிதடி திருவிழா!!


சனிக்கிழமை யாராவது பிரணாய் ரய் அவர்களின் செய்தி தொலைகாட்சியான NDTV பார்த்தீர்களா??
இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மும்பை மருத்துவ மாணவர்கள் மீது தடியடி நடத்தப் பட்ட காட்சிகளை ஒளிபரப்பினார்கள.
பார்க்கிறது செய்திகள் தானா இல்லை ரங் தே பசந்தி படத்தின் காட்சி்சி தானா என்பது போல் இருந்தது. போலீஸாரையும் மொத்தமாக குற்றம் சொல்லிவிட முடியாது. உண்ணாவிரத போரட்டமாக இருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து. மாணவர்கள் அணியாக புறப்பட்டு ராஜ்பவனை நோக்கி சென்ற போது தான் போலீஸார் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால் மசியாத மாணவர்கள் மீது அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தான் சர்ச்சைக்கு உரியது. மாணவர்கள் தங்கள் கோரிக்கை வைப்பதற்காக ஆளுனரை சந்திக்க செல்லும் போது கலவரம் எவ்வாறு ஏற்படப் போகிறது. தலித் தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது பிரச்சினை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை மாணவர்களுடனும் அதை செய்து இருக்கலாம்.அதை விட்டு "உன் மேல் சாராயத்தை தெளித்து நீ குடித்ததாக வழக்கு போடுவேன்" என சொல்வது நன்றாகவா இருக்கிறது. பெண்மை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் அந்த பெண் மருத்துவர்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட காடசி்சி்்சிகளை பார்த்திருக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் போலிஸாரின் தடியடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களை வைத்தே இன்னும் தென் மாவட்டங்களில் ஒருவர் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நான் இந்த பதிவ எழுதியவுடன் வரும் பின்னூட்டம் "3000 வருஷம் நாங்க வாங்கினோம் இப்பொ நீங்க வாங்குங்க" என்பதாகத் தான் இருக்கும். தங்கள் கருத்தை வலியுறுத்த ஆளுனரை சந்திக்க சென்றவர்களுக்கு இந்த கதியா?
"அத்துமீறி நுழையும்போது தான் அவர்களை தடுக்க வேண்டி வந்தது. நாங்கள் தடியடி நடத்தவில்லை" என ஒரு காவல்துறை அதிகாரி சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் தடியடி நடத்தியது கோப்பு காட்சிகளில் இருக்கிறது.
இதன் விளைவாக ஞாயிற்று கிழமை 2000 மருத்துவர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தானே தவிர வேறு யாரும் இல்லை. சென்ஸிடிவ் ஆன இந்த பிரச்சினைக்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்.
இப்போதைக்கு இது பற்றி அறிக்கை தரச் சொல்லி காவல்துறையை மகாராஷ்டிர அரசு கேட்டுள்ளது. என்று தணியும் இந்த அடக்குமுறை.

Friday, May 12, 2006

 

தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

நான் சமீபத்தில் கவிதா அவர்களின் வலைப்பூவில் இந்த விஷயத்தை பற்றி பார்த்தேன், அதன் விளைவாக எழுதிய கதை தான் இது.
--------------------------------------------------
பரத் வெளில கிளம்பிட்டான், வீடல இருக்கவே பிடிக்கல. அம்மா அக்க எல்லாரும் கவிதாவை பத்தியே பேசிகிட்டு இருக்காங்க. அடுத்தவங்கள பத்தி பேசுறதுல இவங்களுக்கு என்னதான் சந்தோஷம் இருக்கோ?
பரத் எப்பவுமே தனியா இருக்கணும்னு ஆசப் பட்டா ஊர விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருக்குற மைதானத்துக்கு போய் தான் உக்காருவான். பெருசா கூட்டம் இருக்காது. சில பசங்க கிரிக்கேட் விளையாடுவாங்க அவ்வளவுதான். எப்பவுமே பரத்துக்கு வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு. அங்க ரெண்டு இடத்துலயும் இல்லன இந்த மைதானத்துல பார்க்கலாம்.
பரத்துக்கு 37 வயசாச்சு. இன்னும் கல்யாணம் ஆகல. அதப் பத்திதான் வீட்ல பிரச்சினையே. பரத் அவங்க வீட்ல கடைசி புள்ள. அவனுக்கு முன்னாடி ரெண்டு அக்கா உண்டு. ரெண்டாவது அக்கா கால் கொஞ்சம் சரி கிடையாது. மூத்த அக்க காலேஜ் போக ஆரம்பிச்சப்போ அவங்க அப்பா தவறிட்டாங்க. அப்பொத்துல இருந்து வீட்டுக்கு ஆண் பிள்ளையா இருந்து, இதோ இப்பொ அவங்க ரெண்டு அக்காவுக்கும் கல்யாணம் முடிச்சு வெச்சுட்டான். அந்த புண்ணியத்துல அவனுக்கு வெளில 1 லட்ச ரூவா கடன் வேற.
இப்போ பிரச்சினை இதுதான். அவங்க அம்ம முந்தாநாள் சாப்பாடு டயத்துல கல்யாணப் பேச்சு எடுத்தாங்க. கவிதாவத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பரத் தீர்மானமா சொல்லிட்டான். அவங்க அம்மாவுக்கு தாங்கல. உடனே தன் பொண்ணுங்களுக்கு போன் போட்டு வரச் சொல்லிட்டாங்க. காலைல இருந்து வந்து அவங்க பங்குக்கு தொல்லை பண்ணிகிட்டு இருக்காங்க.
கவிதா! இந்த பொண்ண சுத்தி தான் பரத் வீட்ல பிரச்சினையே. நல்ல பொண்ணுதான். பரத் ஆபீஸ்லயே அஸிஸ்டெண்டா வேலை பார்க்குறா. ஆழகுன்னா கவிதா அப்படின்னு சொல்ல முடியாட்டியும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற அளவுக்கு நல்ல அழகு தான். 33 வயசாச்சு அவளுக்கும். கல்யாணம் பண்ணிக்க அழகு மட்டும் இருந்தா போதுமா? பணம் வேணுமில்லையா? பாவம் கவிதா! சின்ன வயசுலயே அம்மாவ இழந்துட்டா. பெத்தவனும் பொறுப்பில்லாம இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டான், அப்போல இருந்து அம்மா கூட பிறந்த தங்கை தான் கவிதாவ வளர்த்தாங்க. டிகிரி முடிச்சப்புறம் தன் கால்ல நிக்கணும்னு சொல்லி தனியா வெளில வந்து தங்கி இப்போ வேலை பார்த்துகிட்டு இருக்கா.
இந்த மாதிரி இருக்குற ரெண்டு பேர் லவ் பண்ணது தப்பு இல்லையே!
வீட்டுக்கு கூப்பிட்டு போய் அம்மாகிட்டயும் அறிமுகம் பண்ணி வெச்சுட்டான் பரத். அவங்களுக்கும் கவிதாவ நல்லா பிடிச்சி போச்சு. வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாம போகுதுனு நினைக்கும் போது தான் அந்த இடி வந்து விழுந்தது.

கவிதாவுக்கு மார்பக புற்றுநோய்.

இந்த பிரச்சினை எப்படி அவளுக்கு வந்தது அப்படின்னு அவளுக்கு இன்னும் தெரியல ஆனா டாக்டர் பார்த்து அதை உறுதிப் படுத்திட்டார். கவிதா படுற கஷ்டத்த பரத்தால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியல ஆனா டாக்டர் கவிதாவோட ஒரு பக்க மார்பகத்த எடுக்காம இந்த வலிய நிவர்த்தி பண்ண முடியாதுனு சொல்லிட்டார்.
அங்க இங்க பணத்துக்கு ஏற்பாடு பண்ணி ஆபரேஷன் முடிச்சுட்டான் பரத். ஆபரேஷனுக்கு அப்புறம் கவிதா தான் ரொம்ப நொடிஞ்சு போய்ட்டா. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே நம்மள பரத் கல்யாணம் பண்ணிப்பாரானு நினைச்சு நினைச்சே அவ பலவீனமாகிட்டே இருந்தா.
பரத் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த போது அவங்க அம்மா வெளில கிளம்பிகிட்டு இருந்தாங்க.
"பரத்! தரகர் ஒரு பொண்ணு ஜாதகம் குடுத்தார். நான் ஜோசியர் கிட்ட போய் பொருத்தம் பார்த்துட்டு வந்துடுறேன்."
"யாருக்கும்மா?"
"நான் என்ன ஊரானுக்கா பொருத்தம் பார்க்க போறேன். உனக்குதாண்டா."
"என்னம்மா விளையாடுறியா! நான் தான் கவிதாவ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி இருக்கேன்ல"
"அவளுக்கு தான் ஆபரேஷன் பண்ணி எடுக்க கூடாதத எடுத்துட்டாங்களே! இன்னுமா அவள கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுற?"
"எடுக்க கூடாததயா?? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா. போன வருஷம் உனக்கு கூடத்தான் யூட்ரஸ்ல கட்டினு சொல்லி அத எடுத்துட்டாங்க. அதனால் இப்போ என்ன ஆச்சு??"
"நான் அதுக்கு முன்னாடி மூணு புள்ளைங்கள பெத்துட்டேண்டா; ஆனா நீ கவிதாவ கல்யாணம் பண்ணிகிட்டா உன் குடும்ப வாழ்க்கை பாதிக்கும்டா"
"இதனால எங்க குடும்ப வாழ்க்கை சுத்தமா பாதிக்காது. நீ அதப் பத்தி கவலைப்படாத"
இந்த வாக்குவாதத்தின் முடிவுல தான் அம்மா இப்போ அவ பொண்ணுங்கள கூப்பிட்டு அனுப்பி இருக்கா. ரெண்டு அக்காவும் காலைல வந்தாச்சு. சின்ன அக்கா வந்த உடனே பொரிஞ்சு தள்ள ஆரம்பிச்சுட்டா. பெரியவ இது வரைக்கும் கம்னு தான் இருக்கா, இதுக்கப்புறம் என்ன சொல்லப் போறான்னு தெரியல.
மறுபடியும் இப்ப வீட்டுக்கு போய் உக்காந்த உடனே சின்ன அக்கா ஆரம்பிச்சுட்டா.
"முடிவா இப்போ என்ன தாண்டா சொல்ற?"
"நான் என் முடிவ எப்பவோ சொல்லியாச்சு."
"அவகிட்ட ரொக்கமா ஏதாவது வாங்க போறியா?"
"எதுக்கு? அதுவும் அவகிட்ட ஏது பணம்?"
"என்னடா பேசுற! குறை உள்ள பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற, பணமும் வாங்க மாட்டேன் அப்படின்ன எப்படி??"
"என்னை என்ன உன் புருஷன் மாதிரின்னு நினைச்சியா? சபைல காசு வேண்டானு சொல்லி, வீட்ல வந்து பைக் வேணும்னு பல் இளிச்சானே"
அவ்வளவுதான் "பாரும்மா என்ன சொல்றான் அவரப் பத்தி"னு அம்மாகிட்ட ஒப்பாரி வைக்க ஆரம்ப்பிச்சுட்டா!
மூத்த அக்கா கிட்ட போய் பரத், "நீ ஏன் சும்மா இருக்க! நீயும் உன் பங்குக்கு திட்டேன்."
அக்கா " டேய், நீ எல்லாத்தையும் யோசிக்கணும்டா. நான் ஒரு நாள் தலைவலிக்குது இன்னைக்கு வேணாம்னு சொன்னாலும் அவர் ஒரு வாரத்துக்கு மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு உக்காந்து இருப்பார்டா. ஆம்பளைங்க எல்லாம் ஒரே மாதிரி தான். சொல்லுடா உனக்கு 37 வயசாச்சு, ஒரு பொண்ண நீ பார்த்த உடனே அல்லது 3 நிமிஷத்துகுள்ள அவ கழுத்துக்கு கீழ உன் கண் போறதில்ல?அவ கட்டிபிடிக்கும் போது கூட உனக்கு ஒரு வெறுமை தெரியும்டா."
"உடம்பு இதத்துக்காக கட்டி பிடிச்சாதாங்கா வெறுமை தெரியும். நான் மனசுக்கு இதம் வேணும்னு சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க குறை உள்ளவ கூட நான் என் மீதி நாட்கள கழிக்க கூடாது அவ்வளவுதான"
ஆமாம் என்பது போல் எல்லாரும் பார்த்தாங்க.
"உடம்புல ஒரு பகுதி இழந்துட்டா அப்படின்ன உடனே ஒரு நல்ல பொண்ன குடும்பத்துல ஏத்துக்க மனசில குறை இருக்குற உங்களால முடியாது. உங்க கருத்து படியே நான் இனிமே உங்க கூட இருக்க மாட்டேன். நானும் என் கவிதாவும் தனிய்யா வாழ்ந்துக்குறோம்."
விடு விடு என வெளியே சென்ற பரத்தை பார்த்து என்ன சொல்லி தடுப்பது என தெரியாமல் விழித்தனர் மூவரும்.

Thursday, May 11, 2006

 

இந்துவின் உயிர் மலிவானதா??

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். அதை உங்களுக்கு அப்படியே நான் தருகிறேன். என்னை யாரும் ஒரு மதத்தை சார்ந்தவன் எனக் கூறுவதை நான் விரும்பவில்லை.
____________________________________________________________________________
பொறியாளர் கே.சூரியநாராயணன் தாலிபான் தீவிரவாதிகளால்் படுகொலை செய்யப் பட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியா அரசாங்கத்தின் நம்பகத்தன்மை இதன் மூலம் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியா தன் பிரஜைகள் வாழும் வெளிநாடுகளில் முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்திட வேண்டும்.

தீவிரவாதிகளால் கடத்திக் கொண்டு செல்லப்பட்டு நம் சகோதரர் ஒருவர் இறப்பது இது முதன் முறை அல்ல. முதலில் டிசம்பர் 2005ல் மணியப்பன் ராமன் குட்டி என்ற கேரள சகோதரர், ஆப்கானிஸ்தானத்தில் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டார். அவரது கொலைக்கு முன் அரசுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தும் நமது மத்திய அரசும், கேரள அரசும், ஈ.அகமது (கேரள எம்.பி) மற்றும் மாநில வெளியுறவுத் துறை மந்திரி, இது பற்றிக் கண்டு கொள்ளவில்லை.பின் அவர் ஒரு ரோடு ஓரத்தில் கொலயுண்டு கிடந்ததைத் தான் நம்மால் பார்க்க முடிந்தது.

இரண்டாவதாக சிஜோ ஜோஸ் என்கின்ற கேரள நண்பர். இவர் அமெரிக்காவின் கைதியாக ஈராக் சிறையில் இருந்தவர். கேரள அரசு இவரது விடுதலையைக் கோரியது. மத்திய அரசும் தலையிட்டதால் சிஜோ பத்திரமாக நாடு திரும்பினார்.

மூன்றாவதாக நௌஷத் எனப்படும் நண்பர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர், ஒரு கண்ணை இழக்க வேண்டும் என துபாய் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். சக தொழிலாளி ஒருவரின் ஒரு கண் பார்வை பறி போனதிற்கு இவர் காரணமாக இருந்ததால் இந்த தண்டனை எனக் கூறப்பட்டது. *சவுதி அரேபியாவின் சட்டம் ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்பதில் உறுதியாக் இருந்தது.கேரள அரசும், ஈ.அகமது அவர்களும் நௌஷத்திற்காக கண்ணீர் வடித்தார்கள். இது பற்றி பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

நான்காவதாக, சாம்குட்டி என்பவர் ஈராக் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டார். கேரள அரசும் மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பெயரில் அவர் பத்திரமாக மீட்கப் பட்டார்.

இப்பொழுது நான் எங்கு வருகிறேன் என உங்களுக்கு புரிந்திருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பேர், மணியப்பன் ராமன் குட்டி, சிஜோ ஜோஸ், நௌஷத் மற்றும் சாம் குட்டி. இதில இறந்து போனவர் மணியப்பன் ராமன் குட்டி மட்டுமே. மற்ற அனைவரும் நடவடிக்கைகள் மூலம் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். சாம் குட்டி விவகாரத்தை எடுத்துக் கோண்டோமேயானால், அவர் கடத்தப்பட்ட உடனே இந்திய அரசு ஈராக்கிய அரசுடன் தொடர்பு கொண்டு சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் ஜான் ஜோசப் ஈராக் சென்றார். இந்த முயற்சி பலனளித்தது, சாம் குட்டி பத்திரமாக வீடு திரும்பினார்.

சகோதரர் நௌஷத் அவர்களுக்காக ராஜ்ய சபா உறுப்பினர்கள் முதல் கேரளத்திலிருந்து பலரும் பிரதமர் இந்த விவகாரத்தில் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மீண்டும் இப்பொழுது சூரியநாராயணன் அவர்கள் இறந்து விட்டார்கள். இதற்கு இந்த மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது? இந்து மக்கள் உயிர் அவ்வளவு மலிவானதா? நீங்கள் சிறுபான்மையினருக்கு தோள் குடுங்கள், ஆனால் ஒரு இஸ்லாமிய நண்பரின் கண்ணை விட எந்த விதத்தில் இந்த இந்து மனிதனின் உயிர் மலிவானது??

மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
_________________________________________________________________________
*-ஆதாரமில்லாத தகவல்.

Tuesday, May 09, 2006

 

பெண்ணாசை பொல்லாதது... பாகம் 3

நான் ஆப்பிள வித்த கதையும், வம்பா ஃபோன்ல ஏமாந்த கதையும் உங்களுக்கு தெரியும்.
படிக்கலென்னா கீழ இருக்கு சுட்டி.
நான் போன வருஷம் ஒரு பிரௌசிங் சென்டரல வேலை பார்த்தேன். அது ஒரு காம்ப்ளெக்ஸ்ல கடைசி கடை. நான் வேல பார்த்த கடைக்கு முன்னாடி ஒரு டெய்லர் கடை உண்டு. அதுல டெய்லரா இருந்தது அண்ணன் தம்பி ரெண்டு பேரு. நான் அவங்கள பெரியப்பா, சித்தப்பானு தான் கூப்பிடுவேன். ஆவங்களும் என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. இதுல பெரியப்பா ரொம்ப விவரமானவர். 4 பாஷை தெரியும். நல்லா பேசுவார். சித்தப்பா நம்மள மாதிரி தான். நக்கல் மன்னன்.
எப்பவுமே பிப்ரவரி, மார்ச் மாசத்துல காலேஜ் பிராஜக்ட் அதிகமா வரும். நாங்களும் கஷ்டப்பட்டு வேல பார்த்து குடுப்போம். அப்போ ஒரு வாட்டி வந்தது தான் நம்ம "ஷர்மிளா". நம்ம நிலவு நண்பர் படித்த காலேஜ் தான். பேர் சொல்ல யோசனையா இருக்கு. நான் வழக்கம் போல வேல பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு ஜான்ஸ் காலேஜ் பையன் பயங்கர பிரச்சின பண்ணிகிட்டு இருந்தான்.
அப்போ தான் இந்த பொண்னு அவங்க சித்தப்பா கூட வந்திருந்தாங்க.
"இங்க பிராஜக்ட் பண்ணி குடுப்பீங்களா??"
நான் ஏற்கனவே கடுப்பில இருந்தேனா, "அதான் வெளில போட்ருக்கில்ல? அப்புறம் என்ன கேள்வி?"
"ப்ளீஸ்! கொஞ்சம் அவசரம்"
"என்ன அவசரம்னாலும் இன்னைக்கு மதியம் தான். என்னிக்கு பிராஜக்ட் சப்மிஷன்?"
"ஏப்ரல் 13த்"
"அப்புறம் என்ன? இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்கு. சாயங்காலம் வாங்க!"
"இல்ல! இது கொஞ்சம் நான் பக்கத்துல இருந்து பாக்கணும்"
சரின்னு சொல்லி உக்காந்து இருந்த பையனோட பிராஜக்ட் ப்ரிண்ட் அவுட் எடுத்து குடுத்து அனுப்புறதுக்கு 2 மணி ஆயிச்சு. அதுகுள்ள அவங்க சித்தப்பன் வந்த வரத்து.
"இந்த தமிழ் பாதுகாப்பு இயக்கத்த பத்தி என்ன நினைக்குறீங்க தம்பி??
"நான் தெலுங்கு சார்"
"நான் அந்த இயக்கத்துல முக்கியமான பொறுப்புல இருக்கேன். இன்னைக்கு விஜயா கார்டன்ஸ்ல் மீட்டிங். நீங்க கொஞ்சம் சீக்கிரம் முடிச்சா நல்லா இருக்கும்"
"அப்படியா! சரி சார் நீங்க இந்த ப்ராஜக்ட் பேப்பர குடுத்துட்டு போங்க! நான் பார்த்து வைக்கிறேன்."
அப்போ தான் எனக்கு அவங்க குடுத்தாங்க ஷாக்.
ஒரு பேப்பர்ல ஒரு நூறு ஆங்கில கவிஞர்கள் பேரு. 1790ல இருந்து அப் டு டேட். எல்லார் எழுதின புக்ஸ் வேணும்னு எழுதி குடுத்தாங்க.
"மேடம் நீங்க தப்பா புரின்சுகிட்டீங்க! நீங்க பிராஜக்ட் ப்ரிப்பேர் பண்ணி குடுத்தா நாங்க டைப் பண்ணி தருவோம். அவ்ளொதான். நான் உக்காந்து எல்லாரோட புக்கையும் தேட்றதெல்லாம் நடக்காத காரியம்!"
"பிளீஸ்! எங்க கேட்டாலும் இப்படித்தான் சொல்றாங்க! கொஞ்சம் பண்ணி குடுங்க"
"பண்ணலாம் ஆனா ஒரு கண்டிஷன், நான் பிரௌஸ் பண்றதுக்கும் சேர்த்து தான் பில் போடுவேன், சரியா??"
சரின்னு சொல்லிட்டு அவங்க கிளம்பி போய்ட்டாங்க. இருந்த டென்ஷன்ல அவங்க மூஞ்சியெல்லாம் பார்க்கல! அந்த சித்தப்பா மூஞ்சி மட்டும் நினைவுல இருந்தது. எப்படியும் அவர் வருவார்ல, அப்போ பிராஜக்ட் பத்தி பாத்துக்கலாம்னு இருந்துட்டேன்.
மதியம் சாப்பிட நேரமானதும் டெய்லர் சித்தப்பா என்ன தேடி வந்துட்டார். "என்ன பிரஸ்! சாப்பிடல?"
"சாப்பிடணும் சித்தப்பா! இன்னைக்கு ஒரு பிராஜக்ட். சரி பண்ணி குடுக்கணும்"
"ஆமா நான் கூட பார்த்தேன், பிரபாகரன் வந்திருந்தாரே?"
"பேரெல்லாம் தெரியாது! ஏதோ தமிழ் பாதுகாப்பு அப்படி இப்படின்னார்"
"இவனத் தெரியாத உனக்கு. நம்ம ஊர்ல இருக்குற மெஜாரிட்டி ஜாதி அவன். வக்கீல். அவங்க கட்டபஞ்சாயத்துகெல்லாம் இவந்தான் முன்னால நிப்பான். சீக்கிரம் கழட்டி விட்டு காச வாங்கி போடு. இல்லன்னா பிரச்சினை தான்."
இது என்னடா இது புது சோதனை! சரி அந்த பொண்ணுக்கு முதல்ல முடிச்சிடுவோம். அப்படின்னு அந்த பிராஜக்ட எடுத்து வெச்சு உக்காந்தா! கடுப்பாயிடுச்சு. முதல் 3 கவிஞர்கள தாண்ட்ரதுகுள்ள 30 பக்கத்துக்கு மேல போயிடுச்சு. எனக்கு அவன் காசு தருவானா தரமாட்டானானு யோசனை.
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே மணி ஏழு ஆயிட்டுது. எனக்கு ஒரு பழக்கம். சாயங்காலம் பன்னீர் சோடா குடிச்சாத் தான் எனக்கு அடுத்து வேல ஓடும். சரினு சொல்லை கல்லாவுல இருந்து கொஞ்சம் ரூவா எடுத்துட்டு கீழ போய் குடிச்சிட்டு மேல வந்தா நமக்கு முன்னாடி ஒரு பொண்ணு படி ஏறிகிட்டு இருந்தா, சரி சித்தப்பா கடைக்கு சுடி தைக்க வந்த பொண்ணு போல இருக்குனு நினைச்சு விட்டுட்டேன்.
அதாவது எனக்கு சித்தப்பாவுக்கும் ஒரு டீலிங். அவர் கடைக்கு அழகான ஒரு பொண்ணு வந்தா, தண்ணி வேணும்னு சொல்லி அனுப்புவார். நான் உடனே அவர் கடைக்கு போய் அவங்க முன்னாடி நிப்பேன். சிலது கண்டுக்கும், சிலது கண்டுக்காது. அதனால அந்த பொண்ணு சித்தப்பா கடைக்கு போனா நமக்கு தகவல் வரும்னு சொல்லி மெதுவா போனேன். நான் இல்லாதப்ப பாலா சென்டர பார்த்துப்பான். அந்த பொண்ணு பாலா கிட்ட விசாரிச்சு இருக்கு, காலைல பிராஜக்ட் குடுத்தேன், அவர் எங்க அப்படின்னு. அதுக்குள்ள நானே போய்ட்டேன்.
"வாங்க! உங்க பிரஜக்ட் ரொம்ப கஷ்டமா இருக்குங்க! உங்க சித்தப்ப ரூவா தரேன்னு சொன்னார். ஆனா இது ஒரு 400 பக்கத்துக்கு மேல போகும் போல இருக்கு. கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்"
"ஒண்ணும் பிரச்சினை இல்லை!"
என்னடா இது புது குரலா இருக்கேனு பார்த்தா இந்த பொண்ணோட அப்பா. இவரு பேரும் பிரபாகரனாம்
அதெப்படி அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி பேர் வெச்சாங்க?? நமக்கெதுக்கு.
"சரி! இதுவரைக்கும் நீங்க கலெக்ட் பண்ண மேட்டர் பார்க்கலாமா??" அப்படின்னு சொல்லி அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து உக்காந்துகிட்டா.
நானும் எந்த கவிஞர் பத்தி எல்லாம் எடுத்தேனோ அதெல்லாம் காமிச்சேன்.
அந்த பொண்ணுக்கும் ரொம்ப சந்தோஷம். இப்படி போச்சுன்னா4 நாள்ல வேலை முடிச்சிடலாம்னு சொன்னா,எல்லாம் பீட்டர் தான். தப்பித் தவறி ரெண்டு மூணு வார்த்தை தான் தமிழ்ல வந்தது.
"ரொம்ப தாகமா இருக்கு தண்ணி கிடைக்குமா" அந்த பொண்ணு கேட்டா.
நான் எப்பவுமே தண்ணி எடுத்து வைக்க மாட்டேன். சித்தப்பா கடைல தான் போய் குடிக்குறது.
பாலாவ அனுப்பி தண்ணி வேணும்னு சொல்லி வாங்கிட்டு வாடானு அனுப்பி வெச்சேன்.
அவரு அத கோட் வேர்ட்னு நினைச்சுகிட்டு வந்துட்டார்.
'சித்தப்பா! தண்ணி எங்க??"
"என்ன விளையாடுறியா? தண்ணி வேணும்னா நம்ம பாஷைல என்ன அர்த்தம்?"
அதுக்குள்ள நிலமை புரிஞ்சி பாலா போய் தண்ணி கொண்டு வந்துட்டான்.
அந்த பொண்ணுன் அவங்க அப்பாவும் போனதுக்கப்புறம் சித்தப்பா சொன்னார்.
"ஏல! பிள்ள நச்னு இருக்கே!எதுவுன் ஐடியா போட்ருக்கியா??"
"நீங்க வேற சித்தப்பா, ஓனருக்கு தெரிஞ்ச பிரச்சினை ஆயிடும்"
"அப்படி இல்லடே! நீ ஒண்ணு பண்ணு நாளைக்கு அவ வரும்போது நல்லா பேச்சு குடு!"
"எங்க!! அவங்க டாடி தான் கூடவே உக்காந்திருப்பார்ல"
"அதான் பிரச்சினையா!! நான் பார்த்துக்குறேன் விடு"
அடுத்த நாளைக்கு சும்மா நச்சுனு போய் உக்காந்தாச்சு.
சனிக்கிழமைங்றதால அந்த பொண்ணும் மதியம் 3 மணிகெல்லாம் வந்திடுச்சு. சித்தப்பா கடைக்கு வந்து அந்த பொண்ணோட டாடிய என்னமோ சொல்லி கூப்டு போய்ட்டார்.
இன்னைக்கும் அந்த பொண்ணு செம பீட்டர்.
நான் "மேடம், நீங்க இங்லீஷ் லிட்ரெச்சரா இருக்கலாம், அதுக்காக இங்லீஷ்லயேவா பேசுரது! எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். அப்படின்னு கப்ஸா வுட்டேன்
அவளும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தமிழ் பேசிகிட்டு இருந்தா, இந்த டைம் பாத்து என் பெங்களூர் பிரண்ட் ஒருத்தர் கால் பண்ணிட்டார். அவர்கிட்ட இங்லீஷ்ல பேசியாக வேண்டிய நிலைமை. நான் பேச ஆரம்பிச்சதுல இருந்து அவ பார்த்துகிட்டே இருந்தா, பேசி முடிச்சதும் "யாரோ எனக்கு இங்லீஷ் தெரியாதுனு சொன்ன மாதிரி இருந்தது??" அப்படின்னா
"ஆமாங்க! உங்களுக்கும் தமிழ் தெரியும் எனக்கும் தெரியும் அப்புறம் எதுக்கு நாம இங்லீஷ்ல பேசணும்?"
"என் முழு பேர் தெரியுமா உங்களுக்கு??"
"சொல்லுங்க"
"ஷர்மிளா ப்ரிய வர்த்தனே"
"சிங்களம்??இங்க என்ன பண்றீங்க?"
"ஏன் நாங்க எல்லாம் இந்தியாவுல இருக்க கூடாதா?"
"அப்படி இல்ல"
"எங்க அப்பா இலங்கைல பிஸினஸ் பண்றேன்னு சொல்லி, எல்லா சொத்தையும் அழிச்சுட்டார், நேத்து வந்தார்ல எங்க சித்தப்பா, அவர் தான் இப்பொ என்னயும் என் தங்கச்சியயும் படிக்க வெச்சுகிட்டு இருக்காங்க. அம்மா சுடிதார் தைச்சு குடுப்பாங்க. ஏதோ வாழ்க்கை போய்கிட்டிருக்கு"
"சாரிங்க"
"எதுக்குங்க?"
அவங்க அப்பா வர்றதுக்குள்ள நிறைய பேசினோம். நண்பர்கள அறிமுகப்படுத்தினேன். எல்லார்கிட்டயும் நல்ல பேசினாங்க. இப்பொ எனக்கு அவங்க மேல ஒரு பரிதாபம் வந்தது. முதல்ல இவங்க பிராஜக்ட முடிக்கணும்.
5.30 மணிக்கு அவங்க அப்பா வந்து "என்னம்மா முடிஞ்சுதா??"னு கேட்டார்
"முடியலப்பா! இன்னும் 2 நாள் ஆகும் போல இருக்கு"
"ஏங்க! நான் வேணும்னா முடிச்சு வைக்கிறேன்! நீங்க ஏன் அலையுறீங்க?"
"ஏன்! நான் வர்றதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா??"
"சே சே! அப்படி எல்லாம் இல்லை"
"அப்போ திங்கள் சாயங்காலம் பார்க்கலாம்"
அவ கிளம்பி கீழ போகும்போது பார்த்தேன், அவங்க அப்பா கூட ஸ்கூட்டர்ல பின்னாடி உக்காந்து சென்டெர பார்த்துகிட்டே போனா.
எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. திங்ககிழம மதியம் சரியா 12.30 மணிக்கு ஒரு கால்.
"நான் தான் ஷர்மி (!) பேசுறேன். பிராஜக்ட் எந்த அளவு இருக்கு"
"அதான் ஈவினிங் வரப் போறீங்கள்ல, அப்புறம் என்ன இப்போவே கால்?"
"ஏன் நாங்க பண்ணக் கூடாதா??"
"உங்களுக்கு இல்லாத உரிமையா??"
பின்னாடி நிறய பொண்ணுங்க நின்னு கத்திகிட்டு இருந்தா மாதிரி சத்தம், சரிதான் பொண்ணு பிரண்ட்ஸ் மத்தில மாஸ் காமிக்குது.
"ஏங்க! சிக்னல் சரி இல்ல, ஒரு 5 நிமிஷம் கழிச்சு பேசுறீங்களா?"
"சரி"
உடனே சித்தப்பாவ கூப்டு அந்த பொண்ணு காலேஜ்கு கிளம்பியாச்சு. அவங்க காலேஜ் முன்னாடி ஒரு ஒரு ரூபா காயின் பூத் இருக்கு. அங்க இருந்து தான் பண்ணணும்.
கரெக்டா அங்க போய் இறங்கவும் கால் வருது. நான் அந்த கடைக்கு நேர் எதிர்ல நின்னுகிட்டு பேசினேன்.
அந்த பொண்ண சுத்தி ஒரு 4 பொண்ணுங்க நின்னுகிட்டு இருந்தாங்க, எல்லாம் இவ என்கிட்ட பேச பேச கிண்டல் பண்ணிகிட்டு இருந்தாங்க.
"என்னங்க! உங்க நட்பெல்லாம் பயங்கர கிண்டல் போல இருக்கு?"
"ஆசதான்! நான் தனியாதான் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன்"
"நம்பிட்டேன்"
"நம்பலையா?"
"அதிருக்கட்டும்! இந்த சுடிதார் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு"
"தாங்க்ஸ், ஐயோ எங்க இருக்கீங்க??"
"உங்க பின்னாடிதான்"
நானும் சித்தப்பாவும் நின்னுகிட்டு இருந்தோம்! கூட இருந்த பொண்ணுங்க எல்லாம் ஓடிடுச்சுங்க.
இவ வழிஞ்ச வழிசல பார்க்கணுமே.
3 நாள்ல பிராஜக்ட் நல்லா முடிஞ்சது, அவள அதுக்கப்புறம் நான் பார்க்கவே இல்லை.
எனக்கு ஒரு மாதிரி இருந்தது, சித்தப்பா பார்த்துட்டார்.
"என்னடே அந்த பிள்ளைகிட்ட பேசணும் போல இருக்கா??"
"ஆமா! ஆனா வம்பு வந்துடக் கூடாது"
"அதுக்குத்தான நம்ம ரோஸி இருக்கா, நீ கவலப்படாத"
ரோஸி! எங்க காம்ப்ளெக்ஸ்ல இருந்த பி.சி.ஓல வேல பார்த்தா. காலேஜ் பசங்க பொண்ணுங்க கிட்ட பேசணும்னா இவகிட்ட தான் வந்து நிப்பாங்க. அழகா கூப்டு குடுப்பா. நல்ல புத்திசாலி, எவ்வளவு பிரச்சினை ஆன சூழ்நிலை ஆனாலும் சமாளிச்சிடுவா.
அங்க தான் இப்போ போனோம்.
"அப்போ நீங்களும் மாட்டிகிட்டீங்களா"
"பேசாம போனப் போடு"
"சரி சரி"
"ஹலோ! ஷர்மி இருக்காங்களா, நான் அவங்க பிரண்ட், நிர்மலா, எப்படி இருக்கீங்க ஆன்டி?"
"...."
"உங்க ஆளு லைன்ல வரும், பேசுங்க!"
நானும் ஆசையாத் தான் காத்துகிட்டு இருந்தேன். அவங்க அம்மாதான் திரும்ப வந்தாங்க.
நான் அவசரப்பட்டு "நான் தாங்க! பிரசன்னா"
"யாருடா நீ? என் பொண்ணுக்கு போன் பண்ற?" அப்படி இப்படினு காச்சி எடுத்துட்டாங்க.
எனக்கு என்ன பண்ணனு தெரியல. போன வெச்சுட்டேன்.
ஒரு 3 நாள் கழிச்சு, சர்மிளா கால் பண்ணாங்க்.
"உங்ககிட்ட் பேசணும், கொஞ்சம் விஜயா கார்டன்ஸ் வரீங்களா"
உடனே கிளம்பி போனேன். அங்க அந்த பொண்ணு உக்காந்து இருந்தது. கூட அவங்க தங்கச்சி வந்து இருந்தாங்க.
"நீங்க ஏன் கால் பண்ணீங்க?"
"இல்லங்க! பிராஜக்ட் முடிஞ்சு போச்சு, எப்போ பார்க்க முடியும்னு தெரியல, அதான்"
"எங்க வீட்ல இதெல்லாம் பிரச்சினை ஆகும், இனி இந்த மாதிரி பண்ணாதீங்க" அப்படின்னு சொல்லிட்டு எந்திரிச்சி போய்ட்டாங்க.
எனக்கு என்ன பேசன்னு தெரியல, தப்பு என மேல தான, ஒரு பொண்ணு சிரிச்சி பேசிட்டாங்க அப்படின்னு உடனே மூவ் பண்ணது எவ்வளவு சீப் பான நடவடிக்கை.
அவங்க மட்டும் தான் போனாங்க. அவங்க தங்கை உக்காந்து இருந்தாங்க
"பிரசன்னா!"
"நான் வேணும்னு பண்ணல, சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க"
"இல்ல, நீங்க கால் பண்ணது எங்க சித்தப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு, அவர் எங்க அக்காவ போட்டு அடி அடின்னு அடிச்சுட்டார். "
"என்னது! உங்க அப்பா என்ன பார்த்துகிட்டு இருந்தாரா?"
"என்ன பண்ண முடியும், இப்போதைக்கு நாங்க அவர் நிழல்ல தான் இருக்கோம், அதான் அக்கா அந்த மாதிரி பேசிட்டா"
"பரவாயில்லீங்க! நான் தான் என்ன ஏதுனு தெரிஞ்சுக்காம, வீணா கால் பண்ணி பிரச்சினை பண்ணிட்டேன். எனக்கு பிடிச்சிருக்குன்னா உங்க அக்காவுக்கும் என்ன பிடிச்சிருக்கணும்னு என்ன இருக்கு?"
"இல்ல அவளுக்கும் உங்கள பிடிச்சிருந்து"
------------------------------------------------------------------------------------------------
இப்படித்தாங்க நான் பெண்ணாசைல பண்ண ஒரு விஷயம் எனக்கு மட்டுமில்லாம அவங்களுக்கும் வேதனை தர்றதா ஆகிடுச்சு. அதனால தான் சொல்றேன், பெண்ணாசை பொல்லாதது.
பெண்ணாசை பொல்லாதது - 1
பெண்ணாசை பொல்லாதது - 2

Monday, May 08, 2006

 

பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!-என் கருத்து..

சமீபத்தில வெளி வந்த ரங் தே பசந்தி என்கிற படத்தை பற்றிய விமர்சன பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது பார்வைகள் விசாலமாகத் தான் இருக்கிறது. படத்தை இருமுறை ரசித்து பார்த்தவன் என்கின்ற நானும் எனது கருத்துக்கள் சிலவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.
கதைச்சுருக்கம்..

லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.


புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.


ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.


இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.


இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.


ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.


அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.


ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.


ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.


இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.

படத்தில் வெளிநாட்டில் இருந்து வருகின்ற பெண்ணான சூ, தன்னுடய தாத்தா அவர்கள் எழுதிய தினக்குறிப்பை ஆதாரமாக கொண்டு படம் எடுக்க முனைகிறாள். அவள் படத்திற்கு யாரும் ஆதரவு தராத பட்சத்தில் தன் இந்திய தோழியின் உதவியுடன் தான் படம் எடுக்கிறாள். அதனால் அவள் தன் சமகால அரசியல் நிகழ்வுகளான ஈராக் பிரச்சினை பற்றி அங்கே பேச வேண்டிய அவசியம் அவளுக்கில்லை. கோலங்கள் சீரியலில் டியன்னென் சதுக்கம் பற்றி வந்தால் எவ்வளவு வித்தியாசமாக படுமோ அதே அளவு வித்தியாசமாக பட்டிருக்கும்.

மேலும் நண்பர் படத்தின் ஸ்பான்ஸர் கோக் எனக் கூறுகிறார். அது பற்றி தெளிவாக தெரியாததால் விடுவோம். கோக் என்கிற அமெரிக்க கம்பேனி பல விஷயங்களை தங்கள் மார்க்கெட்டிங் உத்திக்காக பயன்படுத்துகிறது. மேலும் இந்த இளைஞர்கள் திருந்திய பின் வரும் காட்சிகள்்சிகளில் ஒன்றில் கூட கோக்கை பார்த்ததாக எனக்கு நினைவில்லை, நண்பர்கள் கவனித்திருந்தால் தெரிவிக்கலாம். ஆகவே, இந்திய தேச பக்தியில் கோக்கும் ஓர் அங்கம் என தெரிவிக்கும் எண்னம் டைரக்டர்க்கு எல்லை என நினைக்கிறேன்.

மிக் 21 ரக விமானங்கள் வாங்கியதில் ஊழல் என படத்தில் காண்பிக்கப் படுகிறது. இதில் ஏன் அமெரிக்க எஃப் 16 விமானங்களை பற்றி சொல்லவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அதாவது, நியூ படத்தில் எஸ்.ஜே.சூரியா ஒரு டயலாக் வைத்திருப்பார். "இதுத்தான் கதை, பிடிக்கலேன்னா இப்பொவே எந்திரிச்சி போயிடு! பக்கத்துல உக்காந்து படம் பார்கிறவனயும் கெடுக்காத" அப்படின்னு. நான் என்ன சொல்ல வர்றேன்னா, படத்தோட முடிச்சு அங்க தான் இருக்கு, அத விமசனம் பண்ரது, யொசிக்க வேண்டிய விஷயம்.

>>>மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள்.<<<<

அப்பொழுதைய நிலமையும் இப்பொழுது உள்ள நிலைமையும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறது என உணர்த்த தான், பகத் சிங் வரலாறு வருகிறது என நினைக்கிறேன். அந்த கால இளைஞர்கள் எவ்வாறு அடக்குமுறையை எதிர் கொண்டார்கள் எனக் கூறவும் அந்த காட்சிகள் பயன்பட்டது என்பது என் கருத்து.

படத்தில் பல காட்சிகள் ரசிக்க கூடியனவாக இருக்கும் பொழுது சில காட்சிகளை வைத்துக் கொண்டு இவ்வாறு பேசுவது எந்த அளவுக்கு சரி என எனக்கு தெரியவில்லை. தாங்கள் சொல்ல விரும்பியதை சொன்ன பிறகு தங்கள் ஆயுதங்களை குப்பைத் தொட்டியில் போடும் காட்சிகல் பலத்த கரகோஷங்களை பெருகின்றன. இது போல படங்கள் மக்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறர்கள் என்பதை வைத்துத் தான் படம் வெற்றி அடையும். ஹே ராம் படத்தில் காந்தியை கொன்றவர்களை சப்போர்ட் செய்து படம் எடுத்திருக்கிறர்கள் என சொல்லியே படம் பார்க்க செல்லாதவர்கள் நாம். அதனால் மைண்ட் செட் என்பது இந்த படங்களை பொறுத்தவரை மிகவும் முக்கியம்.

மற்ற படி ரங் தே பசந்தி படம் ரசிக்க கூடிய படம் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை என்படு என் கருத்து.


Thursday, May 04, 2006

 

மரணக்கடி

என்ன இன்னைக்கு!! சே மறுபடியும் ஒரு ஒண்ணுமில்லாத நாள். வேற என்ன சொல்ல முடியும். முக்கியமான ஒண்ணும் நடக்கல, முக்கியமான யாரையும் பார்க்கல.என் வாழ்க்கை புத்தகத்துல கிழிக்கப் பட வேண்டிய ஒரு பக்கம்.
சொந்த ஊர விட்டு சென்னைக்கு பிழைக்க வந்த 2 வருஷம் ஆச்சு. சம்பளம் நல்லா தான் குடுக்குறாங்க. ஆனா மனசு சொந்த ஊரயும் அம்மா அப்பா தம்பி எல்லாரயும் தேடத்தான் செய்யுது.
இத எல்லாம் இப்போ 23சி அயனாவரம் போய் சேர்ற வரைக்கும் தான் யோசிக்க வேண்டி இருக்கும். அங்க போய் இறங்கின உடனே மத்த கவலைகள் என்ன ஆட்கொள்ளுது.
க்ரீரீரீச்.....
சுத்தம் இந்த டிரைவர் யாரையோ இடிச்சுட்டான். நம்ம கலாச்சாரப்படி ஜன்னல் வழியா வெளிய எட்டிப் பார்த்தேன். செம அடி. பாவம் பையன் 20 வயசு தான் இருக்கும். ஸ்பாட் டெட்.
பார்த்துகிட்டு இருக்கும் போது என் காதுல ஒரு சூடான மூச்சு. "என்ன சார் ஆச்சு?" ஆண்டவா பெண்கள் குரலுக்கு இப்படி மயக்குற சக்தி உண்டா. திரும்பி பார்த்தேன். நல்ல அழகான பொண்ணு. நாகரீகமா டிரஸ் பண்ணி இருந்தா. அவ கேட்டதுக்கு எதோ ஒரு பதில சொல்லிட்டு கம்னு இருந்துட்டேன்.
ஆனா ஏன் இந்த பொண்ணு என்ன இப்படி டிஸ்டர்ப் பண்றா. மேல கம்பில அவ கையும் என் கையும் உரசும் போது ஏன் எனக்கு என்னமோ பண்ணுது??
திரும்பி பார்த்தேன். அவளும் என்ன பார்த்து சிரிக்குற மாதிரி எனக்கு தோணிச்சு. நான் கைய நவுட்டுனா, அவளும் என் கை பின்னாலயே அவ கைய கொண்டு வர்றா.
என்ன படிக்கட்டு பக்கம் போறா?? இறங்க வேண்டிய ஸ்டாப் வந்து விட்டுருக்குமோ? ஏன் இறங்கும் போது என்ன அப்படி பார்த்துட்டு போறா??

நானும் பின்னாலயே இறங்கினேன். என்ன அவ பார்த்திருக்கணும்.
நான் எதோ தப்பான எண்ணத்துல அவள ஃபலோ பண்றேன்னு நினைச்சு திடீர்னு ரோடு கிராஸ் பண்ணா. அவ்ளொதான் "வீல்"னு ஒரு சத்தம். ரத்தம் ரோடு பூரா ஓடுது. "நல்ல டீசண்டான ஃபேமிலி போல இருக்கே", "இவ்வளவு அழகான பொண்ணுக்கா இப்படி ஒரு முடிவு?" ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி வருத்தப்ப்டுறாங்க. நான் சத்தமில்லாம அழுதுகிட்டு இருக்கேன்.

"என்ன சார் ஆச்சு" பார்த்துகிட்டு இருக்கும் போதே அந்த குரல், அந்த மூச்சு. என் பின்னாடி நின்னு சிரிக்குறா.
அவ்வளவு தான் நான் கத்திகிட்டே ஓட ஆரம்பிச்சுட்டேன்.
"--த்தா கண்ணில்ல?"னு திட்டின தாண்டி, பாத்து சார்னு கத்துனவனத் தாண்டி ஓடிட்டேன்.
"சார்! பாத்து லாரி!!!!"

Sorry It was too late...
-------------------------------
பி.கு: என் இந்த கதய பார்த்துட்டு நீங்க என்ன சொல்லுவீங்கன்றத நான் தலைப்பாவே வெச்சுட்டேன். அதத் தவிர வேற எதுனா சொல்லுங்களேன்.

 

எனக்கு பிடித்த பாடல்


சில பேர் பதிவுல பாடல் வரிகள் எல்லாம் போட்ருந்தாங்க. அதுல என்ன மேட்டர்னா எனக்கும் இத மாதிரி பண்ணணும்னு ஆச வந்துடுச்சு. திருட்டு பயலே படத்துல எனக்கு பிடிச்ச பாட்டு இது.

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் வந்து பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்.
(தைய தா)

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிலையானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே அது மிகையில்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்
(தைய தா)
பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போல அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கு அணைக்கிறேன்; உடல் நொறுங்க ரசிக்கிறேன்
அணு அனுவை உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்.

Wednesday, May 03, 2006

 
பாலா!! காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை பார்த்த பிறகு, இந்த 12ம் வகுப்பு படிக்குற பையனுக்கு காதலிக்க ஆசை வர்றது தப்பு இல்லனு நினைக்குறேன்.

அவனுக்கு தெரியும் அவங்க அப்பா அம்மா ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அதனால அவன் அவங்க ஜாதியிலயே பொண்ணு தேட(!) ஆரம்பிச்சான்.

இந்த உயர்ந்த நோக்கத்துகாக அவனுக்கு பிடிக்காத பல விஷயங்கள அவன் செய்ய வேண்டி இருந்தது. முக்கியமானது அவன் சொந்தக்காரங்க கல்யாணத்துல கலந்துக்க வேண்டியிருந்தது. இப்படி கஷ்டமான பல கல்யாணங்களுக்கு பின் அவன் ஒரு பொண்ண பார்த்தான். அவதான் திவ்யா.

பொண்ணு பார்த்தாச்சு; எப்படி அப்ரோச் பண்றது. இதுக்குதான் ஒரு தங்கை வேணும். தங்கைகிட்ட ஒரு வாழ்த்து அட்டைல "உன்னிடம் பேச வேண்டும். சந்திக்கலாமா??"

தங்கையும் அவள பார்த்து திரும்பி வரும்போது "உன்ன அவ ஈவினிங் 6 மணிக்கு மீட் பண்ணுவாளாம். அவ கெமிஸ்ட்ரி ட்யூஷன் முன்னாடி உன்ன மீட் பண்றேன்னு சொன்னா. என்னயும் வர சொல்லி இருக்கா"

நல்லா டிரஸ் பண்ணி 6 மணிக்கு போனா; அவ கால்ல கஞ்சி கொட்டுன மாதிரி நின்னுகிட்டு "ஏதோ சொல்லணும்னு சொன்னியே, சீக்கிரம் சொல்லு" அப்படின்னா.

"நான் உன்ன விரும்புறேன்னு நினைக்குறேன். நீ அதப் பத்தி என்ன சொல்ற?"

"விளயாடுறியா! நீ எனக்கு பிரபோஸ் பண்ண 14த் ஆள்.இந்த மாசத்துல. நீ ஆசப்பட்டா நாம ஃப்ரண்ட்ஸா இருப்போம்"

"எனக்கு உயிர குடுக்குற அளவுக்கு நண்பர்கள் இருக்காங்க. எனக்கு தேவ ஒரு பார்ட்னர். நீ விரும்பலேன்ன தட்ஸ் ஓகே."

அவன் வீட்டுக்கு வந்து பயங்கரமா அழுதான். அவன் தங்கைக்கு அவன பார்க்க பாவமா இருந்தது. 2 மாசம் கழிச்சு ஒரு சண்டே ஈவினிங், காலிங் பெல் சத்தம் கேட்டுச்சு பாலா வீட்ல.

பாலா தான் கதவ திறந்தான், திவ்யா வாசல்ல நின்னுகிட்டிருந்தா. அவன் தங்கைய கூப்டு சொல்லிட்டு, வெளில கிளம்பிட்டான்.

சாதாரண நல விசாரிப்புகளுக்கு அப்புறம் திவ்யா
"சும்மா இந்த பக்கமா வந்தேன் அதான் உங்கள பார்த்துட்டு போகலாம்னு.. உங்க அண்ணன் எங்க போனார்??"

"இன்னைக்கு சண்டே இல்ல! அதான் ஃபுட்பால் விளையாட போயிருக்கான். அவன் நல்ல விளையாடுவான்."

"நல்ல வேளை! உங்க அண்ணனும் கிரிக்கெட் பின்னாடி போய்டுவானோன்னு நினைச்சேன்.இது என்னோட மொபைல் நம்பர் அண்ணன் வந்ததும் கால் பண்ண சொல்லு. வேற ஒண்ணுமில்ல, அன்னிக்கு நான் பேசினதுக்கு சாரி கேக்கணும்"

வீட்டுக்கு வந்ததும் தங்கைகிட்ட எல்லா விஷயத்தையும் கேட்டான்.

"என்னது, ஃபுட் பாலா, ரூல்ஸ் கூட எனக்கு தெரியாதேடி!"

"அது எனக்கு தெரியும், உனக்கு தெரியும், அவளுக்கு தெரியுமா?? அவ என்ன கேக்கணும்னு ஆச பட்டாளோ அதத் தான் நான் சொன்னேன். நீ முத்ல்ல கால் பண்ணு."

பாலா அவசர அவசரமா கால் பண்ணான்.

"ஹலோ திவ்யா! நீ எதோ பேசணும்னு சொன்னியாமே"

அதுக்கு அப்புறம் அவங்க ஃபோன் பில் 200 மடங்கு ஆனத பத்தி நான் சொல்லணுமா என்ன.
-------------------------
பதிவுக்கு தலைப்பு வைக்கல!! உங்களுக்கு பிடிச்ச தலைப்ப நீங்க பின்னூட்டதுல சொல்லலாம்.

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]